சனி மகா திசை மொத்தம் 19 ஆண்டுகள்
1 சனி மகா திசையில் சனி புத்தி (சுய புத்தி)- 3 வருடங்களும் 3 மாதங்களும் உடல் உபாதைகள் அதாவது உடல் நலமின்மை, மன அழுத்தங்கள், மனையாள், குழந்தைகள் மற்றும் உறவினர்களால் கவலைகள், பிரச்சினைகள். ஏற்படும். சிலருக்கு பண நஷ்டங்கள் ஏற்படும்
2 சனி மகா திசையில் புதன் புத்தி - 2 வருடங்களும் 8 மாதங்களும் 9 நாட்களும் ++++++கல்வியில், அறிவில் உயர்வு ஏற்படும். நிதிநிலை மேம்படும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடைபெறும். குழந்தை பிறந்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வேலையில் உயர்வு. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பொதுவாக நன்மையான காலம்.
3 சனி மகா திசையில் கேது புத்தி - 1 வருடமும் 1 மாதமும் 9 நாட்களும் உடலில் உள்ள இணைப்புக்களில் (joints, especially knee joints) உபாதைகள் உண்டாகும். வீக்கம், வலி போன்றவைகள் வந்து படுத்தி எடுக்கும். பணம் விரையமாகும். மகனுடன் அல்லது தந்தையுடன் பேதம் உண்டாகும். சிலருக்குப் பெண்களால் பிரச்சினைகள், துன்பங்கள் உண்டாகும்
4 சனி மகா திசையில் சுக்கிர புத்தி - 3 வருடங்களும் 2 மாதங்களும் ++++++இது நன்மை தரும் காலம். வளமாக, செழிப்பாக இருக்கும். வேலையில் அல்லது செய்யும் தொழிலில் உயர்வு இருக்கும் Promotion in job. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுத்த செய்ல்கள் வெற்றிகரமாக முடியும். சிலருக்கு மனைவி வழிச் சொத்துக்கள் கிடைக்கும். வம்பு, வழக்கு கேஸ் போன்றவற்றில் வெற்றி கிடைக்கும்.
5 சனி மகா திசையில் சூரிய புத்தி - 9 மாதங்களும் 18 நாட்களும் நோய்களால் அவதிப்பட நேரிடும். இன்னவிதமான நோய் என்று சொல்ல முடியாதபடி நோய்கள் வந்து விட்டுப்போகும். கண்கள் பாதிப்பு அடையும் பொருட்கள், பணம், நகைகள் திருட்டுப்போகும். குடும்பத்தில் மனைவி, மக்கள் என்று பாதிப்புக்கள் ஏற்படும். அதனால் ஜாதகன் அவதிப்பட நேரிடும். மன உளைச்சல் இருக்கும்.
6 சனி மகா திசையில் சந்திர புத்தி - 1 வருடமும் 7 மாதங்களும் சொத்து சுகங்களை இழந்து வாட நேரிடும். கடன் உண்டாகும். வீடு மாற நேரிடும். சிலர் ஊர் மாறிச் செல்வார்கள். வீண் தகராறுகள் ஏற்படும். உறவினர்களிடையே விரோதம் உண்டாகும். சிலர் குடும்ப உறுப்பினரை இழக்க நேரிடும்.
7 சனி மகா திசையில் செவ்வாய் புத்தி - 1 வருடமும் 1 மாதமும் 9 நாட்களும் கெட்ட பெயர் உண்டாகும். வேலை அல்லது தொழிலில் இட மாற்றம் அல்லது ஊர் மாற்றம் ஏற்படும். படுக்கையில் படுக்க வைக்கும் அளவிற்கு நோய் நொடிகள் உண்டாகும். திருட்டுக்களில் பொருள்கள் மற்றும் பணத்தை இழக்க நேரிடும்
8 சனி மகா திசையில் ராகு புத்தி - 2 வருடமும் 10 மாதங்களும் 6 நாட்களும் எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல இந்தக் கால கட்டத்தில் இருக்கின்ற உபத்திரவங்கள் மற்றும் பிரச்சினைகள் அதிகமாகும். கணுக்கால் மற்றும் பாதங்களில் நோய்கள் உண்டாகும். பூச்சிக் கடிகள் உண்டாகும் எந்தப்பக்கம் சென்றாலும் துயரம் மற்றும் தொல்லைகள் நிறைந்திருக்கும்
சனி மகா திசையில் குரு புத்தி - 2 வருடமும் 6 மாதங்களும் 12 நாட்களும் ++++++ சொல்லப்போனால் இது நன்மைகளை அள்ளித் தரும் காலம். இது நாள் வரை படுத்தி எடுத்ததற்கு சனிபகவான் ஒத்தடம் கொடுத்துவிட்டுப் போவார் சிலருக்குப் புதிய வாகனங்கள், வசதிகள் கிடைக்கும். நகைகள் வாங்குவார்கள். எதிர்பார்க்கும் விஷயங்களில் வெற்றி கிடைக்கும். புதிய நட்புகளும், தொழிலில் அல்லது வேலையில் புதிய உயர்வுகளும் கிடைக்கும். ஆறுதலான காலம்.