Saturday, September 24, 2011

leo


Points to remember: Jupiter or Guru is in your 9th House since May 8, 2011 and Saturn will occupy 3rd House from Nov 14th 2011.
Saturn or Shani dev will move from the 2nd House(last leg of Sade Sati) to thevictorious 3rd house in your natal chart.  You are getting relieved from the 7 ½ years sani period. The 3rd House represents the House of Communications. Higher education and childhood environment. Communication. Happiness. Intelligence. Achievements. Siblings. Neighborhood matters. Short, local travel and transportation’s.
Time to celebrate as you are now you are coming out of the hard clutches of Sani Bhagawan. Days ahead are the pleasant ones.
Guru who was in 8th house (Ashtama Guru, [Ayul Sthanam]-”Bhaava Naasha, Arogya Jeeva-भाव  नासह, आरोग्य, जीव“),  has come to 9th place (Bhagya Sthanam)which will bring profits and rewards. Also, long pending Subha Kariyam(Pleasant, happy work) is in the offing. Many good things are on the cards. Now Guru/Jupiter is in your 9th Place (Bhagya Sthanam), a place known for high inflow of income, harmony in family, robust health, promotions & increments, Favorable transfers, accumulation of wealth, excellence in education.  Business will flourish and profits will increase 
Thumbs upThumbs upAdvise: Simha-Simham-Chingam Rasi- Celebrate! You deserve it. You are going to grow beyond your expectations
Here are some key points to be noted for you during the Saturn transit:
  • Businesses will start thriving and turn out to be exceptionally profitable.
  • Professionals will get their lone awaited promotion or appraisal.
  • Financial benefits will be exceptional in some cases.
  • Social status will improve by and large and family relationships will also find considerable improvement. Strained relationships will restore to normalcy.
  • Success comes from new undertakings or enterprises. This is particularly good time to profit from activities relating to poultry farming or agriculture.
  • You may also consider buying land or fixed property during this time.
  • If you are unemployed, you may hear opportunity knocking at your door or get some lucrative job offers. Those employed may get a promotion, increase in authority, or a pay rise.
  • Attention is given to your intelligence, ability and effort and you are likely to climb up the social ladder. There is a good chance of getting assistance with your work. You will succeed in any kind of discussions and be able to put your point across much more easily than before.
  • You will feel a spring in your footstep denoting good health and vitality of spirit.
  • Any previous ailments will vanish, bringing you comfort and happiness.
  • Home life too will be nourishing and full of conjugal bliss. Your spouse will be doting and more loving than ever.
  • Your siblings and children will treat you well and be very helpful. Your enemies will be defeated and good luck and fortune will bless you during this time.
  • For some, travel may also be on the cards.
  • For detailed Remedies and pariharams, we will update this post shortly.
Pls note: These are broad outlines. The holy scriptures have mentioned these as the outcome of the transit. For more detailed personalized analysis based on your Dasha and Bhutki, read below.

dhanur


Points to remember: Jupiter or Guru is in your 5th House since May 8, 2011 and Saturn will occupy 11th House from Nov 14th 2011.
When Sani Bhagawan enters the 11th house, he gives favorable results. the 11th House represents the House of Friendship. Friends and acquaintances of like-minded attitudes. Groups, clubs and societies. Higher associations. Benefits and fortunes from career. One’s hopes and wishes. This transit on- for the Dhanus Rasi  people with Jupiter in 5th,  the positive effect is unbelievable as Saturn is entering the favorable house of Libra which is already an exalted house for him.
Now Guru has come to your 5th house. (Purva Punya/Puthra Bhakyam Sthanam). You will enjoy good flow of income, with good family harmony and solidarity. You will enjoy a  good robust health, unlike last year, accumulation of wealth and name and fame. Medical expenses will comes down. Woman will accumulate jewelery even in this period of high gold prices. Long pending Subha Kariyam is on the cards.
Thumbs upThumbs upAdvise: New heights are in the vicinity. Just enjoy as you have a delightful year ahead of you.
Here are some key points to be noted for you during the Saturn transit:
  • Saturn in the eleventh house from your Moon sign brings in good times.
  • Financially this is a very good time for you. You are likely to make unexpected profit during this period of time from whatever business or profession you are in. This financial boon will bring happiness and many opportunities for further gain.
  • You are also likely to acquire significant property during this time.
  • Endeavors of any kind will succeed and give the desired results.
  • Business and professions will thrive to bring in extra turn over and extra profits. You will have additional resources which will prompt you to acquire new fixed assets.
  • You will buy jewelery and ornaments.
  • People who are enimical towards you will become friends and helps you achieve your targets in business and profession.
  • A foreign opportunity is awaiting you, which will give you additional savings and resources.
  • Long pending marriages and child birth will happen.
  • Some will have some kind of a romantic experience. This is time when you can plan and implement your long term projects or business ventures.
  • New efforts will bring in good results and appreciable profits. In the overall, this will be a period of growth, prosperity and happiness.
  • Those in businesses relating to building materials, coal, leather etc. may look forward to even greater profits. If employed, you are very likely to be promoted to a position of higher authority.
  • This is also an auspicious time to pursue higher study. You are likely to be more aggressive in your approach to your activity. Socially, you find contentment.
  • Your respect, status and honour in the society are likely to be elevated. Some of you may be honored with a prestigious or unique award.
  • For those wishing it, marriage is on the cards at this time. If single, you will experience pleasant relationships with the opposite sex.
  • Your spouse and children will be a source of happiness.
  • You will also acquire objects that your family desires.
  • Health will be fine.
  • For detailed Remedies and Pariharams, we will update this post shortly.
Pls note: These are broad outlines. The holy scriptures have mentioned these as the outcome of the transit. For more detailed personalized analysis based on your Dasha and Bhutki, read below.

Sunday, September 4, 2011

கிரகங்களின் சிறப்பான பலன்கள்


சூரியன்: லக்னத்திற்கு 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் பரிதி எனப்படும் சூரியன் நின்றால் அந்த 
ஜாதகனின் வீடுதெய்வத்தால் காக்கப்படும். அத்தகையோனுக்கு நல்ல வாகன யோகமும் சத்
விஷயங்களில் ஞானமும் அறிவு கூர்மையும் உண்டாகும். அரசாங்கத்தால் ஆதரவும் புதல்வர்களுக்கு 
யோகமும் ஏற்படும். அஞ்சா நெஞ்சனாக பகைவர்களை ஒழித்து வீரனாக விளங்குவான். அதே 
சமயத்தில் 2, 3, 4, 5, 7 ஆகிய இடங்களில் சூரியன் நின்றால் அந்த ஜாதகன் சொற்ப அளவே பலன் 
பெறுவான். மேலும் வியாதிகண்ணோய் முதலியன உண்டாகும். ஈனத் தொழில் செய்பவர்களின் 
விரோதமும் ஏற்படும்.
சந்திரன்: நன்மை தரும் சந்திரன் 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களிலும் 5, 9 எனும் திரிகோணஸ்தானங்களிலும் தன ஸ்தானமான 2ம் இடத்திலும் லாப ஸ்தானமான 11ம் 
இடத்திலும் நிற்பாரேயாகில் நிறைந்த வருமானமும் நல்ல வீடும் விளை நிலமும் பசு
 மாடுகளும் சேர்ந்து வளமான வாழ்க்கை அமையும். இந்த ஜாதகனுக்கு மிகவும் சுகமும் 
சொந்த நாட்டிலும் பிற நாட்டிலும் அரசாங்க ஆதாயம் அதிகம் உண்டாகும். அதே சமயத்தில்
 பாவக் கிரகங்களின் பார்வை சந்திரனுக்கு இல்லாமல் இருப்பது முக்கியம். வெற்றி கொள்ளும்
 சந்திரன்3, 5, 7, 11 ஆகிய இடங்களில் தனித்து நிற்க அத்தகைய ஜாதகன் பெரும் செல்வம் 
படைத்தவன். மந்திரங்கள் அறிந்து முறைப்படி பிரயோகித்து வெற்றி காண்பான். வாக்குவாதம்
 செய்வதில் வல்லவன். மருத்துவம் படித்து அத்துறையில் சிறந்து விளங்குவான். நல்ல வருமானம்
 பெற்று அவன் குடும்பம் விருத்தி அடையும். பகைவர்கள் அழிவார்கள். ஏனைய மற்ற இடங்களில் 
சந்திரனால் பலன் இல்லை. எனினும் மற்ற கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வைக்கேற்றவாறு
 பலன்கள் அமையும்.
குரு: வியாழன் எனப்படும் குரு பகவான் 4, 7, 10, 1, 5, 9 மற்றும் 2, 11 ஆகிய இடங்களில்
இருந்தால் அந்தஜாதகனுக்கு பிரபலமான யோகங்கள் உண்டாகும். லட்சுமி கடாட்சம் பரிபூரணமாக 
இருக்கும். பொன்பொருள் அதிகம் சேரும். மேலும் 2ம் இடத்தின் அதிபதி குருவைப் பார்க்க இவன் 
கீழ் பலர் வேலை செய்ய பல குடும்பங்களை ஆதரிப்பான். குரு 8ம் இடத்தில் நின்றால் மனைவியிடம் 
பகை கொண்டவனாகவும் விரோதிகளால் கண்டம் அடைபவனாகவும் இருப்பான். பொருள் விரயம் 
ஆகும். பல வகைகளில் அவமானம் வந்து சேரும். 6ம் இடத்தில் குரு இருந்தால் அரசாங்க வகைகளில்
 பகை உண்டாகும். வியாதியால் துன்பம் ஏற்படும். 12ல் குரு நின்றால் பண விரயங்கள் உண்டாகும். 
இருப்பினும் அந்த வீடு குருவின் அட்சி வீடாக இருந்தால் எந்த துன்பமும் அண்டாது என்பதாம்.
சுக்கிரன்: அசுரர்களில் குருவான சுக்கிரன் ஜாதகனின் கேந்திர கோண ஸ்தானங்களில் நிற்க
 மிகவும் நல்ல பலன்களைத் தருவார். பாவக் கிரகங்கள் சுக்கிரனைப் பார்த்த போதிலும்
 கவலை அடையவேண்டாம். அவன் பங்களா போன்ற சொத்துக்களும் பொன்முத்து ஆபரணங்களும் 
பெற்று சுகம் அடைவான். சுக்கிரன் 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் பலமுடன் இருந்தால் அந்த
ஜாதகனுக்கு ஆயுள் குறைவு ஏற்படும். மேலும் வியாதிவாத நோய் இவை உண்டாகும். வீடுபொன்
பொருள் நஷ்டம் ஏற்படும். அதே சமயத்தில் சுக்கிரன் 12ல் இருந்து அது ஆட்சி வீடானால்
 இறைவன் அருளால் நல்ல யோகமும் சயன சுகமும் உண்டாகும்இது திண்ணம்.



சனி: சூரியனின் குமாரனான மந்தன் எனப்படும் சனி பகவான் 3, 6, 9, 11 ஆகிய இடங்களில் 
நிற்க ஆயுள் தீர்க்கம்உண்டாகும். நிறைய பொருள் சேரும். சனி 9ல் இருக்க பிதுர் தோஷம்
 உண்டு. விரோதிகளை வெற்றி காண்பான். அரசு மூலம் லாபம் அடைந்து பேரும் புகழும் விளங்க
வாழ்வான். அதிக லாபம் உண்டாகும். சனி 10ல் இருந்தாலும் நற்பலன்களையே தருவான். வாகன
 யோகம் உண்டாகும். செய்யும் தொழிலில் முன்னேறி புகழ் அடைவான். சனி பகவான் 11ல்
 இருக்க தேவகுருவான குரு பகவான் 7ம் இடத்திலும் பாம்பான ராகு 4ம் இடத்திலும் செவ்வாய்,
சூரியன் இவர்கள் 3ம் இடத்திலும் நிற்க சனி ஜாதகனுக்கு சில தொல்லைகள் கொடுத்தாலும் 
ஆயுள் தீர்க்கமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


செவ்வாய்: செவ்வாய் கிரகமானது 1, 2, 6, 10, 11 ஆகிய இடங்களில் அமர்ந்து இருந்தால் 
அந்த ஜாதகனுக்கு நல்ல பூமி வாய்த்தலும் பெரும் பொருள் சேர்க்கையும் நல்ல விளை நிலமும்
 பொன் ஆபரணமும் கிட்டும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகி பல குடும்பங்களை காக்கும்
 திறமை பெற்று பகைவர்களை வெற்றி கொள்ளும் வீரனாவான் என அறிக. சேய் என்று 
அழைக்கப்படும் செவ்வாய் 3, 6, 7, 8, 9, 12 ஆகிய இடங்களில் நின்றால் இருக்கும் நிலமும்
 பொருளும் விரயமாகும். குடும்பத்தில் பிரிவு உண்டாகும். திருமணம் முதலிய சுப காரியங்கள் 
தள்ளிப் போகும். திருமணம் முடிவதில் கால தாமதம் ஆகும்.

ராசி (சந்திரன்) அஷ்டமச் சனி நிலை

ராசி (சந்திரன்) அஷ்டமச் சனி நிலை

சந்திரனுக்கு 8ல் சனி

1. மேஷம் விருச்சிகம் நலம் 10% பாதிப்பு 90%
2. ரிஷபம் தனுசு நலம் 50% பாதிப்பு 50%
3. மிதுனம் மகரம் நலம் 70% பாதிப்பு 30%
4. கடகம் கும்பம் நலம் 50% பாதிப்பு 50%
5. சிம்மம் மீனம் நலம் 30% பாதிப்பு 70%
6. கன்னி மேஷம் நலம் 30% பாதிப்பு 70%
7. துலாம் ரிஷபம் நலம் 80% பாதிப்பு 20%
8. விருச்சிகம் மிதுனம் நலம் 40% பாதிப்பு 60%
9. தனுசு கடகம் நலம் 30% பாதிப்பு 70%
10. மகரம் சிம்மம் நலம் 50% பாதிப்பு 50%
11. கும்பம் கன்னி நலம் 70% பாதிப்பு 30%12. மீனம் துலாம் நலம் 70% பாதிப்பு 30%

Thursday, August 18, 2011

சூரியன் - தான் இருக்கும் இடத்தில் இருந்து 7ஆம் வீட்டை மட்டும் பார்க்கும்.
சந்திரன் - அதுவும் அப்படித்தான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 7ஆம் வீட்டை மட்டும் பார்க்கும்.
புதன் & சுக்கிரன் ஆகிய இருவருக்கும் 7ஆம் பார்வை மட்டுமே
செவ்வாய் - தான் இருக்கும் இடத்தில் இருந்து 4, 7 & 8 ஆம் வீடுகளைப் பார்க்கும்
குரு - தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7 & 9 ஆம் வீடுகளைப் பார்க்கும்
சனி - தான் இருக்கும் இடத்தில் இருந்து 3, 7 & 10 ஆம் வீடுகளைப் பார்க்கும்
ராகு & கேது ஆகிய இரு கோள்களுக்கும் சொந்த வீடும் கிடையாது பார்வையும் கிடையாது. ஆகவே இந்தப் பார்வை ஆட்டத்தில் அவர்கள் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார்கள்.

பார்வையால் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. சுபக்கிரகங்கள் பார்க்கும்போது நன்மைகள் உண்டு. தீய அல்லது பாபக் கிரகங்கள் பார்க்கும்போது தீமைகளே அதிகமாக இருக்கும். அல்லது நன்மைகள் வெகுவாகக் குறைந்துவிடும்.

உங்கள் வீட்டிற்கு எதிர் வீடு காவல்துறையில் உள்ள மிகப் பெரிய அதிகாரியின் வீடு என்றால், இயற்கையாகவே உங்கள் வீட்டிற்கும் சேர்த்து பாதுகாப்பு இருக்கும். அதே நேரத்தில், எதிர் வீட்டுக்காரன் பேட்டை தாதா என்றால் உங்கள் வீட்டின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்

7ஆம் வீட்டில் சனி இருந்தால் அது லக்கினத்தைப் பார்க்கும்
4ஆம் வீட்டில் சந்திரன் இருந்தால் அது 10ஆம் வீட்டைப் பார்க்கும்.

4ஆம் வீட்டில் அமர்ந்த சந்திரனால், ஜாதகனின் 4ஆம் வீடும் நன்மை பெறும், அத்துடன் 10ஆம் வீடும் நன்மையடையும்.

பொதுவாக சனி அமர்ந்த வீடும் நன்மையடையாது. பார்வை பெறும் வீடும் நன்மையளிக்காது. 4ல் சனி அமர்ந்தால் சுகக்கேடு. 2ல் சனி அமர்ந்தால் கையில் காசு தங்காது. அத்துடன் சிலர் குடும்ப வாழ்க்கையைத் துறந்து விட்டு, பொருள் ஈட்டும் முகமாகத் தூர தேசங்கள் வாழ நேரிடும்.

சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது, அது அமிர்தயோக நாளாகிவிடும்.

எந்தக் கிழமைகளும் எந்த நட்சத்திரங்களும் அப்படிச் சேரும்போது, அது உண்டாகும்?

கீழே கொடுத்துள்ளேன்.

ஞாயிற்றுக்கிழமை: உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, திருவோணம், பூசம், மூலம்
திங்கட்கிழமை: சுவாதி, புனர்பூசம்,ரோகிணி, மிருகசீரிடம்
செவ்வாய்க் கிழமை: உத்திரம், மூலம்
புதன் கிழமை: உத்திராடம், பூரம், பூராடம், பூரட்டாதி, உத்திரம்
வியாழக்கிழமை: சுவாதி, மூலம் 
வெள்ளிக்கிழமை: அஸ்விணி, பூசம், ஹஸ்தம், மூலம்
சனிக்கிழமை: மகம், சதயம், கார்த்திகை, சுவாதி


மேற்கண்ட கிழமைகளில், குறிப்பிட்டுள்ள இந்த நட்சத்திரங்கள் சேர்ந்துவந்தால் அன்று அமிர்தயோகம்.

அமிர்தயோகத்தன்று சுப காரியங்களைச் செய்யலாம். நமக்குச் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பணிகளைச் செய்யலாம்.

சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகிவிடும்.

எந்தக் கிழமைகளும் எந்த நட்சத்திரங்களும் அப்படிச் சேரும்போது, அது உண்டாகும்?

கீழே கொடுத்துள்ளேன்.

ஞாயிற்றுக்கிழமை: அவிட்டம், கார்த்திகை
திங்கட்கிழ்மை: அஸ்விணி, உத்திராடம்
செவ்வாய்க் கிழ்மை: பூரட்டாதி, ரோகிணி, விசாகம், திருவாதிரை
புதன் கிழமை: ஹஸ்தம்
வியாழக்கிழமை: சதயம், கார்த்திகை, அனுஷம், உத்திரம், திருவாதிரை
வெள்ளிக்கிழமை: ரொகிணி, மகம்,திருவோணம், ஆயில்யம்
சனிக்கிழமை: ஆயில்யம், பூரட்டாதி, சித்திரை, உத்திரம்


மேற்கண்ட கிழமைகளில், குறிப்பிட்டுள்ள இந்த நட்சத்திரங்கள் சேர்ந்துவந்தால் அன்று மரணயோகம்.

மரணயோகத்தன்று சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.

செய்தால் என்ன ஆகும்?

ஊற்றிக்கொண்டு விடும்!

அன்று செய்யும் முக்கியமான செயல்கள் விருத்தி அடையாது. வளர்ச்சி யடையாது.

உதாரணத்திற்கு, மரணயோகத்தன்று நீங்கள் ஒரு இடத்தை வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நிலம் உங்களிடம் தங்காது. கையை விட்டுப் போய்விடும். அல்லது சிக்கல் மிகுந்த இடமாகி உங்கள் பணம்  மாட்டிக் கொண்டுவிடும். 

மரண யோகத்தன்று ஒருவர் புதிதாக ஒரு வியாபாரத்தைத் தொடங்கினால், அது அபிவிருத்தியாகாது. வியாபாரம் செழிப்படையாது.

சரி, அன்றையத் தேதியில், திருமணம் செய்து கொண்டால், மண வாழ்க்கை கசப்பில் முடிந்துவிடும். பிரிவில் முடிந்துவிடலாம்.

பணி மாற்றத்தில் வேறு ஒரு ஊருக்குச் செல்கிறீர்கள். சென்று அங்கு பணியில் சேரும் நாள், மரண யோக நாளாக இருந்தால், அங்கே நீங்கள் பல பிரச்சினை களைச் சந்திக்க நேரிடும்.

மரணயோகத்தன்று யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். கொடுத்தால் அது வராக் கடனாகிவிடும். வங்கி மொழியில் சொன்னால் NPA (non performing asset) ஆகிவிடும்

ஆகவே நற் செயல்களுக்கு மரணயோக நாட்களைத் தவிர்ப்பது நல்லது.

சரி, அன்று என்னதான் செய்யலாம்?

வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்த நாளைப் பயன்படுத்தலாம். கடன் தீர்ந்துவிடும். அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன் ஏற்படாது.

இதுபோல முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கும் செயல்களை, அன்று செய்யலாம்.

Thursday, August 11, 2011

மீண்டும் பிறவா நிலை அடைய வைக்கும் அற்புத கோவில்


மீண்டும் பிறவா நிலை அடைய வைக்கும் அற்புத கோவில்



மீண்டும் பிறவாத நிலையை அடைவதே உயிர்களின் குறிக்கோள் என்பர் பெரியோர். த்தகைய பேரின்ப நிலையை அருளும் தலமாக விளங்குகிறது தேப்பெருமாநல்லூர். ராண காலத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை என்று சொல்லப் படுகிறது.http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQyNssCknsgf-zU9qBThyE4fnY5F0vF8gKmyf08WvmKOm-54DQ9
மிகவும் பழமையானது இத்திருக்கோவில். ஆகம விதிக்கு முற்றிலும் மாற்றாக அமைக் கப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர்.

""யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர் கள்தான் இக்கோவிலுக்கு வரமுடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும்'' என்று சொல்கிறார் ஆலய குருக்கள் சதீஷ் சிவாச்சாரியார். சுவாமியைத் தரிசித்ததும், பக்தர்களுக்குப் பிரசாதமாக வில்வதளத்துடன் ருத்ராட்சம் ஒன்றும் கொடுக்கிறார்கள்.

மகா மண்டபத்திற்குள் தெற்குத் திசை நோக்கி தனிச் சந்நிதியில் வேதாந்த நாயகி அருள்புரிகிறாள். இந்த அம்பாள் வலது காலை எடுத்து வைத்து முன்னோக்கி வருவது போன்ற தோற்றத்தில் உள்ளாள். அம்பாள் நம்முடன் பேசுவதுபோல் உதடுகள் குவிந்த நிலையில் உள்ளன. இது வேறெங்கும் காணக்கிட்டாத காட்சி. நமக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்கும் பாவனையோடு இருப்பதாகச் சொல்கின்றனர். இந்த அன்னையின் உபதேசக் கருணைப் பார்வை யால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். இந்த அம்பாளுக்கு வெள்ளிக் கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

அம்பாள் சந்நிதிக்கு அருகில் சாந்த பைரவர் என்று சிறிய உருவிலும் மகா பைரவர் என்று சுமார் ஐந்தடி உயரத்தில் பெரிய உருவிலும் ஒரே சந்நிதியில் இரண்டு பைரவர்கள் காட்சி தருகின்றனர்.

பைரவர் சந்நிதிக்குப் பக்கத்தில் சனி பகவான் காக்கை வாகனத்துடன், இடுப்புக்குக் கீழே இடக்கையை வைத்தபடி ஒய்யாரமாக மேற்கு நோக்கி இறைவனைப் பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். இவர் ஏன் ஒய்யாரமாக நிற்கிறார்?

சனி பகவான் இறைவனைப் பிடிப்பதற்குரிய நேரம் நெருங்கி விட்டதால் அம்பாளிடம், ""நாளை காலை ஏழேகால் நாழிகைப்பொழுது ஈசனைப் பிடிக்கப் போகிறேன்'' என்று சொன்னார். அதைக் கேட்டுக் கோபம் கொண்டாள் அம்பாள்.

எப்படியும் ஈஸ்வரனை ஏழேகால் நாழிகை பிடித்து தன் வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மறுநாள், ஈஸ்வரனைப் பிடிக்க சனிபகவான் மெதுவாக வந்தார். அப்போது அன்னை, ஈஸ்வரனைப் பக்கத்திலிருந்த அரச மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளச் சொன்னாள். ஈஸ்வரனும் அப்படியே செய்தார்.

அங்கு வந்த சனி பகவான் அம்பாள் அரச மரத்தடியில் நிற்பதைப் பார்த்து ஈஸ்வரன் எங்கே இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார். அதனால் அரச மரத்தைப் பார்த்த வண்ணம் அங்கேயே நின்றுவிட்டார். சனி பகவான் சொன்ன ஏழேகால் நாழிகை கழிந்ததும் அங்கிருந்து மெதுவாக நகர ஆரம்பித்தார் சனி பகவான். அப்போது அன்னை சனி பகவானைப் பார்த்து,

""என்ன, ஈஸ்வரனைப் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச் செல்கிறாயா?'' என்று கேட்டாள். சனி பகவான், ""நான் வந்த வேலை வெற்றியுடன் முடிந்தது. ஈஸ்வரனே அரச மரத்தின் பின்புறம் ஒளிந்திருக்க நேர்ந்த தல்லவா? அந்த நேரமே நான் அவரைப் பிடித்த நேரம்'' என்று ஆணவத்துடன் சொன்னதுடன், சற்று ஒய்யாரமாக இடுப்பில் இடக்கை வைத்த வண்ணம் அம்பாள்முன் நின்றார். சனி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரன் அரச மரத்தின் பின்புறத்திலிருந்து கோபத்தோடு வெளிப்பட்டு, மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனி பகவானை இரண்டாகக் கிழித்தார்.

இரண்டாகக் கிழிக்கப்பட்ட சனி பகவான் சிவபெருமானை நோக்கி, ""ஈஸ்வரா! தாங்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படிதான் நான் இயங்குகிறேன். நான் இல்லையேல் பூலோகவாசிகள் தங்கள் விருப்பப்படி மிகுந்த ஆணவத்துடன் செயல்படுவர். இதனால் உலகில் ஆணவக்காரர்களும் அக்கிரமம் செய்பவர்களும் பெருகி விடுவார்கள். எனவே, ஆணவத்தோடு நான் நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்து, மீண்டும் முன்புபோல் செயல்பட அருள்புரிய வேண்டும்'' என்று வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இரு கூறான உடலை ஒன்று சேர்த்து அருள்புரிந்தார். இவ்வாறு ஆணவம் நீங்கிய இந்த சனி பகவானை வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

மகாமந்திர பைரவராக உக்கிரமாகக் காட்சி தந்த ஈஸ்வரனுக்கு, நான்கு வேதங்களைச் சொல்லி அவர் கோபத் தைத் தணித்தாள் அம்பிகை. அம்பா ளின் அருள் பார்வையால் கோபம் தணிந்து மீண்டும் சாந்த சொரூபி யானார் ஈஸ்வரன். இதனால் அம்பாள் வேதாந்த நாயகி என்று பெயர் பெற்றாள். அந்த வேளையில் நாரதர் அங்கு வந்தார். ""ஈஸ்வரா! நீங்கள் சனி பகவானை இரண்டாகக் கிழித்த பாவம் உங்களைப் பிடித்துக் கொண்டது. இனிமேல் நீங்கள் விஸ்வரூபம் எடுக்க இயலாது. எனவே நீங்கள் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை ஒருசேர தரிசித் தால் அந்தப் பாவம் நீங்கும்'' என்று கூறினார்.

உடனே ஈஸ்வரன் பன்னிரண்டு ஜோதிர்லிங்க பரமேஸ்வரர்களையும் இத்திருத்தலத்திற்கு வரவழைத்தார்.

இதனைக் கண்ட நாரதர், ""இவர்களில் ஒருவர் இங்கு வந்தாலும் எத்தகைய பாவங்களும் சாபங்களும் தோஷங்களும் நீங்கிவிடும். அப்படி யிருக்க பன்னிரண்டு பேரும் வந்து இறங்கியதால் இது மிக அதிசயமான க்ஷேத்திரம்!'' என்று போற்றிப் புகழ்ந்தார்.

""பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களும் தரிசனம் கொடுத்த புண்ணிய தலம் இதுவென்பதால், ஏழேழு ஜென்மங் களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி இல்லாதவர்களும்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும்'' என்று நாரதர் சொன்னார். அதில் ஒரு ஜோதிர் லிங்கமான காசி விஸ்வநாதர், விசாலாட்சியுடன் அங்கேயே தங்கிவிட்டார். அந்தச் சந்நிதி மகாமண்டபத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ளது.

இத்தல இறைவனின் மகிமையை அறிந்த அகத்திய மாமுனிவர் ஸ்ரீவிசுவநாத சுவாமியைத் தரிசிக்க வந்தார். அகத்தியர் வருவதை அறிந்த சிவபெருமான், அகத்தி யருக்கு மறுபிறவி உண்டு என்பதால் அவரை அங்கு வராமல் தடுக்க எண்ணினார். அதனால் மகரந்த மகரிஷியை அழைத்து அகத்தியரின் வருகையைத் தடுக்குமாறு கூறினார். இறைவனின் கட்டளையை ஏற்ற மகரந்த மகரிஷி, அகத்தியர் மேற்கொண்டு நடக்க முடியாமல், மகரந்தப் பூக்களாக மாறி வழியை அடைத்து விட்டார். வழி மறித்த மகரந்த மலர் களை ஞான திருஷ்டியில் பார்த்த அகத்தியர், அந்த மலர்களில் மகரந்த மகரிஷி இருப்பதை அறிந்து, ""மகரிஷியே! நான் சுவாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்; வழிவிடுங்கள்'' என்றார்.

மகரந்த மகரிஷி வழிவிட மறுக்கவே, கோபமடைந்த அகத்தியர், ""பூ போன்று இருக்கும் உன் முகம் யாழி முகமாக மாறட்டும்'' என்று சாபமிட்டார். அகத்தியரின் சாபம் பலிக்க, யாழி முகத்துடன் காட்சி தந்த மகரிஷி, ""மாமுனிவரே, இதனை நான் என் விருப்பப்படி செய்யவில்லை. இறைவன் கட்டளைப்படிதான் தங்களை வழி மறித்தேன். உங்களுக்கு மறுபிறவி உள்ளதால் நீங்கள் இத்தல இறைவனைத் தரிசிக்க முடியாது'' என்று கூறி தன் சாபத்துக்கு விமோசனம் கேட்டார்.

சாந்தமடைந்த அகத்தியர், ""மகரந்த ரிஷியே, நான் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற, உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப் பூஜை செய்தால், சாபம் நீங்கி மீண்டும் பழைய முகத்தினை அடைவீர்'' என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்.

உடனே மகரந்த ரிஷி தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயத்திற்கு வந்து யாழி (சிங்க) முகத்துடன் பூஜை செய்தார். இன்று ஒருவகை மலரால் பூஜை செய்தால் அடுத்த நாள் வேறு ஒரு மலரைக் கொண்டு பூஜை செய்தார். இப்படியாக ஐம்பது வருடங்கள் பூஜை செய்தார். ஒரு நாள் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது அவர் கழுத்திலிருந்த ருத்ராட்ச மாலை அறுந்து சுவாமியின் சிரசில் (லிங்கத்தில்) விழுந்தது. அப்போது இறைவன் ஜோதியாக ஜொலித்தார். இதனைக் கண்ட மகரந்த ரிஷி, ஒருமுக ருத்ராட்சத்திலிருந்து பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை சமர்ப்பித்து பூஜை செய்ய, சுவாமி ரிஷிக்குக் காட்சி கொடுத்தார். ரிஷி தன் யாழி முகம் மாறி சாப விமோசனம் அடைந்தார். அதனால்தான் இத்தல இறைவனுக்கு ருத்ராட்ச கவசம் சாற்றப்பட்டிருப்பதாகச் சொல்கி றார்கள்.

இருபத்தியிரண்டாயிரம் ருத்ராட்ச மணி களைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடப்படுகிறது. ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம், சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் அணிவிக்கிறார்கள். இதுபோன்ற ருத்ராட்ச கவசம் அணிந்த மேனி உள்ள இறைவனை எங்கும் தரிசிக்க முடியாது என்கிறார்கள். இந்தக் கவசத்தினைத் தயார் செய்ய உதவியவர் திருச்சியைச் சேர்ந்த பக்தர் சிவகுமார் என்பவர்.

மகா மண்டபத்திலிருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால் நந்தியெம்எபெருமான் காட்சி தருகிறார். இவருக்கு வலக்காது இல்லை.

பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது. அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விஸ்வநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார். ஈசன் அப்போது ஜோதிர்லிங்கமாய் காட்சி கொடுத்தார்.

இந்த நிலையில் பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது அது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலக்காது மடங்கி உள்நோக்கிச் சென்றுவிட்டது. இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், ""நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலக்காது இருந்த பக்கம் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்'' என்று ஆறுதல் கூறினார்.

அதன்படி, இந்த நந்தியின் வலக்காதுப் பக்கம் தங்கள் குறைகளைக் கூறினால் அது நிவர்த்தி ஆகிவிடுகிறது என்கிறார்கள்.

ஆலயத்தின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இவர் சீடர்கள் யாருமின்றி காளை வாகனத்தில் அமர்ந்து நிருதி திசையை நோக்கி அருள்புரிகிறார். இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்பர். இவரை தரிசித்தால் சாபங்கள் நீங்கும்; கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க லாம். இவருக்கு தினமும் பழைய சோறு (தண்ணீர் ஊற்றி வைத்த முதல் நாள் சோறு) படைக்கப்படுகிறது. இவரை மனதார வழிபட்டால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும் என்கிறார் கோவில் குருக்கள்.

இக்கோவிலின் வடமேற்குப் பகுதியில் தன் பத்தினிகளுடன் முருகப்பெருமான் அருள்புரிகிறார். ஆலயத்தின் வடக்குக் கோஷ்டத்தில் மகாவிஷ்ணு காட்சி தருகிறார். இவர், நவராத்திரி விழாவின்போது தன் மாப்பிள்ளையான சிவபெருமானையும் தன் தங்கையான வேதாந்த நாயகியையும் சீர்வரிசை கொடுத்து, தன் ஆலயத்திற்கு அழைத்துச் செல்வாராம். இந்தச் சிவாலயத்திற்கு அருகில் பெருமாள் கோவில் உள்ளது. இந்தப் பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா நடைபெறும் பொழுது, கடைசி நாள் சிவதம்பதி யர் அங்கே வருகை தருவது வழக்கமாம். அவ்வாலயத் திலுள்ள பெருமாள் இங்கு வந்து சீர்வரிசை கொடுத்து அழைத்ததன் அடையாளமாக இங்கு வடக்குக் கோஷ்டத்தில் எழுந்தருளியுள்ளார்.

அவருக்கு அருகில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் சந்நிதி உள்ளது. இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர்கள் அருள் புரிகிறார்கள். ஒருவர் பெரிய தோற்றத்தில் தெற்கு நோக்கியும் இன்னொருவர் சிறிய திருவுருவில் கிழக்கு நோக்கியும் உள்ளனர். சண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு அருகில் கோஷ்டத்தில் நான்கு கரங்கள் கொண்ட விஷ்ணு துர்க்கை எழுந்தருளியுள்ளாள். அம்பாள் சந்நிதியின் பின்புறம் வடக்கு கோஷ்டத்தில் எட்டு கரங்கள் கொண்ட துர்க்கை காட்சி தருகிறாள். இந்த இரு துர்க்கைகளும் திரிபங்க நிலையில் நின்று வடமேற்கு திசையை நோக்கிக் காட்சி தருகிறார்கள்.

கன்னி மூலையில் கபால விநாயகருக்குத் தனிச்சந்நிதி உள்ளது. இவரை வழிபட சகல பாவங்களும் நீங்கி, எடுத்த காரியம் முழு வெற்றி பெறும் என்பர்.

இக்கோவிலின் கர்ப்பகிரகம் மட்டும் தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது.

இத்திருக்கோவிலின் தலமரம் வன்னி. தலத் தீர்த்தமான பிரம்ம தீர்த்தம் கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இத்தலத்தின் புராணப் பெயர் தேவராஜபுரம்.

பூஜைக்குரிய பொருட்களை நாம் வாங்கிச் செல்வது நல்லது. குருக்களின் வீடு அருகிலேயே இருப்பதால் நாம் செல்லும் நேரத்தில் தரிசனம் காணலாம். விரைவில் கும்பாபிஷேகம் காணவிருக்கும் இந்தக் கோவிலின் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன. பக்தர்கள் இதில் கலந்து கொண்டு இறையருள் பெறலாம்.

சிறப்புச் செய்தி

தினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரச் செய்து வழிபடுகிறார். அதற்குப் பின்தான் காலை ஏழு மணி அளவில் கோவில் திறக்கப்படுகிறது.

சூரிய ஒளி சிவலிங்கத்தின்மீது படர் வதற்கு ஏற்ப கிழக்கு வாசல் சாளரம்போல் அமைக்கப்பட்டுள்ளது.

சூரிய கிரகணத்தின்போது ஒரு பெரிய நாகம் எங்கிருந்தோ வந்து தலமரமான வில்வத்தில் ஏறி, வில்வதளத்தைப் பறித்து வாயில் கவ்விக் கொண்டு, கிழக்கு வாசல் வழியாக நுழைந்து சிவலிங்கத்தின்மீது ஏறி வில்வதளத்தை வைத்தபின், கீழே இறங்கிப் படம் எடுத்து வழிபட்டபின், வந்த வழியே சென்று மறைந்துவிடுமாம்.

தேப்பெருமாநல்லூர் தலத்தின் புராணப் பெயர் தேவராஜபுரம். இங்குள்ள வேதாந்த நாயகி சமேத விஸ்வநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் கன்னி மூலையில் தனி சந்நதியில் எழுந்தருளியுள்ளார் கபால கணபதி. அது என்ன கபால கணபதி?

இந்த கணபதியின் கண்கள் யானை முகத்திற்கு உள்ளது போல் முகத்தின் பக்கவாட்டில் இல்லாமல், மனிதர்களுக்கு இருப்பது போல் முகத்தின் நடுவில் உள்ளது. மேலும், இவரது கை, கால் விரல்கள் மனித விரல்களைப் போல் நீண்டுள்ளது. இடுப்பில் கபால மாலையை அணிந்திருக்கிறார் இவர்.
ஒரு மகாபிரளய காலத்தில், இந்தப் பூவுலகமே நீரில் அமிழ்ந்தபோது, இத்தலம் மட்டும் மூழ்காமல் வெளியே தெரிந்தது.

இதனைக் கண்டு திகைத்த நான்முகன், தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள விநாயகரை தியானித்தார். அவர் முன் தோன்றிய விநாயகர், ‘‘இத்தலம் புனிதமானது. இங்கே சிவபெருமான் எழுந்தருளப்போகிறார். மறுபிறவி இல்லாத புனிதருக்குதான் இத்தல ஈசனை வழிபடும் பாக்கியம் கிட்டும். ஈசனுடன் அன்னையும் நானும் இத்தலத்தில் எழுந்தருள்வோம்.

அப்போது என் கண்கள், மனித கண்கள் போல நேராகக் காட்சி தரும்; என் நகங்கள், நரம்புகள் எல்லாம் மனித உறுப்புகள் போலவே இருக்கும். அந்த வேளையில் அஷ்டதிக் பாலகர்களை மண்டை ஓடு மாலைகளாக மாற்றி என் இடுப்பில் ஒட்டியாணமாக அணிவேன். என்னை வழிபடுபவர்களுக்கு அவர்கள் செய்த பாவங்களை நிவர்த்தி செய்து சகல பாக்கியங்களையும் அளிப்பேன்’’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.

 இந்த கபால விநாயகருக்கு சந்தன அபிஷேகம் செய்யும் போது அவரது இடுப்பில் உள்ள கபால ஒட்டியாணத்தை தரிசிக்கலாம்.

குடந்தை நாகேஸ்வரம் திருக்கோயிலிலிருந்து சுமார் நான்கு கி.மீ தொலைவில் உள்ளது தேப்பெருமாநல்லூர்
.


ப்ரஸ்னம்


ப்ரஸ்னம்


Tamil Astrology

நமது பாரத தேசத்தில் ரிக்வேதம் , யஜுர்வேதம் , சாம வேதம் , அதர்வண வேதம் எனப்படும் வேத சாஸ்திரங்களின்படி இந்துக்களின் வாழ்கையை முறைபடுத்தியிருக்கிறார்கள். வேதங்களின் கண்களான ஜோதிட சாஸ்திரத்தில் கணிதஸ்கந்தம் , ஜாதகஸ்கந்தம் சம்மிதாஸ்கந்தம் என்ற முன்று பிரிவுகள் உண்டு .அதில் மூன்றாவது பிரிவான சம்மிதாஸ்கந்தம் என்ற பகுதியில் ஆருடம் என்னும் ப்ரஸ்னம் என்ற அற்புதமான சாஸ்திரத்தைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
ப்ரஸ்னத்தைப்பற்றி ஜினேந்திரமாலை, உத்திரக்கலாமிர்தம் , பலதீபிகை, ஸ்ரீபதிபத்ததி , ப்ரூகத் ஜாதகம் , சாராவளி , ஜாதகார்ணவ தீபிகை , ஜாதக பாரிஜாதம் , ஜாதக நாரதீயம் , குமாரசுவாமியம் , ஷ்ட்பஞ்சாசிகை , பிரஞ்ஞான தீபிகை , ஜோதிட கன்மகாண்டம் , பூர்வபராச்சர்யம் , வீமேஸ்வர உள்ளமுடையான் ,மலையாளத்தில் ப்ரஸ்ன மார்க்கம் , ப்ரஸ்ன தந்த்ரா , ப்ரஸ்ன அனுஷ்டான பத்ததி , கிருஷ்ணீயம் , முகூர்த்த மாதவியம் , தேவப்ரஸ்னம், தாந்திரீய வாஸ்து , நாரதீயம் போன்றவைகள் ப்ரஸ்னத்தைப்பற்றி கூறுகின்றன
ப்ரஸ்னத்தில் ஜாமக்கோள் ப்ரஸ்னம்(நட்ட்முட்டிசிந்தனை),ஹோராப்ரசனம்( சரம்) , தாம்பூல ப்ரஸ்னம் , கடிகாரப் ப்ரஸ்னம் , அஷ்டமங்களப்ரஸ்னம் , தேவப்ப்ரஸ்னம் , சகாதேவர் ஆருடம் , பலகரை (சோழிப்ரஸ்னம்) ப்ரஸ்னம் , நிமிர்த்தம் போன்ற பலவகை ப்ரஸ்ன முறைகள் உண்டு .
ஜோதிடரிடம் ஒருவர் ஒரு விஷயத்தைப்பற்றி கேள்வி கேட்கும்பொழுது அது ப்ரஸ்னஜோதிடமாக மாறி , ஒருவருடைய பூர்வஜென்மத்தில் செய்த பாவபுண்ணியங்களைப் பற்றியும் , இப்பிறவியில் உள்ள நல்வினை , தீவினைகளைப் பற்றியும் , குல தெய்வ அனுகிரகம் உண்டா ? முன்னோர் சாபம் உண்டா ? சத்ரு - செய்வினை தோஷம் உண்டா ? நாகதோஷம் பிரேததோஷம் உண்டா ? திருமணத் தடை ஏன் ? புத்ர தோஷம் உண்டா ? உயிர்கண்டங்கள் , திராத நோய் ஏன் ஏற்படுகின்றது ? என்பனவற்றை நன்கு அறிந்து , அதற்கு என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை ப்ரஸ்னத்தின் மூலமாக அறிந்து அதற்குண்டான சாந்திபரிகாரங்களைச் செய்து , நமது வாழ்கையை மகிழ்ச்சியானதாக மாற்றிக்கொள்ள உதவுவது இந்த வரபிரசதமான ப்ரஸ்ன மார்க்கமே ஆகும் .
இதனால் விதியை மதியால் வெல்லலாம் !

ஏவல், பில்லி, சூனியம் உண்மையா, பொய்யா?


பாம்பன் சுவாமிகள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பத்தைப் பார்ப்போம்.  சுவாமிகள் சிதம்பரத்தில் தங்கி இருந்த காலம். சைவத்தை சிலர் தூற்றியதால், சுவாமிகளுக்கும் அவர்களுக்கும் பகை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தது. வழக்கின் முடிவில் சுவாமிகளே வென்றார். அதனால் வன்மம் கொண்ட பகைவர்கள், சுவாமிகளின் மீது தீவினையை ஏவி விட்டனர். முருகன் அருளால், அந்தத் தீவினை, ஏவி விட்டவனையே சென்று தாக்குமாறுச் செய்தார் சுவாமிகள்.
இதனை,
“……………. தில்லை பின்னை வாழ்
குடில நாமர்கள் கொடிய சூனியம்
ஊட்டி னார் கொலற் கேயஃதுங் கெடுத்
துவகை செற்றுலா மவர்வ ழக்கெலாம்
ஒட்டி யேயெனக் கீந்த வென்றியிவ்
வுலகு கூறுமே யலகில் வேன்முதால்.”
-என்ற அவருடைய ’குமாரசுவாமியம்’ பாடல் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கந்தர் சஷ்டிக் கவசத்தில் வரும், “பில்லி சூனியம் பெரும்பகை அகல…” என்று வரும் வரிகளும் இது போன்ற தீச்செயல்கள் மனிதரைப் பாதிக்கும் என்பதை உறுதி செய்கிறது. ஸ்ரீ பாம்பன் சுவாமிகளும் தனது சண்முக கவசத்தில் இது குறித்துத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ சங்கரர்
சங்கரர், ராமானுஜர் இருவருமே இந்தத் தீய அபிசார மந்திரங்களால் தங்கள் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டனர் என்பதை அவர்களது வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஸ்ரீ சங்கரரிடம் வாதில் தோற்ற அபிநவ குப்தன், அவர் மீது தீவினையை ஏவி விட்டான். அதனால் பலத்த பாதிப்புக்குள்ளானார் ஸ்ரீ சங்கரர். பின்னர் திருச்செந்தூர் வந்து முருகப்பெருமானை வணங்கி,  ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் பாடி தன் நோய் நீங்கப் பெற்றார். அது போல சமணர்கள் செய்த துன் மந்திரவாதத்தால் பல சைவர்கள் பாதிக்கப்பட்டதையும் நாம் பெரிய புராணம் வழியாக அறியலாம். அவர்களை தனது இறையாற்றல் மூலம் வென்றார் ஞான சம்பந்தர் என்பதையும் நாம் அறிய முடிகிறது.
ஆக, ஏவல், பில்லி, சூனியம் என்பதெல்லாம் உண்மைதான் என்பதை இவற்றின் மூலம் உணர முடிகிறது. அதே சமயம் ஏவல் வைக்கிறேன், எடுக்கிறேன் என்றெல்லாம் கூறி ஆன்மீகத்தின் பேரில் மக்களை ஏமாற்றும் சாமியார்களிடமிருந்தும் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.
காசு ஒன்றையே குறியாகக் கொண்ட இந்தச் சாமியார்கள், போலி ஆன்மீகவாதிகள், மாந்த்ரீகர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள், அதிலிருந்து எப்படித் தப்பிப்பது, ஒருவேளை தனக்கு ஏவல், பில்லி, சூனியம் யாராவது வைத்து விட்டதாகக் கருதினால் அல்லது அப்படி நம்பினால் அதிலிருந்து விடுபடுவது எப்படி என்பதையெல்லாம் பின்னால் வேறொரு பதிவில் மிக விரிவாகக் கூறுகிறேன்.
எதுவாக இருந்தாலும் உள்ள உறுதியுடன், தன்னம்பிக்கையுடனும், இறை நம்பிக்கையுடனும், உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்தால் எப்பகையையும் வெல்ல முடியும் என்பது உண்மை.
வள்ளுவர்
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி
தாழாது உஞற்றுபவர்
என்று குறிப்பிட்டிருப்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
மன உறுதி கொள்வோம்; மன்பதை வெல்வோம்.