Saturday, March 19, 2011

விதி என்றால் என்ன?

எந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் 

விதி விளையாடி விட்டது. அது அவன் விதி. விதிப்படி நடந்தது என்றெல்லாம் சொல்கிறோமே! இந்த விதி என்பது என்ன? யார் இதை நிர்ணயிக்கிறார்கள்? ஒருவனுக்கு விதி எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? விதி தான் ஒருவனது வாழ்க்கையை நிர்ணயிக்க வேண்டும் என்றால் நாம் ஏன் ஒரு காரியம் செய்ய முயற்சிக்க வேண்டும். விதிப்படித்தான் எல்லாம் நடக்கும் என்றால் எனக்கு ஏன் ஆசைகள் வர வேண்டும்? நான் அதை அடைய உழைக்க வேண்டும்? எல்லாம் விதி தான் என்றால் வாழ்வில் எனது பங்கு என்ன? இன்னும் இந்த விதியைப் புரிந்து கொள்ள நிறைய கேட்டுக் கொண்டே போகலாம். 

முதலில் இந்த விதி என்ற நம்பிக்கை மூலமாக நமக்கு மனதளவில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதைப் பார்த்து விடுவோம். பிறகு விதி நிர்ணயிக்கப்படும் விதத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.

விதி என்பது பெரும்பாலும் நமது மன சமாதானத்திற்க்காகவே பயன்படுவதை நம்மால் பார்க்க முடியும். அவன் விதி முடிந்து விட்டது போய் விட்டான். தோற்க்க வேண்டும் என்று விதி அதனால் தான் தோற்றேன். எனக்கு விதிக்கப்படவில்லை அதனால் தான் கிடைக்கவில்லை. அவன் விதி நல்லாயிருக்கு அதான் நல்லா இருக்கான் என்றெல்லாம் சமாதானம் செய்து கொள்வதற்க்காக நாம் விதியைப் பயன்படுத்துகிறோம்.

உண்மையில் இப்படி நமது செயல்பாடுகளால் ஏற்படும் விளைவுகளுக்கு விதி என்ற ஒன்றின் மீது பழிபோடா விட்டால் நம்மில் பலர் மிகப்பெரும் மனநோயாளிகளாக சட்டையைக் கிழித்துக் கொண்டு அலைந்திருப்போம் என்பதே உண்மை. இத்தகைய சமாதானத்திற்கு விதி பயன்படுகிறது.

இப்போது விதி என்பது எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம். விதி மூன்று வகைகளில் மனித வாழ்வில் விளையாடுகிறது. 

ஒன்று சுய நிர்ணய விதி. இரண்டு சமூக விதி. மூன்று பிரபஞ்ச விதி. இவற்றை ஒன்வ்வொன்றாகப் பார்ப்போம்.

சுய நிர்ணய விதி.

விதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதே கற்பனைக்கு விளங்காத ஒரு வலைப்பின்னலாக இருக்கிறது. இதில் சுய நிர்ணய விதி என்பது என்ன? 

எனது வெற்றிக்கும் தோல்விக்கும் நானே விதியை நிர்ணயம் செய்து கொள்கிறேனா? எப்படி எனது வாழ்க்கைக்கான விதியை என்னால் நிர்ணயம் செய்து கொள்ள முடியும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்...முடியும் . உங்கள் விதி உங்களாலேயே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல். புரிந்திருக்காது. புரியவைக்க முயற்சிக்கிறேன். 

சுய நிர்ணய விதியைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அடிப்படையில் மறுபிறப்பு என்பதை நம்ப வேண்டிய அவசியம் உள்ளது. 

பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனைப்பார்த்துச் சொல்கிறார் "அர்ஜுனா! நீயும் நானும் இந்த மன்னில் பலமுறை பல வடிவங்களில் பிறந்திருக்கிறோம்! அது எனக்குத் தெரியும். உனக்குத் தெரியாது" என்று சொல்லி அர்ஜுனனின் முற்பிறவி பற்றி எடுத்துரைக்கிறார்.

மேலும் மனிதனின் உடல் தான் இறக்கிறது. ஆத்மா என்ற நமது உணர்வு ஸ்வரூபம் இறப்பதில்லை. அத்தகைய ஆத்மா உடலை விட்டுப் பிரியும் போது தான் வாழ்ந்த பூமியில் தனக்கு சொந்த மானவற்றின் மீது பற்றுதல் கொண்டு மறைந்தாலோ, பிடிக்காத விஷயத்தின் மீது அதீத கோபத்துடன் மறைந்தாலோ தனது அடுத்த பிறவியில் தான் விட்டுப்போன உணர்வுகளுக்கு பதில் கிடைக்குமாறு வாழ முயற்ச்சிக்கும். முற்பிறவியின் ஞாபகங்கள் இருக்காததால் தான் எதற்க்காக இப்படி நடந்து கொள்கிறோம் என்று சில நேரங்களில் வாழ்பவர்களுக்குத் தெரியாது.

உதாரணமாக நல்ல தெய்வபக்தியுடன் கூடிய அமைதியாக தர்மத்தைக் கடைபிடித்து வாழும் ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவர் அடிதடியும் முரட்டு குணமுமாக போலீஸ் கேஸ் என்று அலையும் நிலையில் இருப்பார். உங்க குடும்பத்துக்கே இல்லாத புத்தி உனக்கு எங்கே இருந்துடா வந்தது என்ற புரியாமல் கேட்பார்களே அது இப்படித்தான்.

ஒருவன் முற்பிறவியில் என்ன குணத்தில் இருந்தானோ அந்த குணத்தின் மிச்சம் இப்பிறவியில் அவனது அடிப்படைக் குணத்தை நிர்ணயிக்கும். 

இப்பிறவியில் எந்த வகையான குடும்பத்தில் பிறக்கிறானோ அக்குடும்பத்தின் வளர்ப்பு ஒருவனது குழந்தைப்பருவத்தைப் பாதிக்கிறது. அந்த பாதிப்பே அவன் இளமைபருவத்தின் நடவடிக்கைகளுக்கு விதியாக அமைகிறது. அந்த விதிப்படி அவன் இளமைப்பருவத்தில் செய்யும் காரியம் முழுவதும் அவனது வாழ்க்கை முழுவதுக்குமான விதியாக அமைகிறது. இவ்வாறு ஒரு மனிதனின் வாழ்க்கையில் நன்மை தீமைகளுக்கான அடிப்படை விதி நிர்ணயிக்கப்படுகிறது.

சமூகத்தாலான விதி

நான் நல்லவனாகத்தானே இருக்கிறேன் எனக்கு ஏன் கெட்டது நடக்க வேண்டும் என்று சில நேரங்களில் குழம்பிப் போவோம். குடும்பம் என்பது மிகச் சிறிய சமூகம். சமூகம் என்பது மிகப் பெரிய குடும்பம். எனவே ஒரு சமூகத்தில் நடக்கும் எல்லா காரியங்களும் நம் குடும்பத்தில் பாதிப்பை விளைவிக்கும். இந்த சங்கிலித்தொடர் இருக்கிறதே இது சமூகத்தால் உண்டாகும் விதி.

உதாரனமாக நமக்கு முந்தைய தலைமுறையில் ஆண் குழந்தை தான் பெரிசு என்று பெண்குழந்தைகளைக் கருவிலேயே கலைத்தார்களானால் இந்த தலைமுறைக்குத் திருமணத்திற்க்குப் பெண்ணே கிடைக்காமல் போகிறது. ஆனால் தனி ஒரு மனிதனுக்கு, தனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று புரியாமல் போகும். ஆனால் இது சமூகத்தின் நடவகிக்கையால் உண்டான விதி. அது நமக்கு சம்மந்தமில்லாமல் நம்மை பாதிக்கும் போது அது சமூகத்தால் உண்டான விதி ஆகும்.

அதேபோல இரு வேறு இனங்களுக்கு இடையே நடக்கும் அடிமைப்போர்கள் அதனால் ஏற்படும் மரணமும் இதற்கு உதாரணமகச் சொல்லலாம். 

இவைகள் கடந்தகாலத்தின் மூலமாக நிர்ணயிக்கப்பட்ட விதிகளாகிறது.

பிரபஞ்சத்தால் உண்டாகும் விதி:

சுனாமி. இதை விட இதற்கு சிறந்த உதாரணம் சொல்ல முடியாது. ஆம். இயற்க்கையின் அபரிமிதமான சீற்றத்தால் குவியல் குவியலாக இறந்து போகும் மனிதர்களுக்கு எந்த விதத்திலும் காரண காரியம் சொல்ல முடியாது. ஆனால் இயற்க்கையின் மாற்றம் ஒரு சங்கிலித்தொடர் போல காலங்காலமாக* நடந்து வரும். அவைகளும் ஒரு விதிக்கு உட்பட்டே செயல் பட்டு வருவதால் இது பிரபஞ்சத்தால் உண்டாகும் விதியாகும்.

இப்படி ஒருவருக்கு நடக்கும் எந்த ஒரு செயலும் இம்மூன்று விதிக்குட்பட்டே நடக்கும். இந்த அடிப்படை விதிகளைக் கொண்டு வாழ்க்கையில் ஒருவருக்கு நடக்கும் சம்பவங்களை மேக்ரோ முதல் மைக்ரோ வரை கணக்குப்பன்னிப் பாருங்கள். இந்த மூன்று விதிகளையும் மீறி ஒருவரால் வாழ்ந்திருக்க முடியாது.

இப்படி பல நேரங்களில் நமது கட்டுப்பாடில் இல்லாமலேயே நம்மை பாதிக்கும் பல சம்பவங்கள் நமக்கு விதிக்கப்படுவதாலேயே நாம் விதியை நம்புவது நமது விதியாகிறது.

ஆக
கடந்தகால இயற்க்கையின் நிகழ்வு, சமூக நிகழ்வு, மனித வாழ்க்கை இவற்றின்
விளைவுகள் யாவும் நிகழ்காலத்தின் விதியை நிர்ணயிக்கின்றன. நிகழ் காலத்தில்
நாம் வாழும் வாழ்வும் அதன் விளைவும் எதிர்கால விதியை நிர்ணயிக்கிறது. எனவே
இதை நன்றாக உணர்ந்து நிகழ்காலத்தில் முடிந்த வரை தர்மங்களிலிருந்து
மீறாமல் வாழ்வது எதிர்காலத்தில் நமக்கு நாமே நல்ல விதியை எழுதிக்கொள்வது
போல் ஆகும். எழுதுவோமா?

அதெல்லாம் சரி, விதியை மதியால் வெல்ல முடியுமா? முடியும். உதாரணம். மகாத்மா காந்தி. அடிமைகளாக இருப்பது இந்தியர்களின் விதியாக இருந்தது. தனது நிகழ்கால நடவடிக்கைகளின் மூலம் எதிர்கால இந்தியர்களின் விதியை அவர் மாற்றினார். 

சுய நிர்ணய விதி சமூக விதியை மாற்றியது. அதனாலேயே அவர் மகாத்மா என்று அழைக்கப்படுகிறார். சரியா!

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.

காலம்

எந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் 

தமிழ் எண்கள்

தமிழ் எண்கள்

ஏறுமுக இலக்கங்கள்
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thouand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் – one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் – one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம்

இறங்குமுக இலக்கங்கள்
1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்

நமது வாழ்நாளில் நிச்சயமாகப் புலப்படாத விதி ஒன்று ஆட்சி புரிகிறது

மனிதர்கள் தாங்கள் எவ்வளவோ முயற்சிகள் செய்த போதிலும் தாங்கள் நினைத்தபடி ஒன்று நடக்க வில்லை யென்றால், “எல்லாம் என் தலை விதி” என்று நொந்து கொள்வ தைப் பார்க்கிறோம்.

”நமது வாழ்நாளில் நிச்சயமாகப் புலப்படாத விதி ஒன்று ஆட்சி புரிகிறது” என்கிறான் கதே.

தலையெழுத்தும் நம் கண் ணுக்குத் தெரியவில்லை. தலை விதியும் கண்ணுக்குப் புலனாவதில்லை. நல்ல விஷயங்கள் நம் முயற்சி யில்லாமலே, எதிர்பாராமல் நடக்கும் பொழுது நாம் தலையெழுத்து என்றோ தலைவிதி என்றோ சொல்வதில்லை. மாறாகத் துன்பம் வந்தபோது விதி என்கிறோம்.

திருவள்ளுவர் ஊழ் என்று ஒரு அதிகாரமே பாடியுள்ளார்.

ஊழிற்பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்

ஊழைப்போல மிகுந்த வலிமையுள்ளவை எவை? ஊழ் வினையிலிருந்து தப்ப வேறு வழியை நாடிச் சென் றாலும் ஊழானது முற்பட்டு வந்து முதலில் நிற்கும் என்கிறார்.

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் இயற்றிய

இளங்கோவடிகளும்

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்

என்று அறிவுறுத்துகிறார். முன்வினைப் பயன்கள் தவறாமல் இப்பிறவியில் விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறார். கோவலன் அநியாயமாகக் கொல்லப்பட அவனுடைய ஊழ்வினையே காரணம் என்று வலியுறுத்துகிறார்.

இராமகாதை பாடிய கம்ப னுக்கும் ஊழ்வினை, விதி இவற்றில் ஆழ்ந்த நம்பிக்கை இருப்பதைப் பல இடங்களில் வெளிப் படுத்துகிறான். இதை அவனுடைய கதாபாத்திரங்கள் வாயிலாக நம்மால் உணர முடிகிறது. கவிஞன் தன் வாயிலாகவும் வெளிப்படுத்துவதையும் காண முடி கிறது. அனேகமாக எல்லோருமே துன்பம் வந்த நேரத்தில் தான் விதி பற்றிப் பேசுகிறார்கள்.
ஊழ்வினை தூண்ட
விடிந்தால் ராமனுக்கு முடி

சூட்டு விழா. இதை எப்படியாவது தடுத்து விட வேண்டு மென்று கூனி திட்டம் தீட்டுகிறாள். கைகேயி யிடம் சென்று தசரதன் அவளுக்கு முன்னரே கொடுப்பதாக வாக்களித்திருந்த இரு வரங்களையும் கேட்கும் படி சொல்கிறாள். பரதனுக்கு முடி சூட்ட வேண்டு மென்று ஒரு வரம். ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டுமென்று இரண்டாவது வரம்.

ராமனைத் தன் மகனாகவே எண்ணி அன்பு பாராட்டும் கைகேயியால் இதை ஏற்க முடியவில்லை. கூனியை மிகவும் கடிந்து கொள் கிறாள். மூத்தவனான இராமன் இருக்க பரதனுக்கு முடி சூட்டுவது மரபில்லை என்று மறுக்கிறாள். ஊழ்வினை காரணமாகவே, விதி உன்னைத் தூண்டிய

தாலேயே நீ இப்படி மதி கெட்டுப் பேசுகிறாய் என்று எச்சரிக்கிறாள்.

வந்து ஊழ்வினை தூண்ட மனக்கு
நல்லன சொல்லினை
மதி இலா மனத்தோய்!
என்று கூனியை அடக்குகிறாள்.
விதி செய்த பிழை

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கேற்ப கைகேயியின் தூய சிந்தையும் திரிந்து விடுகிறது. தனது சாகசத்தால் தசரதனிடமி ருந்து இரு வரங்களையும் பெற்று விடுகிறாள் கைகேயி. இதைக் கேட்ட இலக்குவன் யுத்தசன்னத்த னாகி அயோத்தி வீதிகளில் வலம் வருகிறான். தம்பி யின் வில்லொலி கேட்ட ராமன் இலக்குவனிடம் வந்து சாந்தமாகப் பேசுகிறான்

.”இலக்குவா! ஒரு நதியில் நீர் இல்லை என்றால் அது நதியின் குற்றமா? மலையில்

மழை பெய்தால் தானே நதியில் நீர் வரும்? அதே போல இந்த முடிசூட்டு விழா நடக்கவில்லை யென் றால் அதற்காக அன்னை, தந்தை, பரதன் இவர்களைக் கோபிப்பதால் யாதொரு பயனும் இல்லை. இது விதி யின் பிழையப்பா. இதை விதியின் பிழையாகக் கொள்ள வேண்டுமே தவிர யாருடைய மதியின் பிழையும் இல்லை” என்று அமைதியாக

”நதியின் பிழையன்று
நறும்புனல் இன்மை அற்றே
பதியின் பிழையன்று,
பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழையன்று, மகன்
பிழையன்று மைந்த
விதியின் பிழை; நீ இதற்கு என்னை
வெகுண்டது?” என்றான்

இதைக் கேட்ட இலக்குவன் மேலும் ஆத்திரமடைந்து

“விதிக்கும் விதியாகும் என் வில் தொழில் காண்டி”

என்று சூளுரைக்கிறான்.
இழைக்கின்ற விதி
கைகேயியின் அரண்மனையில் நடந்த விஷயங்கள் எதையும் அறியாத கோசலை, ராமன் மகுடம் சூடி வரப்போகிறான் என்று எதிபார்த்து வழிமேல் விழி வைத்து ஆவலோடு காத்திருக்கிறாள். ராமன் மட்டும் தனியாக வருவதை அவள் பார்க்கிறாள்.

னால் அவன் தனியாக வரவில்லை என்கிறான் கவிஞன்.அவனுக்கு முன்னால் விதி செல்கிறதாம் தருமம் அவனுக்குப் பின்னால் அழுது கொண்டே வருகிறதாம். நன்மை தீமைகளை மெல்ல முன் நடத்திச் செல்லும் விதியை இழைக்கின்ற விதி என்கிறான் கவிஞன்.

இழைக்கின்ற விதி முன் செல்ல
தருமம் பின் இரங்கி ஏக
குழக்கின்ற கவரியும் கொற்ற
வெண் குடையும் இன்றி

வருகிறான் ராமன். ஒரே இரவில் விதி தன் விளை யாட்டை நிகழ்த்தி விடுகிறது!

முனிவர் சொல்லும் விதி

இராம சீதா இலக்குவன் மூவரும் வனத்தில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தை அடைகிறார்கள். மூவருடைய தவக்கோலத்தைக் கண்ட பரத்வாஜர் அளவற்ற துயரம் அடைந்து, “இந்தக் கோலத்திலா உங்களைக் காண வேண்டும்!” என்று கண்ணீர் சிந்துகிறார். நடந்தவற்றை யெல்லாம் கேள் விப்பட்ட முனிவர் “அந்தோ! விதி தரு நவை! இற்றது செயல் உண்டோ இனி?” என்று விதியை நொந்து கொள்கிறார். நடந்தவை எல்லாமே தசரதன், கைகேயி யால் விளந்ததன்று. விதியால் விளைந்தவை என்று விதியின் வலிமை பற்றிப் பேசுகிறார்.

ஓங்கிய விதி.

மூவரும் வனம் சென்ற பின் கேகயநாடு சென்றிருந்த பரதன் அயோத்திக்கு வருகிறான். தந்தை விண்ணுலகு அடைந்து விட்டான் என்ற செய்தி கேட்டு வருந்துகிறான். எனக்குத் தாயும் தந்தை யும் என் கடவுளும் அண்ணனுமான ராமனைக் கண் டால் தான் என் துயரம் குறையும் என்கிறான் தாயிடம். கைகேயி, ”மூவரும் வனம் சென்று விட்டனர்” என்கிறாள். இதைக் கேட்ட பரதன்
தீங்கு இழைத்த அதனினோ?
தெய்வம் சீறியோ?
ஓங்கிய விதியினோ? யாதினோ”

என்று பதறுகிறான். பிறருக்குத் தீங்கு செய்ததற்காகத் தண்டனையாக ராமன் வனம் சென்றானோ? (நிச்சயம்

அப்படி இருக்காது) தெய்வக் குற்றமா? அல்லது எல்லாவற்றிலும் மேம்பட்ட விதியின் காரணத்தாலா? என்று விதியின் வலிமையை வியந்து வினவுகிறான்.

இராவணன் விதி

பஞ்சவடியில் மூவரும் வாழ்ந்து வருகையில் சூர்ப்பணகை ராமன் அழகைக் கண்டு மோகம் கொள்கிறாள். சீதை இருக்கும் வரை தன்னை அவன் ஏறெடுத்தும் பாரான் என்பதை உணர்ந்து சீதையை அப்புறப்படுத்தும் எண்ணத்துடன் சீதையை நெருங்கும் போது இலக்குவனால் மூக்கறு படுகிறாள். இராவணனிடம் சென்று சீதையின் அழகை யெல்லாம் விரிவாக எடுத்துச் சொல்லி அவனிடம் காம வேட்கையை உண்டாக்குகிறாள். சீதையை மனச்சிறை யில் வைத்த ராவணன் காம நோயால் தவிக்கிறான்.
’விதியது வலியினாலும்
மேல் உள விளைவினாலும்

இராவணனுடைய காம நோய் மிகுந்தது என்கிறான் கவிஞன். எவ்வளவோ வீரம் உள்ளவனானாலும் சீதை மேல் வைத்த ஆசையால் அழியப் போகிறான். (விதி

யின் வலிமையால்) வீடணன், மாரீசன், கும்பகர்ணன் மாலியவான், இந்திரஜித் என்று எத்தனை பேர் அவனுக்கு அறிவுரை சொல்லியும் அவை எல்லாமே விழலுக்கு இறைத்த நீரானது. காரணம் விதியின் வலிமை என்கிறான் கவிஞன்.

மாரீசனும் இதே கருத்தைச் சொல்கிறான். ராமனது ஆற்றலைப் பற்றி மாரீசன் எவ்வளவோ சொல்லியும் இராவணன் தன் எண் ணத்தை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. ராம பாணத்தின் ஆற்றலை ஏற்கெனவே உணர்ந்த மாரீசன்

மன்னா! நீ உன் வாழ்வை முடித்தாய்
மதி அற்றாய்
உன்னால் அன்று ஈது ஊழ்வினை
என்றே உணர்கின்றேன்.

இராவணனுடைய தவறான முடிவுக்கு விதிதான் காரணமென்று உணர்ந்து பேசுகிறான் மாரீசன். இந்த மாரீசனே பின்னால் “யார் விதியின் விளைவை ஓர்வார்” என்று இராவணன் கட்டளைக்கு உடன் படுகிறான்
விதியை வெல்ல வல்லோமோ?
மாரீச மாயமானின் பின் சென்ற ராமன், அது மயமான் என்பதை உனர்ந்து அதை வீழ்த்த, அது சீதா! லக்ஷ்மணா! என்று ராமன் குரலில் அலறுகிறது. ராமனுக்கு ஏதோ ஆபத்து என்று என்ணிப் பதறிய சீதை இலக்குவனைப் போய் ராம னைப் பார்த்து வரும்படி சொல்கிறாள். ஆரம்பத்திலி

ருந்தே இது மாயமான் என்று உணர்ந்த இலக்குவன் இதுவும் மாயக்குரல் என்று எவ்வளவோ சொல்லியும் சீதை அதை ஏற்க மறுக்கிறாள். இலக்குவன், ராமனின் ஆற்றலை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவள் கேட்பதாயில்லை. இலக்குவன் செல்லாவிட்டால் தான் காட்டுத் தீயில் விழுந்து விடுவதாக மிரட்டுகிறாள்.

சீதையும் ராமனின் புஜ பலம் பற்றித் தெரியாதவளா? சிவதனுசை முறித்துத் தானே அவளை மணந்து கொண்டான்? பரசுராம கர்வ பங்கம் அவள் அறியாததா? கர தூடண வதத்தை தனி ஒருவ னாகவே ராமன் ஜயித்ததை அவள் சில நாட்களுக்கு முன் பார்த்திருக்கிறாளே! பின் இலக்குவன் எவ்வ ளவோ மன்றாடியும் ஏன் சமாதான மடைய வில்லை? இலக்குவனைத் தன் சொற்களால் காயப் படுத்தினாளே! ஏன்? அது தான் விதி!

“விதிக்கும் விதியாகும் என் வில் தொழில் காண்டி!” என்று ராமனிடம் சவால் விட்ட இலக்குவனே இப்பொழுது சீதைமுன் ஒன்றும் செய்ய இயலாமல் விதியின் வலிமையை ஒப்புக் கொள் கிறான். அடங்கிப் போகிறான்.

”அடியனேன் ஏகுகின்றேன்

வெஞ்சின விதியினை
வெல்ல வல்லோமோ?
என்று விதியின் ஆற்றலை வியந்து, இராமனைத் தேடிப் போகிறான்.

இலக்குவன் வருகையைக் கண்ட இராமன் நடந்ததை ஊகித்து உணர்ந்து விதி இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ என்று “என்னை விதியார் முடிப்பது! என்று திகைக்கிறான்.

ஜடாயு சொல்லும் விதி

இராம இலக்குவர்கள் திரும்பி வரும் வழியில் இராவணனால் வீழ்த்தப் பட்டுக் கிடக் கும் ஜடாயுவைக் காண்கிறார்கள். நடந்ததை அவன் மூலம் அறிந்ததும் இராமனுக்குச் சீற்றமும் ஆற்றா மையும் ஏற்படுகிறது. உலகத்தையே சுட்டுப் பொசுக்கிவிடலாமா? என்று ஆத்திரம் வருகிறது. இதைக் கண்ட ஜடாயு “இந்தக் காட்டில் ஒரு பெண் ணைத் தனியே விட்டு விட்டு மானின் பின் போய் பழி தேடிக் கொண்டீர். அதற்கு உலகம் என்ன செய்யும் என்று அறிவுரை சொல்கிறான். மேலும் வருவது வந்தே தீரும். வந்ததன் பின் விதிவசம் என்று எண்ணி ஆறுதல் அடைந்து மதி வலியால் அதைப் போக்கலாம்.

தலைவிதியை நிர்ணயம் செய்யும் பிரமனையும் ஆட்டுவிக்கும் வலிமை உடை யது விதி. அயன் தலையையே அரியும் ஆற்றலு டையது விதி!

தலை அரிவு செய் விதியினார்க்கும்
அரிது உண்டாகுமோ?

என்று தேவர்களும் விதியின் பிடியில் சிக்கியதைக் குறிப்பிடுகிறான் ஜடாயு.
நல்லூழ்
விதியின் வலிமையால் தீயவை தான் நிகழும் என்பதில்லை. நன்மையும் விளையும் என்கிறான் சுக்கிரீவன். தான் ராமனை அடைந்தது தனது நல்லூழால் என்கிறான்.

நாயகம் உலகுக்கு எல்லாம்
என்னலாம் நலம் மிக்கோயை
மேயினன் விதியே நல்கின் மேவல்
ஆகாதது என்?

என்று வினா எழுப்புகிறான். நல்லூழ் இருந்ததாலேயே ராமனை அடைய முடிந்தது என்று அதிசயிக்கிறான்.

இதே கருத்தை வாலியும் சொல்கிறான். ராமன் அம்பால் வீழ்ந்த நிலையில் சுக்கிரீவனுக்குச் சில அறிவுரைகள் சொல்கிறான். பரம் பொருளே ராமனாக வந்திருப்பதாகவும், அவனுடைய நட்பு சுக்கிரீவனுக்குக் கிடைத்தது நல்விதியினால் என்கிறான். விதி உதவி செய்தால் அடைய முடியாதது எதுவுமில்லை!
அருமை என், விதியினாரே
உதவுவான் அமைந்த காலை
இருமையும் எய்தினாய்!
என்று நல்லூழின் திறத்தைப் பாராட்டுகிறான்.
செயிர் தீராவிதி ஆனால் தாரையோ விதியைப் பழிக்கிறாள். எதிரில் நின்று போர் செய்பவரின் வர பலம் தேக பலம் இவற்றில் பாதி வாலியைச் சேரும் என்று வாலி எவ்வளவோ வரபலம் பெற்றிருந்தும் அவன் உயிரைப் போக்கி, தன்னைத் துயரத்தில் ஆழ்த்தியது விதியின் கொடுமையே என்று கதறுகிறாள்.

”செயிர்தீர் விதியான தெய்வமே”
என்று கதறுகிறாள்.

ஜாம்பவான் கூற்று
அங்கதன் தலைமையில் வானர வீரர்கள் சீதையைத் தேடி தென் திசையில் செல்கிறார் கள் செல்லும் வழியில் ஒரு பிலத்துவாரத்துள் சென்று வழி தெரியாமல் திகைக்கிறார்கள். வயதிலும் அனுப வத்திலும் மூத்தவனான, யுகங்கள் கண்ட ஜாம்பவா னும் கூட இந்த இடையூறு கண்டு கலங்கி

”ஏம்பல் இனி மேலை விதியால் முடியும்”

இராவணன் செய்த இந்தச் சூழ்ச்சியில் சிக்கிக் கொண்ட நமக்கு இனி உய்வில்லை. இதில் அழிந்து ஒழிவதே விதி என்று வருந்துகிறான்.

விதிவலி கடத்தல் அரிது
அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கும் சீதை தன் நிலையை எண்ணி வருந்துகிறாள். ராமன் இதுவரை வராமல் இருக்க என்ன காரணங்கள் என்று எண்ணிப் பார்க்கிறாள். நான் இலக்குவனைக் கூறிய கொடுஞ் சொற்களைக் கேட்டு ‘அறிவு இல்லாதவள்’ என்று முழுமையாகத் துறந் தானோ? ஊழ்வினை என்னைத் துன்புறுத்தியே தீர்வது என்று தீர்மானித்து விட்டதோ? என்னுடைய விதியின் காரணமாக அவர் என்னைத் துறந்திருப்பாரோ? என்று பதை பதைக்கிறாள்

இளவலை எண்ணலா வினையேன்

சொன்ன வார்த்தை கேட்டு
அறிவு இலள் எனத் துறந்தானோ?
முன்னை ஊழ்வினை முடிந்ததோ?
என்று தவிக்கிறாள்.
விதியின் வெம்மை

அசோகவனத்தில் பிராட்டியைக் கண்டு அனுமன் கணையாழி காட்டி, ராமன் சொன்ன அடையாளங்களையும் சொல்கிறான். அதன் பின், மாய மானின் பின்னே போன ராமன் என்ன செய்தான் என்பதையும் சொல்கிறான். மாரீசன் தன் குரலில் அலறியதைக் கேட்டதும் சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட ராமன், இக்குரல் சீதை இலக்குவனுக்குக் கேட்காமல் போகட்டும் என்று தன் கோதண்டத்தின் உண்மையான ஒலியை ஒலிக்கச் செய்தான். ஆனாலும் விதியின் விருப்பமே நிறைவேறியது. ராமனின் வில்லொலி கேட்கு முன்பாகவே இலக்குவன் கிளம்பி விடுகிறான். விதி தன் கைவரிசை யைக் காட்டி விடுகிறது!
விளைந்தது விதியின் வெம்மை!
வெவ்விய விதி

வீழ்ந்து கிடக்கும் ஜடாயுவிடம் நடந்ததைக் கேட்ட பின் சீதையைக் கவர்ந்து சென்ற வன் எந்த வழியில் சென்றான் அவன் இடம் எது? என்று கேட்ட கேள்விகளுக்கு விடை சொல்லு முன்பா கவே ஜடாயு உயிர் பிரிந்து விடுகிறது. அதனால் ராம இலக்குவர்கள் சீதையைத் தேடமுடியாமல் கால தாமத மானது. இதை

வெவ்விய விதியின் கொட்பால்
வீடினன் கழுகின் வேந்தன்
என்கிறான் அனுமன்.
உந்தும் விதி
ராம ராவண யுத்தம் தொடங்கி விட்டது. முதல் நாள் போரில் அனைத்தையும் இழந்து வெறுங்கையனாய் இலங்கை வந்த இராவணன், கும்பகருணனைப் போருக்கு அனுப்பத் தீர்மானித்து அவனை உறக்கத்திலிருந்து எழுப்பி போருக்குப் போகச் சொல்லுகிறான். கும்பகருணன் “ஜானகி துயர் இன்னும் தீரவில்லையா? என்று கேட்டு ராவணனுக்கு எவ்வ ளவோ அறிவுரைகள் சொல்கிறான். ஆனால் எல்லாம் விழலுக்கு இறைத்த நீரானது.

தன் முடிவும் போரின் முடிவும் என்னவாகும் என்பதை உணர்ந்த கும்பகருணன், செஞ்

சோற்றுக்கடன் தீர்க்கப் போருக்குப் புறப்படுகிறான். விதியின் வலிமை உணர்ந்த அவன்

”வென்று இவண் வருவன்

என்று உரைக்கிலேன் விதி
நின்றது, பிடர் பிடித்து உந்த
நின்றது”
என்று சொல்லிவிட்டுப் போர்க்களம் சென்று செஞ் சோற்றுக்கடனைக் கழிக்கிறான்! வீர சுவர்க்கம் புகுகிறான்!
நல்ல விதி
கும்பகருணனும் அதிகாயனும் மாண்ட பின் இந்திரஜித் போர் செய்ய வருகிறான். இலக்குவனை வீழ்த்த பிரும்மாஸ்த்திரத்தை விடு கிறான். தெய்வப்படைக்கலன்களுக்கு வழிபாடு செய்து விட்டு வந்த ராமன் திகைக்கிறான். வானர வீரர்கள் அனைவரும் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு புலம்புகிறான். சோகம் தாங்காமல் மூர்ச்சையாகிறான். வீரர்களுக்கு உணவு கொண்டுவந்த வீடணன் இதைக் கண்டு அதிர்ச்சி யடைந்து அனுமனைத் தண்ணீர் தெளித்து மூர்ச்சை தெளிவிக்கிறான். ”ஜாம்பவானைக்

கண்டால் நம் துயரம் தீரும்” என்று அனுமன் சொல்ல இருவரும் ஜாம்பவானைக் கண்டுபிடிக்கிறார்கள்.

சாம்பனை விதியில் சேர்ந்தார்

என்கிறான் கவிஞன். அவ்வளவுபெரிய போர்க்களத்தில் ஜாம்பவானைக் கண்டு பிடிப்பது மிகவும் கடினம் என் றாலும் நல்ல விதி கூட்டுவித்ததால் தான் இருவரும்

ஜாம்பவானைத் தக்க நேரத்தில் கண்டுபிடிக்க முடிந்தது.

அவனைக் கண்டதால் தான், அவன் சொல்படி அனுமன் மருத்து மலையைக் கொண்டுவந்து வானரர்களை எழுப்ப முடிந்தது.

வீடணனுக்கு அறிவுரை

இந்திரஜித்தும் மூலபல சைனியமும் மாண்டபின் ராவணன் போருக்கு வரு கிறான். ராம ராவண யுத்தம் பயங்கரமாக நிகழ்கிறது.

இராவணன் மார்பில் ராகவன் புனித வாளி புகுந்து அவன் உயிரைப் பருகிப் புறம் போகிறது.

மலை மேல் மலை வந்து விழுந்தது போல் வீடணன் இராவணன் உடல் மேல் விழுகிறான். ராவணன் பெருமைகளை யெல்லாம் பலபடி சொல்லிப் புலம்புகிறான். பழுத்த அனுபவசாலி

யான ஜாம்பவான், “வீடணா, விதியை யாரால் வெல்ல முடியும்? நீ என்ன விதியின் வலிமையை அறியாத வனா? நீ தர்மம் தெரிந்தவன். நீயே இப்படி ஒன்றும் தெரியாதவன் போல் புலம்பலாமா?

விதிநிலையை மதியாத கொள்கைத்து

ஆகிச் சென்று ஓங்கும் உணர்வினையோ?

தேறாது வருந்துதியோ?

என்று தேற்றுகிறான்.

இப்படி கைகேயி, இராமன் ,இலக்குவன், சீதை, பரத்வாஜ முனிவர், பறவையான ஜடாயு, வானரர்களான அனுமன், வாலி, சுக்கிரீவன், தாரை, கரடி அரசனான ஜாம்பவான், அர்க்கர்களான மாரீசன், கும்பகருணன் என்று பல பாத்திரங்களின் மூலமாக விதியின் வலிமையைப் பேச வைக்கிறான் கம்பன்