Wednesday, June 8, 2011

சனி பெயர்ச்சி என்றாலே நம்மவர்களுக்கு மனத்தளர்ச்சி ஏற்பட்டு விடுவது சகஜம். அதிலும் நம் ஜோதிடதிலகங்கள் பேதிக்கு கொடுத்து ஒரு வழி பண்ணிவிடுவார்கள். நம் நாட்டில் நிமிடத்துக்கு 4 குழந்தைகள் பிறக்கின்றனர். சுமார் 120 நிமிடங்களுக்கு அதாவது 2 மணி நேரத்துக்கு ஒரே லக்னம் தான். அதாவது ஒரே ஜாதகம். அதாவது பெரியார் பிறந்த அதே ஜாதகத்தில் பிறந்த 119 இன்ட்டு 4 குழந்தைகள் என்னாச்சு ? ஒரே ஒருபெரியார் தான் பஞ்சக்கச்சங்களை எதிர்த்து ஏறக்குறைய செஞ்சுரி அடிக்க முடிகிறது. ( நான் அப்படித்தான் என் தெலுங்கு வலை தளத்தில் ஐயர்களுடன் மோதி ஆப்பு வைத்துக்கொண்டேன். ஒரு கட்டத்தில் திரட்டியில் என் வலைப்பூ தடை செய்யப்பட்டுவிட்டதென்றால் பாருங்களேன்) ஒரே ஒரு .....................................................................................................................................................(இந்த கோடிட்ட இடத்தை/ சீ புள்ளி வைத்த இடத்தை உங்களுக்கு பிடித்த சாதனையாளர் பெயர் போட்டு நிரப்பிக்கொள்ளவும். ஆக ஜாதகமே ஒன்று என்றாலும் இயற்கை மனித யத்தனத்துக்கும் வாய்ப்பு வைத்து தான் செயல்படுகிறது. இந்த அழகில் இரண்டே கால் நாட்களுக்கு ஒரே ராசி தான் எனும்போது , ஒவ்வொரு ராசியிலும் எத்தனை கோடி பேரை அடைக்கிறார்கள் பாருங்கள். இதுவே முடிவான உண்மை என்றால் இந்திய மக்களின் வாழ்வுக‌ள் 12 விதமாகத்தானே இருக்க முடியும். உண்மையில் அப்படியா உள்ளன. நோ !

ஜாதகம் என்பது வாகனம் மாதிரி. ஜாதகப்படி நடக்கும் தசாபுக்திகள் ரோடு மாதிரி , இவர்கள் கூறும் சனி/குரு/ராகு/கேது பெயர்ச்சி எல்லாம் அவ்வப்போது ட்ராஃபிக்கில் ஏற்படும் சிறுமாற்றங்கள் போன்றது. (முதல்வர் வரும்போது ட்ராஃபிக்கை நிறுத்தலியா அது மாதிரி. )

சரி நான் எதற்கு குறுக்கே சனி பகவானையே உங்களுடன் பேசச்சொல்லி விடுகிறேனே. உங்கள் ஜாதகமே இல்லாமல், பிறப்பு விவரங்களும் இல்லாமல் உங்கள் ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் உள்ளாரா இல்லையா என்று தெரிந்து கொள்ளுங்கள். நல்ல நிலையில் இலை என்றால் குறிப்பிட்டுள்ள பரிகாரங்களை செய்துகொள்ளுங்கள்

பலன் பெற்றால் பத்து பேருக்கு இந்த கட்டுரை பற்றி இமெயில் மூலம் தெரிவியுங்கள் . ஓகே

செவ்வாய்க்கு அடுத்தபடியாக என்னைப்பற்றிய வதந்திகள் தான் அதிகம். நான் ஆயுள்காரகன். என் வேலை உங்கள் ஆயுளை அதிகரிப்பது. ஆயுள் எப்போது அதிகரிக்கும்? நான் பிரதிகூலமாகச் சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறேன். நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள். மனிதன் நான் அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர், காற்று, உணவு உட்கொள்ளுதல்), எலிமினேஷனில் (வியர்த்தல், மல, ஜலம் கழித்தல், கரியமில வாயுவை வெளிவிடுதல்) தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால்தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய். 19 வருடங்கள் நடைபெறக்கூடிய சனி திசை வரும்போது அதன் முதல் பாதி ஒரு விதமாகவும் மறுபாதி வேறு விதமாகவும் பலன் தரும். நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்கு யோககாரகனாக இருந்தால் முதல் பாதி பெரிய அளவில் நன்மை செய்யமாட்டேன். ஒரு வேளை நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்குப் பாவியாகவோ, மாரகனாகவோ இருந்தால் முதல் பாதியில் நன்மையைத் தந்து பின் பாதியில் தீமையைத் தருவேன். கோசாரத்தில் ஏழரை சனி நடந்து வரும் போதும் இதே விதியைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும் (ஒவ்வொரு இரண்டரை வருடத்துக்கும்) முதல் பாதி கெடு பலனைத் தந்தால் மறுபாதி அந்த அளவுக்குக் கெடுபலன்களை தரமாட்டேன்.1. உடலுழைப்பு அதிகரிக்கும்போது. 2. உடல் சுத்தம். ஆடைச் சுத்தம், சுற்றுப்புறச் சுத்தம் என்று நேரத்தை வீணாக்காது, ஒழுங்காய் வேலையைப் பார்க்கும் போதுதான் ஆயுள் அதிகரிக்கும். எழரைச் சனி என்று பயமுறுத்துவார்கள். சாதனை படைத்த எல்லோருமே தம் ஏழரைச் சனிக் காலத்தில்தான் அந்த சாதனையைப் படைத்திருப்பார்கள். சுகங்களால் உடல் பலவீனம் அடையும். சிரமங்களால் உடல் பலம் பெறும். நான் ராசிச் சக்கரத்தை (12 ராசிகள்) ஒரு தடவை சுற்றிவர 30 வருடங்கள் ஆகின்றன. முப்பது வருடங்களில் 3, 6, 10, 11 என்ற 4 ராசிகளில் சஞ்சரிக்கும் போது தான்-அந்த 4-ல் 2-வது = 10 வருடங்களில் தான் நான் சுகத்தை வழங்குகிறேன். மற்ற 20 வருடங்களில் நான் சிரமங்களை வழங்குகிறேன். இதன் மூலம் நீண்ட ஆயுளைத்தருகிறேன். நான் கர்மகாரகன் நான் நல்ல இடத்தில் (3, 6, 10, 11) சஞ்சரிக்கும் போது, மித மிஞ்சிய சுகபோகங்களின் காரணமாக நீங்கள் செய்யும் கர்மங்களுக்கு (பாவங்களுக்கு) நான் மற்ற இடங்களில் சஞ்சரிக்கும்போது தண்டனை தருகிறேன். நான் தன்னிச்சையாக என் தசா காலத்தில் (அ) ஏழரைச் சனிக் காலத்தில் எந்த ஜாதகரையும் கொல்ல மாட்டேன். எனக்கு வேறு ஒரு பாவக்கிரகத்தின் பார்வையோ, சேர்க்கையோ ஏற்படும் போதுதான் மரணங்கள் சம்பவிக்கின்றன. சரி! சரி! சுய தம்பட்டம் போதும், விஷயத்துக்கு வருகிறேன். ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ் போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.என் அதிகாரத்துக்குட்பட்ட விஷயங்களை இதுவரை சொன்னேன். இந்த விஷயங்களில் நீங்கள் லாபம், வெற்றி பெற்றிருக்கிறீர்களா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று பொருள். மேற்சொன்ன பட்டியலில் உள்ள விஷயங்களில் உங்களுக்கு நஷ்டம், தோல்விகளே ஏற்பட்டு வருகின்றனவா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள்.நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொள்ளுங்கள். என்னால் ஏற்படும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.
பரிகாரங்கள்1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள். 8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள். 12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.


ஜோதிடம் பொய்ப்பது ஏன் ?

ஜோதிடம் என்றால் உங்கள் பிறந்த நேரத்தை அடிப்படியாக வைத்து கூறுவதே ஜோதிடம். கைரேகை சில விசயங்களில் சூப்பர். ( செவ்வாய் தோசம் இருக்கா இல்லியானு நொடில சொல்லிரலாம். ஜாதகத்தை பார்த்து சொல்ல மண்டைய உடைச்சுக்கனும்) சில விஷயங்களில் டுபாக்கூர் . முக்கியமா இன்னது நடக்கும்னு சொல்லலாமே தவிர பலான நேரத்துல நடக்கும்னு சொல்ல முடியாது. ந்யூமராலஜி விச‌யத்துல பார்த்தா உங்க பிறப்பு எண், கூட்டு எண், பெயர் எண் தொடர்பான கிரகங்கள் உங்கள் ஜாதகத்தில் வலுவுடன் அமைந்திருந்தால் மட்டுமே 50:50 அளவில் பலிக்கும். இல்லன்னா வேஸ்டு. நேமாலஜில சில விசயங்கள் சரி. அதை வச்சு எதிரிகாலத்தை கண்ணாடியாட்டம் காட்டறேனு யாராச்சும் சொன்னா அது ஃப்ராடுதான்.

என் வ்யூ ஒண்ணுதான் இந்த தேதி,பேரு, திருமண தேதியெல்லாம் ஜாதகத்துலயே அடங்கியிருக்கு. அதை வச்சுக்கிட்டு கதை பண்ணலாமே தவிர இதெல்லாம் சந்தேகாஸ்பதம்தான் ( நன்றி சுஜாதா)


ஜோதிடம் பொய்க்க பல காரணம் உண்டு. ஜோதிடர் டுபாக்கூரா இருக்கலாம். உங்க பிறப்பு விவரங்கள் தவறா இருக்கலாம். மேன்யுவலா கணிக்கும் போது தவறு ஏற்பட்டிருக்கலாம்.

ஜோதிடர் கிரகங்களின் பலத்தை கணிப்பதில் கோட்டை விட்டிருக்கலாம்.
மேற்சொன்ன காரணங்கள் இல்லாமலும் ஜோதிடம் பொய்க்கிறது. காரணம் ஜோதிட சாஸ்திர‌த்தில் உள்ள மர்மங்கள் ஆயிரமாயிரம்.. எல்லோரும் ஒரே பஞ்சாங்கத்தை தான் உபயோகிக்கிறோம். சிலர் சொல்வது நடக்கிறது. பலர் சொல்வது நடப்பதில்லை. இதை வைத்தே பகுத்தறிவாளர்கள் ஜோதிடம் விஞ்ஞானம் அல்ல என்று கூறிவிடுகிறார்கள்.


எந்த ஜோதிடர் பலன் கூறினாலும் அது அப்படியே நடக்க வேண்டும் என்றால் அதற்கு சில மர்மங்களை ஜோதிட நிபுணர்கள் பகிரங்கப் படுத்த வேண்டும் . நான் நிபுணர் அல்ல என்ற போதிலும் இதை துவங்கி வைக்கிறேன்.


ஜோதிட சாஸ்திரத்தில் எத்தனையோ விதிகள் உள்ளன. இவற்றில் எது முக்கியம் எது முக்கியமல்ல என்பதை புரிந்து பலன் கூறவேண்டும்.


1.உதாரணமாக கிரகங்களுக்கு நைசர்கிக சுபத்துவ,பாபத்துவம் ‍/ லக்னாத் சுபத்துவ,பாபத்துவம் என்று இரண்டு விதிகள் உள்ளன. இதில் லக்னாத் சுபத்துவ,பாபத்துவ விதியையே அப்ளை செய்ய வேண்டும்.


2.எண்சாண் உடலுக்கு சிரஸே பிரதானம் என்பது போல் லக்னம்,லக்னாதிபதி பலத்தை வைத்துத் தான் மற்ற கிரகங்கள் பலனளிக்கின்றன.

லக்னாதிபதி 6,8,12 லிருக்க, அல்லது அஸ்தங்கதம் அடைந்திருக்க மற்ற கிரகங்கள் என்னதான் நல்ல நிலையில் இருந்தாலும் நல்ல பலன் கள் ஏற்படுவதில்லை. அதே போல் லக்னாதிபதி 6,8,12 அதிபதிகளோடோ,லக்னாத் பாபர்களோடோ சம்பந்தப்பட்டாலும் நிலைமை இது தான்.


3.பிரபல தோஷங்கள் இருத்தல் : உதாரணமாக செவ்வாய் தோஷம்,சர்ப்ப தோஷம்,குருசந்திர தோஷம்


4.பாபர்கள் வலுத்தும்,சுபர்கள் வலுக்குன்றியும் இருத்தல்


5.லக்னாதிபதியை விட 6,8,12 அதிபர்கள் அதிகம் பலம் பெற்றிருத்தல்


6.சுபபலனை தரவேண்டிய கிரகங்களின் தசைகள் இளமையில் வராது போதல். (இதுவே சுக்கிரன் சுபனாக இருந்து இளமையில் சுக்கிர தசை வந்தாலும் தொல்லையே.


7.தாய்,தந்தையரின் ஜாதகங்களில் 5 ஆமிடம் வலுக்குன்றியும், சோதர,சோதரிகள் ஜாதகத்தில் 3 ஆமிடம் பாப சம்ம்ந்தம் பெற்றுமிருத்தல்


8.ஜாதகர் தம் ஜாதகத்தில் வலுக்குன்றிய கிரகத்தின் தொழில்,வியாபாரம்,வேலையில் ஈடுபட்டிருத்தல்


9.சேரக்கூடாத கிரக‌ங்கள் சேர்ந்திருத்தல்,


10.மாங்கல்ய தோஷம் உள்ள பெண்ணை மணத்தல், இருதார ஜாதகனை மணத்தல் போன்ற அம்சங்களும் நற்பலன் களை தடுத்து விடுகின்றன‌.


11. அதே போல் வாஸ்து கோளாறுகள்: வாடகை வீடாக இருக்கும் பட்சத்தில் நல்ல தசை,புக்தி வந்ததுமே அந்த நல்ல நேரம் அந்த வீட்டிலிருந்து வெளியே கிளப்பிவிடும். ஒரு வேளை சொந்த வீடாக இருந்தால்? இவர்கள் வீடு மாறமாட்டார்கள். கிரக பலன் அவ்வீட்டின் கெடுபலனை கட்டுப்படுத்துவதிலேயே செலவழிந்து விடும்.


12. நஷ்ட ஜாதகர்களுடன் கூட்டு: நம் ஜாதகம் நல்ல ஜாதகமாயிருந்தாலும் நஷ்ட ஜாதகர்களுடனான் கூட்டு அது தரும் நல்ல பலன் களுக்கு வேட்டு வைத்து விடும்.


13.பிள்ளைகள் ஜாதகம்: நமக்குப் பிறக்கும் பிள்ளைகளின் ஜாதகத்தில் 9 ஆமிடம் கெட்டால் தந்தை காலி, 4 ஆமிடம் கெட்டால் தாய் காலியாகிவிடுவார். தாய்,தந்தையரின் ஜாதகம் தீர்காயுஷ் ஜாதகமாக இருந்தால் போண்டியாகி விடுவார்கள்.


14.நேரம் தவறிய செயல்: சிலர் நல்ல நேரத்தில் அடிமைத்தொழில் செய்வர், கெட்ட நேரத்தில் சொந்தத் தொழில் செய்வர்.


தி புக் ஆஃப் சீக்ரெட்

குற்றமும் தண்டனையும்
இறைவனின் ஐபிசி
தி புக் ஆஃப் சீக்ரெட்
நியாய தீர்ப்பு
பொயட்டிக் ஜ‌ஸ்டிஸ்
இப்படி ஆயிரம் பெயர்களை சொல்லலாம். ஆனால் விசயம் ஒன்றே. உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான் தீரனும். இது ஏதோ பஞ்சக்கச்சங்கள் பரிமாறும் ஏட்டுச்சுரைக்காய் என்று நினைத்துவிடாதீர்கள் . 1987 முதல் நாளிதுவரை நான் மேற்கொண்ட ஆராய்ச்சியின் பலன் இது

இனி இறைவனின் ஐ.பி.சியை பார்ப்போம்:
1.அப்பாவுக்கு சோறு போடாதவன், பஞ்சாயத்து முனிசிபாலிட்டி நிதியை கொள்ளையடித்தவன், நிலமகளின் முலையென தோன்றும் மலைகளை வெட்டி மொட்டை போட்டவன், மலை சாதி மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டவன் இவனுக்கெல்லாம் தண்டனை

எலும்பு முறிவு, மண்டை பிளத்தல், முதுகெலும்பு முறிதல், கண் பறி போதல்,  நிற்க கூரையில்லாது போதல். இந்த தண்டனைகளை வழங்குபவர் சூரியன்

2.அம்மாவுக்கு சோறு போடாதவன், அம்மா வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டவன் , ஏரி குளம் ஆக்கிரமித்தவன், சாக்கடையை நீர் நிலையில் கலந்தவன், வருணாசிரம தர்மப்படி ( குறுக்கு புத்தியின்றி) நியாயமான வழியில் பொருள்  தேடும் வியாபாரியின்  குடும்பத்து பெண்ணை சீரழித்தவன், ஊர் பெரிய மனிதர்களின் மனைவி மாருடன் கள்ள உறவு வைத்தவன் , அடுத்தவன் நிலத்துக்கு பாசனம் கிடைக்காது செய்தவன் இவனுக்கெல்லாம் தண்டனை

நுரையீரல் அழுகுதல், பைத்தியம் பிடித்தல், கிட்னி ஃபெயிலியர், பெரிய மனிதர்களின் மனைவி மாரின் சதிக்கு பலியாதல், வைசிய பெண்டிரால் அழிதல், ஸ்வப்ன ஸ்கலிதம், உடம்பில் நீர் பிடித்தல், அடங்கா தாகம் இந்த தண்டனைகளை வழங்குபவர் சந்திரன்

3.அண்ணன் தம்பி வாயடித்தவன், ஊர் பொது நிலத்தை, ஊர் சொத்தை ஆக்கிரமித்தவன், எரிபொருள் ( பெட்ரோல், டீசல், கேஸ் இத்யாதி)  தொழிலில்  மக்களை ஏமாற்றியவன், ஆள் வைத்து அடித்தவன், ஆயுதம் தாங்கி பிறரை காயப்படுத்தியவன், கொலை செய்தவன், தானமாய் தந்த ரத்தத்தை விற்றவன்,காவல், ராணுவம், ரயில்வே  துறையில் லஞ்சம் வாங்கி பணம் சேர்த்தவன், மின்சாரம் திருடியவன் இவனுக்கெல்லாம் தண்டனை

அண்ணன் தம்பியால் சாவு, ஆயுதங்களால் கண்டம், நோய் எதிர்ப்பு சக்தி பூஜ்ஜியமாகி கண்ட வியாதிக்குட்படுதல் ( வேறென்ன எயிட்ஸ்தான்) ரத்தம் கெட்டு சொறி சிரங்கு, கட்டிகள், உள்ளங்கை, உள்ளங்காலில் எரிச்சல், ரத்தவாந்தி, ரத்த பேதி, வெடி குண்டு தாக்குதல், மின்சாரம் தாக்கிசாவு, லாக்கப் டெத், என் கவுண்டர்

4.சினிமா,லாட்டரி, சாராயம் (டாஸ்மாக்) சூதாட்டம், இத்யாதியில் மக்களை மோசடி செய்தவன், பிறருக்கு விசம் வைத்தவன், கலப்படம் மூலம் மக்கள் உயிருக்கு உலை வைத்தவன், வெளி நாடு அனுப்புகிறேன் என்று ஏமாற்றியவன், பாம்புகளை கொன்றவன், சதி செய்தவன், ப்ளாக் மேஜிக் செய்து மக்களை வதைத்தவன் , டூப்ளிக்கேட் சரக்கு விற்றவன், டூப்ளிகேட் டாக்குமெண்ட் தயாரித்தவன், கள்ளக்கையெழுத்து போட்டவன் கள்ளக்கடத்தல் செய்பவன் போலி பாஸ்போர்ட், போலி விசா தயாரிப்பவன், பாஸ்போர்ட் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குபவன், வெளி நாட்டினரிடம் பணம் பிடுங்கும் கைட், டாக்ஸிகாரன் இவனெல்லாம் /

இடுப்புக்கு கீழ் பாகத்தில் வைத்தியர்களுக்கே புரிபடாத, குணப்படுத்த முடியாத வியாதிகளுக்கு, பலகீனங்கள், வலிகளுக்கு உள்ளாதல்.விஷ ஆகாரம் தின்று உயிரிழத்தல் , சினிமா , லாட்டரி, சாராய தொழில்களிலேயே போண்டியாதல். முன் பின் தெரியாத, கருப்பு நிற , காக்கை போன்ற ஓரப்பார்வை கொண்ட நபரால் நாசமாதல், வெளி நாடுகளில் சிறைப்படுதல், பாம்பு போன்று மறைந்து வாழ்தல் இத்யாதி தண்டனைகளை அனுபவிப்பான் . இந்த தண்டனைகளை வழங்குபவர் ராகு.

5.கல்யாணத்தை கெடுத்தவன் ( நிறுத்தியவன்), பணம், தங்கம் கொள்ளையடித்தவன். பார்ப்பனீயம் என்று குறிப்பிடப்படும்  குறுக்கு புத்தி,  சாதி அகங்காரம் அற்று உலக நலமே தம் நலமாய் கருதி வாழும் பார்ப்பனர்களை இம்சித்தவன், அவர் தம் சொத்துக்களை கொள்ளையடித்தவன், கோவில் பணத்தை கையாடி, திருட்டு கணக்கு எழுதியவன், அரசியலில் இறங்கி அப்பாவி வாக்காளர்களை நட்டாற்றில் விட்டவன், பத்து வட்டி, இருபது  வட்டி வாங்குபவன், கடவுள் பேர் சொல்லி ஆன்மீகம் பேர் சொல்லி பொருள் சேர்த்து ஆடம்பர வாழ்வு வாழ்பவன், சேவை நிறுவனம் வைத்து  அரசு, வெளி நாட்டு நிறுவனங்கள் தரும் நிதிகளை சுரண்டுபவன் , நீதிமன்றத்தில் பொய் சாட்சி சொல்பவன், தவறான தீர்ப்பு வழங்குபவன் இவனெல்லாம்
வாரிசின்றி போவான்,,வாரிசு  இருந்தாலும் அது உருப்படாது போகும், அல்லது அற்பாயுளில் மடியும். கிலோ கிலோவாய் தங்கம் கொள்ளை போகும் . கோடிகள் இருந்தாலும் வீட்டில் கெட்டி மேளம் கொட்டாது. கொட்டினாலும் விரைவில் பறை முழங்கும். ஹார்ட் அட்டாக் வரும், வயிற்றில் வியாதி வரும். செவிடு ஏற்படும். செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிப்பான்.
இந்த தண்டனைகளை வழங்குபவர் குரு

6.வேலைக்காரனுக்கு சம்பளம் தராதவன், தொழிலாளி சம்பளத்தை குறைத்து தந்து சுருட்டுபவன், இரும்பு, எண்ணெய் வித்துக்கள் , சுரங்கம், க்ரூட் ஆயில், குவாரி, தொழிற்சாலைகள் வைத்து எவ்வித தடுப்பு நடவடிக்கையும் எடுக்காது சுற்றுச்சூழலை நாசமாக்குபவன் . குடித்தனக்காரனுக்கு கழிவறை வசதி செய்யாத வீட்டுக்காரன், மாணவர்களுக்கு கழிவறை கட்டித்தராத பள்ளி, கல்லூரி நிர்வாகி தொண்டு கிழவன், நொண்டியை கொடுமை படுத்துபவன், தாழ்த்தப்பட்ட மக்களை சுரண்டுபவன் இவனுக்கெல்லாம்

நரம்பு தளர்ச்சி வரும், பைல்ஸ் வரும், கடுமையான மலச்சிக்கல் வரும். வாரத்துக்கொருதரம் டாக்டர் கரண்டி போட்டு சுரண்டி எடுக்குமத்தனை கொடூரமாக இருக்கும். கிழ‌வியை/கிழவனை மணக்க வேண்டி வரும். இவன் மனைவியை வேலைக்காரன் அனுபவிப்பான். இவன் வேலைக்காரியிடன் அடிமையாவான்.இந்த தண்டனைகளை வழங்குபவர் சனி

7.போலி வைத்தியன், நோயாளியை கொள்ளயடிக்கும் கார்ப்போரேட் ஆஸ்பத்திரி நிர்வாகி, கோள் மூட்டுபவன்,தவறான செய்தியை வெளியிடும் நிருபன்,ஆசிரியன், பிரசுரகர்த்தன், பொய கணக்கு எழுதும் கணக்கு பிள்ளை, பொய்யான கணக்கை சர்ட்டிஃபை செய்யும் ஆடிட்டன்,  ஜோதிடம் தெரியாமலே தெரிந்ததாய் காட்டி ஏமாற்றுபவன், வியாபாரிகளை மிரட்டி சுரண்டும் குண்டன் சாலகளை மறிப்பவன், ஆக்கிரமிப்பவன், செல் போன் திருடுபவன், ஊரார் வீட்டு போனில் எஸ்.டி.டி களாய் போட்டு தள்ளும் டெலிஃபோன்ஸ் ஊழியன், காதலியிடம்  தூதனுப்பினால் அவளை அனுபவிக்க திட்டமிடுபவன், தாய் மாமனை நோகடிப்பவன், ஊரான் மெயிலை, ப்ளாகை , சைட்டை ஹேக் செய்பவன், ஊரான் பதிவை காப்பியடித்து கட் பேஸ்ட் செய்பவன், எழுத்தாளனுக்கு ராயல்ட்டி/சன்மானம்  கொடுக்காத பப்ளிஷன். சர்க்குலேஷன் உயர  எந்த அண்டர்வேர் பாவாடைக்குள்ளும் நுழைய தயாராக உள்ள பப்ளிஷன் இவனுக்கெல்லாம்

குஷ்ட ரோகம் வரும், விரை வாதம் வரும் (பெண்ணானால் ஓவரி நாஸ்தி) தோல் வியாதி வரும், விரை நசுங்கும், ப்ரோக்கர்களை நம்பி கோடிகளில் ஏமாறுவான். புற உலக தொடர்பற்று தவிப்பான். பைத்தியம் கூட பிடிக்கும்

இந்த தண்டனைகளை வழங்குபவர் புதன்.

8.உண்மையான சாமியார்களை, அன்னக்காவடிகளை, இதர மதத்தவரை நோகடிப்பவன், மந்திரம் தந்திரம் செய்து மக்களை திகிலுக்குள்ளாக்குபவன், அடுத்தவர் வாழ்வில் சிக்கல்களை ஏற்படுத்துபவன் தாய் வழி தாத்தா பாட்டியை பட்டினி போடுபவன், வெளி நாட்டினரை ஏமாற்றுபவன்,போலி சாமியார், போலி தத்துவவாதி இவனுக்கெல்லாம்

உடலெல்லாம் புண்ணாகும், ரத்தமே விசமாகும். பசி பட்டினியால் பாம்பு போல் நெளிவான். புதைகுழிக்குள் வாழ்வான்.  கேன்சர் வரலாம். போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி, கோர்ட்டு, சுடுகாட்டுக்கு அடிக்கடி போக வேண்டிவரும்
இந்த தண்டனைகளை வழங்குபவர் கேது.

9.ஊரில் உள்ளவளையெல்லாம் அனுபவிக்க துடிப்பவன், பெண்கள் குளிக்கும்போது, உடை மாற்றும்போது திருட்டுத்தனமாய் பார்ப்பவன், ஈவ் டீசிங், ரேப் செய்பவன், விருப்பமில்லா பெண்ணை அச்சுறுத்தி புணர்பவன், பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய‌வன், உடலுறவில் ஈடுபட்டுள்ள தம்பதியரை வேண்டுமென்றே டிஸ்டர்ப் செய்பவன், வெறுமனே உசுப்பேற்றி ஆண்,பெண்ணை காமத்தால் தகிக்க செய்ய படம் எடுத்தவன், கதை எழுதினவன் இவனுக்கெல்லாம்

விரைப்பு தன்மை குறையும், வீரியம் வரண்டு போகும், துரிதஸ்கலிதமாகும், விந்துவில் கவுண்ட் குறைந்து போகும். இவன் குடும்பத்து பெண்கள் வேசிகளாவர். இவர்களின் வம்சத்தில் பெண் குழந்தைகளே தொடர்ந்து பிறக்கும். அவற்றிற்கும் சரியான வயதில் திருமணமாகாது.

பி.கு:
மேற்சொன்னவை எந்த கிரந்தத்திலும் கிடையாது, 1989 முதலான என் ப்ரொஃபெஷ்னல் லைஃபில் நான் கண்ணார கண்டவை. சில (பல) குற்றங்கள் விடுபட்டிருக்கலாம். அன்பர்கள் கேட்டால் அவற்றிற்கும் உரிய தண்டனைகளை தெரிவிக்கிறேன். தாங்கள் கண்டுணர்ந்த விசயங்களையும் தெரிவிக்கலாம். மேலும் இந்த பாவங்களுக்கான தண்டனையை பாவம் செய்தவன் மட்டுமல்ல அவன் குடும்பத்தினர், வாரிசுகள், வேலையாட்கள், அவனிடம் வாங்கித்தின்பவர்கள் அனைவரும் அனுபவிப்பவர். ஏழேழு தலைமுறைகளுக்கும் இது தொடரும்