லக்னம் சூரியனைப் பற்றியது.
60 நாழிகைகள் கொண்டது ஒரு நாள்.
2 1/2 நாழிகை என்பது ஒரு மணி நேரம்
ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள்
ஒரு முஹூர்த்த நேரம் 1 3/4 நாழிகை அல்லது42 நிமிடங்கள்.
60 நாழிகைகள் 12 லக்னங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு லக்னத்திற்கும் பெயரும்,
நாழிகைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பகல் நேரத்தில் 6 லக்னங்களும், இரவு
நேரத்தில் 6 லக்னங்களும் உள்ளன.
மேஷ லக்னம் 4 1/4 நாழிகை.
ரிஷப லக்னம் 4 3/4 நாழிகை.
மிதுன லக்னம் 5 1/4 நாழிகை.
கடக லக்னம் 5 1/2 நாழிகை
சிம்ம லக்னம் 5 1/2 நாழிகை
கன்னி லக்னம் 5 நாழிகை
துலா லக்னம் 5 நாழிகை
விருச்சிக லக்னம் 5 1/4 நாழிகை
தனுர் லக்னம் 5 1/2 நாழிகை
மகர லக்னம் 5 1/2 நாழிகை
கும்ப லக்னம் 4 1/4 நாழிகை
மீன லக்னம் 4 1/4 நாழிகை இவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment