Monday, June 20, 2011


“வெள்ளை தாமரை பூவிலிருப்பாள்
வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்
கொள்ளை யின்பங் குலவு கவிதை
கூறு பாவலன் உன்னத் திருப்பல் ” —- மகாகவி பாரதியார்
அன்பார்ந்த வலைதள பார்வையாளர்களே ! கல்வியாளர்களே அனைவருக்கும் கல்வி,கலைகளுக்கு அதிபதியான கலைமகள் ஸ்ரீ சரஸ்வதி தேவியின் ஸ்ரீ பாத கமலம் பணிந்து ,’சரஸ்வதி பூஜை செய்யும் இந்நன்னாளில் கல்வியை பற்றி ஆய்வது தானே சிறப்பு எனவே கல்வி நிலையை பற்றி ஆய்வோமா ?
மேதைகளையும் ,கணிதவல்லுனர்களையும் ,தர்க்கவாதிகளையும் ,பேச்சாளர்களையும் ,மருத்துவர்களையும் ,பொறியாளர்களையும் ,ஜோதிடர்களையும் ,நடனம்,நாடகம்,நாட்டிய கலைஞர்களையும் உருவாக்கிடும் மூலகர்தா வித்யா காரகன் புதனே யாவார்
பாவங்களில் , கிரகங்களும் , ஜாதகரின் நிலையும் :-
லக்னத்தில் – சந்திரன் இருக்க ஜாதகர் பக்தி , ஞானம் , ஆசாரமுடையவராகவும்
- புதன் இருக்க இனியவாக்கும் , சாத்திர மறிந்தவராகவும்,
- குரு இருக்க புத்தி கூர்மை , அறிஞன் , பண்டிதனாகவும்
- சனி இருக்க நினைவாற்றல் அற்றவராகவும் இருப்பர் .
இரண்டாமிடத்தில் சந்திரன் இருக்க நல்ல படிப்பும் ,
- புதன் இருக்க நல்வாக்கு கல்வியுடையவனாகவும் ,
- குரு இருக்க அறிவு கூர்மை யுடையவனாகவும் இருப்பர்.
மூன்றாமிடத்தில் புதன் இருக்க சிறந்த அறிவுள்ளவனாகவும்
- குரு இருக்க கூர்மதியுடையவனாகவும்
- சனி இருக்க கல்வியிற் தடை , படிப்பில் மந்தகதி உடையவனாகவும் , சனிபலம் பெற – ஞானம் உண்டு .
- கேது இருக்க ஞானம் , வித்தை யுடையவனாகவும் இருப்பர் .
ஐந்தில் சந்திரனிருக்க நற்ப்புதியும் கல்வித்திறனும் உடையவனாகவும்,
- புதனிருக்க ஞானவிருத்தி , நர்கல்வியாலனாகவும் .
-குரு யிருக்க நற்புத்தி ,சாஸ்திர ஞான முடையவனாகவும் இருப்பான் .
ஒன்பதில் புதனிருக்க பண்டிதனாகவும் அறிஞனாகவும் ,
- குருவிருக்க நல்லறி உடையோனாகவும் இருப்பான் .
பத்தில் புதனிருக்க ஞானியாகவும் ,
- கேது இருக்க விவேகமிக்கவனாகவும் இருப்பான் .
பனிரெண்டில் குரு இருக்க புத்திசாலியாகவும்
- கேது இருக்க ஞான முடையவனாகவும் இருப்பான் .
பாவகாதிபதிகள் மாறிநின்ற பலன்கள் :-
———————————————————-
லக்னாதிபதி பலம்பெற்று 2 ல் இருக்க வாக்குவன்மை கல்வி கேள்விகளின் தேர்ச்சி பெற்றவராக ஜாதகர் திகழ்வார் லக்னாதிபதி 4 ல் பலம் பெற்றிருக்க கல்வியில் உயர்ந்த நிலை அடைவார் . இரண்டாமிடத்து அதிபதி லக்னத்திருக்க அறிவாளியாகவும். பட்டம் பெற்று உயர் பதவி அடைபவனாகவும் இருப்பார் . இரண்டாம் அதிபதி முன்றில் பல மற்றிருக்க கல்வி ஞானமில்லாதவனாகவும் . கல்வி கற்க சந்தர்பமுடையாதவனாகவும் இருப்பான் . இரண்டாமதிபதி பத்தில் பலமுடன் இருக்க கல்வியில் சிறந்தவனாகவும் ,சாஸ்திர ஆராயிச்சி , வாதத்திறன் ,ஆசிரியர் ,ஆச்சாரியாராவும் திகழ்வான் முன்றாமதிபதி லக்னத்தில் பலம் பெற்றிருக்க சினிமா,நாடகம் ,நாட்டியம்,சங்கிதம் ,என சகலகலா வல்லவனாக இருப்பான் . நான்காமதிபதி லக்னத்திலிருக்க (பலமுடன்) கல்வி திறன் மிக்கவன் . ஐந்தாமதிபதி லக்னத்தில் பலமுடன் இருக்க புத்தி , வித்தை , கல்வியிற் சிறந்தவனாகவும் இருப்பான் . ஐந்தாமதிபதி 4 ல் இருக்க படித்தவர்களின் நட்பு கிடைக்கும். ஐந்தாமதிபதி 5 ல் இருக்க ஜாதகரின் குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர் . ஐந்தாமதிபதி 6 ல் இருக்க புத்தி அற்றவனாகவும் நினைவாற்றல் இல்லாதவனாகவும் இருப்பான் . ஐந்தாமதிபதி 9 ல் சிறந்த கல்வி , ஒளிமயமான எதிர்காலம் உண்டு . பத்தாமதிபதி லக்னத்தில் பலம் பெற்றிருக்க ஞானமிக்கவனாக இருப்பான் . பத்தாமதிபதி 2 ல் (பலம்) வாக்குவன்மை , பேசுந்திரன் இருக்கும் . பத்தாமதிபதி 5 ல் (பலமுடன்) சாத்திரமறிந்த பண்டிதன் ஆவான் . பன்னிரெண்டாம் அதிபதி 2 ல் இருக்க கல்வியில் ஆர்வமும் ஊக்கமும் இருக்காது .
கிரக இணைவு பலன்கள் :
கல்வி பற்றி அறிய 2,4,5,11 ம் பாவநிலைகள் ஆராயப்பட வேண்டும் . இத்துடன் 8 , 12 சம்பந்தம் பெற கல்வி சிறக்காது / இருக்காது . 2 ம் பாவம்-ஆரம்பக்கல்வி
4 ,9 ,11 தேர்வுகளில் வெற்றி நான்காம் அதிபதி 4 ,9 ,11 ம் பாவத் தொடர்பு = உயர்கல்வி தொழிற்கல்வி அமையும் . சந்திரன் + செவ்வாய் அல்லது சூரியன் + செவ்வாய் – ராகு கேது தொடர்பு .
4 ,9 ,11 மற்றும் சூரியன் தொடர்பு (கன்னி , சிம்மம் , விருச்சிகம் , மீனம் லக்னம் ) – மருத்துவ கல்வி
குரு இணைய = பொது மருத்துவர்
புதன் இணைய = நரம்பியல் நிபுணர்
செவ்வாய் இணைய = அறுவை சிகிச்சை நிபுணர்
சனி இணைய = எலும்பு முறிவு / பல் நிபுணர்
சுக்கிரன் இணைய = கண் மருத்துவர் சிறுநீரகம்
சுக்கிரன் + சந்திரன் = ENT நிபுணர்
சுக்கிரன் + ராகு = எக்ஸ்ரே ஸ்கேன் நிபுணர்
குரு + செவ்வாய் + சூரியன் = ஆயுர் வேத மருத்துவர்
குரு + சூரியன் + சனி = ஹோமியோ மருத்துவர்
சூரியன் + குரு = சித்த வைத்தியர்
சூரியன் + புதன் + குரு = தத்துவ ஞானி
சூரியன் + புதன் = விஞ்ஞானி , நிபுணத்துவம்
10 மிடத்துடன் புதன் தொடர்பு = எழுத்தாளர் ஆவார்
10 மிடத்துடன் சுக்கிரன் தொடர்பு = கவிஞர் ஆவார்
10 மிடத்துடன் குரு தொடர்பு = தத்துவ ஞானி ஆவார் .
6,8,12 ல் ராகு இருந்து ராகு திசையில் படிப்பே வராது .
சந்திரன் + ராகு = நல்ல படிப்பு வரும் .
புதன் + செவ்வாய் = படிப்பில் தடை ஏற்படும் .
2,5,11 சம்பந்தம் – முதுநிலை பட்டம் .
2 மிடம் – பள்ளிபருவம்
4 மிடம் – இளங்கலை , பட்டயப்படிப்பை குறிக்கும் .
2,9,11 – பி , எச் , டி
2,11 – ஆராய்ச்சிப் படிப்பை குறிக்கும்
எந்த நிலைக்கு , என்ன படிப்பு ஏற்படும் ?
1 . மேஷம் , விருச்சிகம் , செவ்வாய் , சந்திரன் ஆகியோர் பலம் பெற்றிருக்க மின்னியலிலும்
2 . மிதுனமும் , செவ்வாயும் பலம் பெற இலக்கியம் மற்றும் தகவல் தொடர்பு துறையிலும்
3 . புதன் , குரு , மிதுனம் , விருச்சிகம் பலம் பெற வானொலி கம்பி இல்லா தகவல் தொடர்பும்
4 . காற்று ராசிகளான மிதுனம் , துலாம் , கும்பம் , சூரியன் , குரு , புதன் , ஏரோ நாட்டிக்கல் , ஏவியேஷன் துறை
5 . மீனம் , தனுஷு குரு + சந்திரன் – சுக்கிரன் தொடர்பு = கடல் வழிக்கான துறை வாகனக்கல்வி
மீனம் + தனுஷு + குரு + சந்திரன் – செவ்வாய் தொடர்பு = கடற்படை
மீனம் + தனுஷு + குரு + சந்திரன் – புதன் தொடர்பு = வணிகம் மற்றும் பொறியியல்
6 . புதன் + குரு – பத்திரிகைத் துறை ( ஜர்னலிசம் )
7 . மேஷம் , செவ்வாய் குரு + சுக்கிரன் = ஆட்டோ மொபைல்
8 . சுக்கிரன் + சூரியன் – குரு தொடர்பு = சினிமாத்துறை
9 . பலம் மிக்க சுக்கிரன் + புதன் + சந்திரன் – சனி தொடர்பு = பொறியியற்கல்வி
10 . சூரியன் + புதன் + குரு தொடர்பு = பட்டயப் படிப்பு , ஆசிரியர் கல்வி
11 . சூரியன் + சனி + புதன் + செவ்வாய் அல்லது ராகு தொடர்பு – சட்டப்படிப்பு
13 . சூரியன் + புதன் + சுக்கிரன் = வணிக நிர்வாகம் (MBA) , கணினியியல் (PGDCA)
- புதன் வலுவுடன் இருந்தாலன்றி பட்டப் படிப்பு சாத்தியமாகாது .
- புதன் வலுவுடன் இருந்தாலும் , 2 ல் தீய கிரகம் இடம் பெற படிப்பில் தடை ஏற்படும் .
- புதன் பலத்துடன் இருந்தாலும் , லக்னாதிபதி பலமற்று 11 ல் இருக்க பட்டப் படிப்பு கேள்வி குறியாகும் . ஆயினும் தொழிற் கல்வி கை கொடுக்கும்
- ரிஷபம் , துலாம் , மகரத்திற்கு புதன் நலந்தரும் கிரகமாகும் .
- மிதுனம் , கன்னிக்கு – நன்மை , தீமை கலந்து தரும் கிரகமாகும் .
- கடகம் , மீனம் , தனுஷு , விருச்சிகம் , சிம்மம் , மேஷம் ஆகிய ராசிகளில் தீங்கு செய்தாலும் , 2 ம் அதிபதி பலம் பெற நற்கல்வி அமையும் .
கைரேகை சாஸ்திரம் :-
புதன் மேடு வனமாக இருக்க , கல்வியில் சிறந்தவராக இருப்பார் . புதன் மேட்டில் கீழ்க்கண்ட குறிகள் இருக்க ( முக்கோணக் குறி ) – மேடைப் பேச்சாளராகவும் , சூரிய மேட்டில் ( சதுரக் குறி ) இருக்க கலைத்துறையில் புகழ் பெறுவார் . சந்திர மேட்டில் ( வட்டக் குறி ) இருக்க இலக்கியவாதியாவார் .
கீழ் செவ்வாய் மேட்டிலிருந்து , புதன் மேடு நோக்கி சிறு சிறு ரேகைகள் இருக்க ஆராய்ச்சிக் கல்வியில் ஈடுபாடு ஏற்படும் . வாஸ்து :
அறிவை அபரிமிதமாக அளித்து ஞானத்தை பெருக்குபவன் ‘ ஈசானன் ‘ ஆவான் .
நாடி ஜோதிடம் :-
மேஷத்தில் புதன் :-
(புதன் + செவ்வாய்) , விவசாயம் , கல்வியில் தடை , தொழிற் கல்வி , மருத்துவ அறுவை சிகிச்சை
ரிஷப புதன் :-
(புதன் + சுக்கிரன் ) வணிகவியல் , கணிதம் , சட்டம் , பொருளாதாரம் , ஆகிய கல்விகளும் , கலைத்துறை , ஈடுபாடும் ஏற்படும் .
மிதுன புதன் :-
கணிப்பொறி , கணக்கியல் , வணிகவியல் படிப்புகளும் , எழுத்தாற்றல் , பேச்சாற்றல் , பத்திரிக்கைத்துறை , தகவல் தொடர்பு மற்றும் சிறந்த கல்வியும் உண்டு .
கடக புதன் :-
கலை , இலக்கியம் , மொழிக்கல்வி அமையும் (புதன் + சந்திரன் )
சிம்ம புதன் :-
அறுவை சிகிச்சை ( புதன் + சூரியன் ) பொறியியல் , சித்தா , சமூகவியல் , அரசியல் , தத்துவம் , சம்பந்தப்பட்ட கல்வி சிறக்கும் .
கன்னி புதன் :-
கணக்கியல் , வணிகவியல் , அனைத்து துறைகளிலும் கல்வி சிறக்கும் .
துலா புதன் :-
வணிகவியல் , அழகுக்கலை , சட்டம் , சங்கீதம் , கணக்கியல் , கலைக்கல்வி (சுக்கிரன் + புதன்) .
விருச்சிக புதன் :-
(செவ்வாய் + புதன் ) இயந்திர மற்றும் உலோக சம்பந்தமான கல்வி விவகாரம் , அறுவை மருத்துவக் கல்வி ஏற்படும் .
தனுஷு புதன் :-
(குரு + புதன்) தத்துவம் , பொருளாதாரம் , சட்டம் , கணக்கியல்
மகர புதன் :-
(சனி + புதன் ) சுரங்கவியல் , கனிமங்கள் , சம்பந்தமான கல்வி .
கும்ப புதன் :-
(சனி + புதன் ) மணவியல் , தத்துவம் , பொறியியல் , மருத்துவக் கல்வி சிறக்கும் .
மீன புதன் :-
(குரு + புதன் ) சாஸ்திரம் , வணிகவியல் , பொருளாதாரக் கல்வி தேர்ச்சி தரும் .
புத்த பகவான் ஸ்தோத்திரம் ப்ரயங்கி கலிகா ஸ்யாமம் ரூபேணா பிரதிமம் புதம் ! சௌம்ய சௌம்ய குணோ பேதம் ( இதை உச்சரிக்க ) தம்புதம் ப்ரணமாம் யாஹம் !! ( கல்வி ஞானம் பெருகும் )
புத காயத்ரி ஓம் கஜத் வஜாய வித் மஹே சுக ஹஸ்தாய தீமஹி ! தன்னோ புத பிரச் சோதயாத் !!
கல்வி சிறக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம் :-
ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகா க்ருதிம் !]
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ் மஹே !!
எனவே , அன்பர்களே ! கல்விக்கான பலநிலைகளை , கலைமகள் அருளால் ஆய்வு செய்தோம் . பயனுள்ளதாக அமைந்திருக்கும் என எண்ணி நிறைவு செய்கிறேன் .
வாழ்க வளமுடன்


கீழே கொடுக்கப்பட்டுள்ள Golden Rule அனைத்தும் பிரபல பிரசன்ன ஆராய்ச்சியாளரிடம் இருந்து பெறப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் 95% உண்மையாகிறது (இவை உதயம் ஆருடத்திற்க்கு பார்க்க வேண்டியவை) நமது சாப்ட்வேரில் இவ்வாறு கிரக சேர்க்கை வந்தால் வெளியில் காட்டும்படியாக அமைக்கப்பட்டுள்ளது (Two Option-மறைக்க-பார்க்க). இது நமது சாப்ட்வேரின் சிறப்பு அம்சம். (மேலும் பல சூட்சமங்களும் இணக்கப்பட்டு உள்ளது)*****(ஜாதகம் பார்க்க வந்து உள்ளவரின் அப்பொழுதய நிலையை காட்டும் அமைப்புக்கள் இவை)
1. 1ல் சுக்கரன் –காமம் அதிகம் உண்டு.
2. 2ல் சுக்கரன் கள்ளத் தொடர்பு கட்டாயம் இருக்கும்
3. 4ல் சந்திரன் நல்ல வீடு உண்டு, தாயாரால் பிரச்சினை
4. 5ல் சனி(வக்கரம்) வேலைக்காரகளால் தொந்தரவு, மாமன் இல்லை. பிரகார தெய்வ வழிபாடு
5. 6ல் செவ்வாய் கணவனை மதியாள். எதிரிகள் அதிகம்
6. 4க்கு கேந்தித்தில் சூரியன் தாகப்பன் சொத்து இல்லை
7. 10ல் சுக்கிரன் பணக்கார வாழ்வு பின்னாளில் உண்டு
8. செவ்வாய், சந்திரன் நல்ல நிலையில் விவசாய நிலம் உண்டு
9. பதன உச்சம் காலி மனைகள் காலி இடங்கள் உண்டு. கணவன் மனைவினே அன்யோன்யம், மிக்க கேளிக்கையுடன் சந்தோஷம்
10. சுக்ரன் சனி நல்ல பொருளாதாரம் உண்டு
11. சந்திரன் சனி ராகு வெளிநாடு செல்லுதல், பயன கிரகங்கள்
12. 7ல் குரு சாதுக்களின் சாபம்
13. 10க்குடையவன் 3ல் சொந்த இடத்தில் தொழில் அமையாது
14. குரு சந்திரன் ராகு உணவு விஷம்
15. 10ல் நீச கிரகம் சொந்தப் பொருளை அனுபவிக்க இயலா நிலை
16. செவ்வாய் சந்திரன் கேது திருமண வெறுப்பு
17. சந்திரன் சுக்ரன் ராகு சனி அருவறுப்பு நோய்
18. குரு புதன் சந்திரன் கேது பிரம்மச்சாரு, தாமதத்திருமணம்
19. குரு கேது தாமத்த்திருமணம்
20. குரு சந்திரன் புதன் சூரியன் காதல் திருமணம்
21. 2க்குரியவன் 9,11ல் இரண்டுதிருமணம்
22. செவ்வாய் சுக்கரன சந்திரன் படி தாண்டும் திருட்டு உறவு
23. 6க்குடையவன் திசையில் நொடிந்து போவார்கள், ஐபி கொடுத்தல்
24. செவ்வாய் புதன் சந்திரன் கோழை
25. 8ம் அதிபதி 8 ல் எங்குசென்றாலும் சொந்த ஊர் திரும்புதல்
26. 6,8க்குடையவர்கள்12ல் மறைதல் அக்காதங்கை உறவு பார்க்காது.
27. அஷ்டமச் சனி( உதயத்திற்க்கு 8ல் சனி) தன் பேராசைக்காக தன்னை வளர்த்தவருடன் போராடுதல், பேராகசை அதிகமாகும் காலம்
28. 2ல் செவ்வாய் கோபம் குடி கெடுக்கும் நிலை
29: .சந்திராஷ்டம்ம்(தொந்தரவு)
30. 3ல் குரு தம்பியை ஏமாற்றும் நாடகதாரி, காதில் காற்றுடைப்பு
31. 11ல் சூரியன் பழம் நழுவிபாலில் விழுதல்
32. செவ்வாய் எங்கிருப்பினும் அதனின்று 10ம் வீடு கெடும்
33. 3ல் சனி(அ) வாக்கரம் தன் படிப்பை பாதியில் நிறுத்துதம்
34. சூரியன் சந்திரன் குடும்ப நபர்களில் யாரேனும் ஒருவர் திருமணப் பிரிவுடன் இருப்பிர்.
35. குரு சந்திரன் நல்ல செல்ல வளம் பெயர் தந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் மனக்கசப்பே, உடன் பிறந்த சகோதரர் வாழ்க்கையைக் கெடுக்கும்.
36. குரு சந்திரன் நல்ல செவ்வாய் பெயர் தந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் மனக்கசப்பே உடன் பிறந்த சகோதரர் வாழ்க்கையைக் கெடுக்கும் புத்திர தோஷத்தைக் காட்டும்.
37. 10 ல் செவ்வாய் சொந்தத் தொழில செய்வதைக்காட்டும்.
38. 5ல் செவ்வாய் தகப்பன் காலத்திற்குப் பின் யோகம் தருகிறது.
39. ஆருடத்தில் ராகு வாழாத பெண்கள் உள்ள நிலை.
40. 6ஆம் அதிபதி நீச்சம் திருடிய பொருள் தங்காது.
41. 7ஆம் அதிபதி நீச்சம் மனைவி தங்காது, மனைவியின் பொருள் தங்கது (அ) எதிராளி (அ) பார்ட்னர் இருக்கமாட்டார்
42. 8ம் அதிபதி நீச்சம் ஆயுள் தொந்தரவு
43. குருவிற்கு 5,7,9 ல் கிரகம் இல்லை அற்ப ஆயுள், நோயாளி
44. 7மிடம் திருடனின் நிலையை குறிக்கும்
45. 7ம் அதிபதி திருடனைக் குறிக்கும்
46. செவ்வாய் சனி ராகு பெரிய விபத்தைக் தரும் நிலையை காட்டுகிறது
47. சுக்ரன் அஸ்தமனம் திருமணத் தாமதம். மனைவி தங்காமை, கண்கோளாறு, உடம்பின் முக்கிய சுரப்பகள் இயங்காத நிலை
48. 1,7 க்குடையவர்கள் 6,8,12 இருப்பின் விரைவில் பிரிவு
49. சனி சந்திரன் ஆஸ்துமா, புணர்பு யோகம் (திருமணத்தைத் தாமதப்படுத்த பொருளாதாரம் பாதித்தால் திருமணம் எளிதில், விரைவில் முடிந்து விடுகிறது) பந்தல் வரை போய் திருமணம் நின்றுபோனது புணர்பு யோகத்தினால்.
50. புதன் சந்திரன் சனி இழுவைச் சனி
51. சந்திரன் புதன் டென்சன் பேர்வழி, மன அழுத்தம்
52. 8ல் குரு வரட்டுப் பிடிவாதம்
53. 4,8 க்குடையவர் சேர்க்கை வண்டி வாகன மிருகாதி விபத்துக்கள்
54. 3ல் செவ்வாய் குருட்டுத் தைரியம்
55. 5ல் சனி உதயத்தில் சனி நீசமான தெய்வம் (கருப்பராயன், முனியம்மாள், பாவாடைத் தாய், பிரகார தெய்வங்களை குறிக்கும்)
56. லக்னம், சனி 3 பாகைக்குள் அற்பாயுள்
57. மாந்தி சனி 3 பாகைக்குள் அற்பாயுள்
58. குரு சனி இளமையில் தொழில், நரம்பு சம்பந்தமான நோய்கள்
59. 5ல் கேது பூர்விகம் போராடி கிடைக்கும்
60. 8ல் செவ்வாய் சனி மாங்கல்ய தோஷம் 100 சதவீதம்
61. 10ல் சந்திரன் நீச்சம் கடன் அடையாது
62. 7க்குடையவர் 10ல் நீச்சம் கடன் அடையாது
63. 4ல் சனி, 4ம் அதிபதி நீசம், 4ல் நீசம் நம்பி மோசம் போதல், நம்பிக்கை இழத்தல்
64. 8ம் ஆதி 7ல் முதுகு வலி
65. குரு புதன் அதிக நண்பர்கள்
66. 11ல் புதன், 5ல் புதன் ஜோதிடர்
67. 9ல் பாம்பு 10ல் பாம்பு மாந்தீரீகர்
68. சந்திரன் சுக்கிரன் பரிவர்த்தனை பல மனைவிகள், பணத்தைட்டுப்பாடு
69. சந்திரன் புதன் சுக்ரன் கட்டுப்பாடற்ற மனம்
70. செவ்வாய் புதன் குடிகாரன்.
71. நீச்ச சந்திரன் செவ்வாய் தவறான பழக்கம்
72. 3ல் சுக்ரன் சந்தேகப் புத்தி, மறைமுக உறவு
73. சந்திரன் கேது மன நிலைதடுமாற்றம்
74. சந்திரன் புதன் சுக்கிரன் அருவருக்கத்தக்க நோய்
75. உதய லக்கன ராகு பெருத்த உடல், மச்சம் முகத்தில் உண்டு
76. 10ல் வக்ரம் கிரகம், 10ம் அதிபதி வக்ரம் தொழிலில் தனித்து இயங்கா நிலையை தருகிறது
77. சனி நீச்சம் தொழிலில் தனித்து இயங்கா நிலை
78. 4,6,8,12-ல் முதலீடு தொழில் வேண்டாம், சுயதொழில் அமைய போரட்டம்

ஷயத்தில் சரியான முடிவெடுப்பதற்குள், தட்டுத்தடுமாறி,கறமையை கூட்டுகின்றன.ஸ்திரம் மற்றும் நெருப்பு ராசிகளில் ,இருபுறமும் சுபர்கள் புடைசூழ நிற்கும் புதன்,தீர்மானமான,அனுபவரீதியான முடிவெடுக்கும் சக்தியை அளிக்கிறான். தயை செய்யும் கிரகங்களின் தாக்கங்கள் சாதகமான அல்லது தயை புரியும் நிலைகள் யாதெனில், புதன் பலமுடன் திகழ்வதும்,சந்திரன் சுபர்களின் ,அதாவது குரு ,சுக்கிரனின் தயை தரும்தாக்கம் அல்லது தொடர்பு பெருவது நல்லது.மேலும் அதிக சுபர்களின் தயை பெறும் சந்திரன் இன்னிலைக்கு மிகவும் உதவுபவன் ஆவா ன். எனவே, சந்திரன் தனது சுயபலத்துடன் இருப்பது அவசியமாகிறது,வளர்பிறை சந்திரனாகவும் இருக்கவேண்டும். மேலும்,குருவு க்கோ அல்லது சுக்கிரனுக்கோ திரிகோணத்தில், புதன் இருக்க அல்லது சூரியனுடன் கூடிய புதன் ஆகிய நிலைகளும் நுண்ணறிவைதரும். இத்துடன்கூட ராகுவின் தாக்கத்திலிருந்து லக்னம் சுதந்திரம் பெற்று இருக்கவேண்டும். அதேபோல மிக குறைவான் அளவில் கேதுவின் தாக்கமும் இருக்கவேண்டும்.லக்னம் அல்லது சந்திரனுக்கு தாக்கந்தரும் நிழல்கிரகங்கள்,அனுகூலமான நல்ல முடிவுகளை அளி ீக்கவல்லது என்றாலும், நினைப்புத்தான் போழப்பை கெடுக்கும் என்பது போல், ஒருவரின் நினைப்பையும், பகுத்தறிந்து பார்க்கும் சக்தியையும் நாசம் செய்து விடுகின்றன. அவை, ஒருவரிடம்,எதையும் மிகைப்படுத்தி கூறும் தன்மையை அதிகரித்தும், எதையும் ஆச்சர்யகரமாக பார்க்கும் தன்மையும் கோடுத்து அவர்களின் திறமைகளை முடக்கி ,அதன் காரணமாக் எதற்கும் சரியான் முடிவெடுக்க முடியாத நிலைக்கு அவரை தளளிவிடுகிறது. இதன் காரணமாக,அந்த நபர் எந்த முடிவும் எடுப்பதற்கும், தனது விருப்பு வெறுப்புகளே இறுதியானது என்று நம்பிக்கொண்டு,அந்த தவறான் நம்பிக்கையிலேயே திருப்தியடைந்து, காரியத்தைக் கோட்டைவிட்டுவிடுவார்கள் என்பதே உண்மை. இனி பாவ நிலைகளைப் பற்றி பார்ப்போம். ஐந்தாம் பாவம் புத்திகூர்மையைக் குறிப்பதாகும்.ஒருவருக்கு விவேகமிக்க, அனுபவ பூர்வமான புத்தி அல்லது மனம் எப்போது வருமேனில்…………………… 1. சுபர் இடம் பெற்ற அல்லது சுபரால் பார்க்கபட்ட, சுபகிரகராசியாக ஐந்தாம் பாவம் அமைய…………….. 2. ஐந்தாம் அதிபதி சுபகர்த்தாரியில் இருக்க அல்லது உச்சம் பெற்றிருக்க…….. 3. கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ குரு இருக்க………… 4. குருவின் அனுகூலமான தாக்கம் ஐந்தாம் பாவத்திற்கு அமைய…………….. 5. ஐந்தாம் அதிபதி பலம்பெற்று கேந்திரத்திலிருக்க மற்றும் புதன் ஐந்திலிருக்க 6. ஐந்தாம் அதிபதி சுபருடன்கூடி கேந்திரத்தில் இருக்க……………….. 7. ஐந்தாம் அதிபதி கோபுராம்சம் பெற அல்லது வேறு உயரிய அம்சம் பேற்…… 8. இந்த அனைத்து நிலைகளிலும்,புதனும்,சந்திரனும் நல்ல நிலை பெறுவதே மிக முக்கியமானதாகும். எனவே, எந்த செயலுக்கும்,குழப்பங்களுக்கும் இறுதி முடிவளிக்கு


படிப்பதினால் அறிவு பெற்றோர் ஆயிரம்,
பாடம் படிக்காத மேதைகளும் ஆயிரம் உண்டு !…………..
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை;
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை…!
பல மனிதர்கள் இயற்க்கையாகவே பள்ளீ, கல்லூரி சென்று நன்கு படித்து,அறிவாளியாகி நன்கு முன்னேறிவிடுவர்.அவர்களுக்கு நல்ல தொழில்முறை திறமையும்,வாதத்திறமையும் ,அழகு,கலை,அறுசுவை ஆகியவற்றை கொள்கை பிடிப்போடு ரசிக்கும் தன்மையும் எல்லா திறமைகளூம் ஒருசேரப் பெற்றவராக இருந்தாலும்,ஏதேனும் ஒரு விஷயத்தில் சரியான முடிவெடுப்பதற்குள், தட்டுத்தடுமாறி,கடைசியாக தவறான முடிவிற்கே வருவார்கள். இத்தகைய படித்தமேதைகளுக்கு அடிப்படையிலேயே தேவையான் பொதுஅறிவு இல்லாததே காரணமாகும்.இவ்வுலகில் இன்னும் சில மனிதர்கள் அவர்களின் மொத்த குடும்பத்தின் சுமைகளையும் சுமந்து கொண்டிருக்கும் சுமைதாங்கிகளாயும், மழைக்கு கூட பள்ளிக்குள் ஒதுங்காதவர்களாக வும் இருப்பர்.ஆயினும் அந்த படிக்காதமேதைகளால் கண்டிப்பாக, எந்த விஷயத்தையும் சீர்தூக்கி பார்த்து ,அதன் சாதகபாதகங்களையும் அலசி தந்திரமாக சமாளிக்கும் கலைகளை பிரயோகித்து, மிக துல்லியமாக,நிகழ்வுகளுக்கு சரியான முடிவுகளை எடுக்ககூடிய திறமை இருக்கும்.அந்த படிப்பறிவில்லாத பாமரனுக்கு படிப்பில்லையெனினும், பொதுஅறிவில் சிறந்தவராக இருப்பதால், இயற்கையாகவே அனுபவத்தால் அது சாத்யமாகிறது . மேலும்,எப்படிச்செய்தால்,எப்படி முடியும் என்று நன்கு அறிந்திருப்பார்.ஆனால், அதிமேதாவிகளுக்கோ,இத்திறமைகள் இருப்பதில்லை.ஏனெனில் எப்போதுமே ஏட்டுச்சுரைக்காய்,கறிக்கு உதவுவதில்லை என்ற பழமொழி நாம் அறிந்த ஒன்றே. மேலே குறிப்பிடப்பட்ட பாடல்களும் இதையே விவரிக்கின்றன.
இப்போது,முடிவெடுக்கும் ,திறமைக்கான,தெளிவான அறிவுக்கான ஜோதிட காரணிகளைப் பார்ப்போம்.
நினைவுகளூம்,முடிவுகளும் மனதிலிருந்து எழுபவை.அந்த மனதுக்கு காரகன் சந்திரன் ஆவான்.அதேபோல்,எதையும் சீர்தூக்கிப் பார்த்து நல்லது கெட்டதை பகுத்தறிந்து உணரும் தெளிவைத் தருவது புத்தி. இந்த புத்திகூர்மைக்கு காரகன் புதன் ஆவான்.எனவே,100% சரியான,நல்ல முடிவெடுக்கும் திறமைக்கு புதனே காரணகர்த்தா. மேலும், முடிவெடுக்கும் திறமைக்கு தர்க்கம் செய்யும் திறமையும் அவசியமாகிறது. செவ்வாயே, தர்க்கதிறமைகளை தருபவன்.
செவ்வாய்,புதனுடனான நல்லுறவு…,முக்கியமாக அசுபகிரகங்களால் பதிக்கபடாததன்மையும்,நிழல் கிரகங்களான் ராகு-கேதுக்களின் தாக்கமும் இந்த தர்க்கதிறமையை கூட்டுகின்றன.ஸ்திரம் மற்றும் நெருப்பு ராசிகளில் ,இருபுறமும் சுபர்கள் புடைசூழ நிற்கும் புதன்,தீர்மானமான,அனுபவரீதியான முடிவெடுக்கும் சக்தியை அளிக்கிறான்.
தயை செய்யும் கிரகங்களின் தாக்கங்கள்
சாதகமான அல்லது தயை புரியும் நிலைகள் யாதெனில், புதன் பலமுடன் திகழ்வதும்,சந்திரன் சுபர்களின் ,அதாவது குரு ,சுக்கிரனின் தயை தரும்தாக்கம் அல்லது தொடர்பு பெருவது நல்லது.மேலும் அதிக சுபர்களின் தயை பெறும் சந்திரன் இன்னிலைக்கு மிகவும் உதவுபவன் ஆவா ன். எனவே, சந்திரன் தனது சுயபலத்துடன் இருப்பது அவசியமாகிறது,வளர்பிறை சந்திரனாகவும் இருக்கவேண்டும்.
மேலும்,குருவு க்கோ அல்லது சுக்கிரனுக்கோ திரிகோணத்தில், புதன் இருக்க அல்லது சூரியனுடன் கூடிய புதன் ஆகிய நிலைகளும் நுண்ணறிவைதரும். இத்துடன்கூட ராகுவின் தாக்கத்திலிருந்து லக்னம் சுதந்திரம் பெற்று இருக்கவேண்டும். அதேபோல மிக குறைவான் அளவில் கேதுவின் தாக்கமும் இருக்கவேண்டும்.லக்னம் அல்லது சந்திரனுக்கு தாக்கந்தரும் நிழல்கிரகங்கள்,அனுகூலமான நல்ல முடிவுகளை அளி ீக்கவல்லது என்றாலும், நினைப்புத்தான் போழப்பை கெடுக்கும் என்பது போல், ஒருவரின் நினைப்பையும், பகுத்தறிந்து பார்க்கும் சக்தியையும் நாசம் செய்து விடுகின்றன. அவை, ஒருவரிடம்,எதையும் மிகைப்படுத்தி கூறும் தன்மையை அதிகரித்தும், எதையும் ஆச்சர்யகரமாக பார்க்கும் தன்மையும் கோடுத்து அவர்களின் திறமைகளை முடக்கி ,அதன் காரணமாக் எதற்கும் சரியான் முடிவெடுக்க முடியாத நிலைக்கு அவரை தளளிவிடுகிறது. இதன் காரணமாக,அந்த நபர் எந்த முடிவும் எடுப்பதற்கும், தனது விருப்பு வெறுப்புகளே இறுதியானது என்று நம்பிக்கொண்டு,அந்த தவறான் நம்பிக்கையிலேயே திருப்தியடைந்து, காரியத்தைக் கோட்டைவிட்டுவிடுவார்கள் என்பதே உண்மை.
இனி பாவ நிலைகளைப் பற்றி பார்ப்போம்.
ஐந்தாம் பாவம் புத்திகூர்மையைக் குறிப்பதாகும்.ஒருவருக்கு விவேகமிக்க, அனுபவ பூர்வமான புத்தி அல்லது மனம் எப்போது வருமேனில்……………………
1. சுபர் இடம் பெற்ற அல்லது சுபரால் பார்க்கபட்ட, சுபகிரகராசியாக ஐந்தாம் பாவம் அமைய……………..
2. ஐந்தாம் அதிபதி சுபகர்த்தாரியில் இருக்க அல்லது உச்சம் பெற்றிருக்க……..
3. கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ குரு இருக்க…………
4. குருவின் அனுகூலமான தாக்கம் ஐந்தாம் பாவத்திற்கு அமைய……………..
5. ஐந்தாம் அதிபதி பலம்பெற்று கேந்திரத்திலிருக்க மற்றும் புதன் ஐந்திலிருக்க
6. ஐந்தாம் அதிபதி சுபருடன்கூடி கேந்திரத்தில் இருக்க………………..
7. ஐந்தாம் அதிபதி கோபுராம்சம் பெற அல்லது வேறு உயரிய அம்சம் பேற்……
8. இந்த அனைத்து நிலைகளிலும்,புதனும்,சந்திரனும் நல்ல நிலை பெறுவதே மிக முக்கியமானதாகும்.
எனவே, எந்த செயலுக்கும்,குழப்பங்களுக்கும் இறுதி முடிவளிக்கும் திறமையை மனிதனுக்கு அளிப்பது மனமும், புத்தியுமாகிய சந்திரனும், புதனும்தான் என்பது நிதர்சனமன்றோ !.