Thursday, August 11, 2011

ப்ரஸ்னம்


ப்ரஸ்னம்


Tamil Astrology

நமது பாரத தேசத்தில் ரிக்வேதம் , யஜுர்வேதம் , சாம வேதம் , அதர்வண வேதம் எனப்படும் வேத சாஸ்திரங்களின்படி இந்துக்களின் வாழ்கையை முறைபடுத்தியிருக்கிறார்கள். வேதங்களின் கண்களான ஜோதிட சாஸ்திரத்தில் கணிதஸ்கந்தம் , ஜாதகஸ்கந்தம் சம்மிதாஸ்கந்தம் என்ற முன்று பிரிவுகள் உண்டு .அதில் மூன்றாவது பிரிவான சம்மிதாஸ்கந்தம் என்ற பகுதியில் ஆருடம் என்னும் ப்ரஸ்னம் என்ற அற்புதமான சாஸ்திரத்தைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
ப்ரஸ்னத்தைப்பற்றி ஜினேந்திரமாலை, உத்திரக்கலாமிர்தம் , பலதீபிகை, ஸ்ரீபதிபத்ததி , ப்ரூகத் ஜாதகம் , சாராவளி , ஜாதகார்ணவ தீபிகை , ஜாதக பாரிஜாதம் , ஜாதக நாரதீயம் , குமாரசுவாமியம் , ஷ்ட்பஞ்சாசிகை , பிரஞ்ஞான தீபிகை , ஜோதிட கன்மகாண்டம் , பூர்வபராச்சர்யம் , வீமேஸ்வர உள்ளமுடையான் ,மலையாளத்தில் ப்ரஸ்ன மார்க்கம் , ப்ரஸ்ன தந்த்ரா , ப்ரஸ்ன அனுஷ்டான பத்ததி , கிருஷ்ணீயம் , முகூர்த்த மாதவியம் , தேவப்ரஸ்னம், தாந்திரீய வாஸ்து , நாரதீயம் போன்றவைகள் ப்ரஸ்னத்தைப்பற்றி கூறுகின்றன
ப்ரஸ்னத்தில் ஜாமக்கோள் ப்ரஸ்னம்(நட்ட்முட்டிசிந்தனை),ஹோராப்ரசனம்( சரம்) , தாம்பூல ப்ரஸ்னம் , கடிகாரப் ப்ரஸ்னம் , அஷ்டமங்களப்ரஸ்னம் , தேவப்ப்ரஸ்னம் , சகாதேவர் ஆருடம் , பலகரை (சோழிப்ரஸ்னம்) ப்ரஸ்னம் , நிமிர்த்தம் போன்ற பலவகை ப்ரஸ்ன முறைகள் உண்டு .
ஜோதிடரிடம் ஒருவர் ஒரு விஷயத்தைப்பற்றி கேள்வி கேட்கும்பொழுது அது ப்ரஸ்னஜோதிடமாக மாறி , ஒருவருடைய பூர்வஜென்மத்தில் செய்த பாவபுண்ணியங்களைப் பற்றியும் , இப்பிறவியில் உள்ள நல்வினை , தீவினைகளைப் பற்றியும் , குல தெய்வ அனுகிரகம் உண்டா ? முன்னோர் சாபம் உண்டா ? சத்ரு - செய்வினை தோஷம் உண்டா ? நாகதோஷம் பிரேததோஷம் உண்டா ? திருமணத் தடை ஏன் ? புத்ர தோஷம் உண்டா ? உயிர்கண்டங்கள் , திராத நோய் ஏன் ஏற்படுகின்றது ? என்பனவற்றை நன்கு அறிந்து , அதற்கு என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை ப்ரஸ்னத்தின் மூலமாக அறிந்து அதற்குண்டான சாந்திபரிகாரங்களைச் செய்து , நமது வாழ்கையை மகிழ்ச்சியானதாக மாற்றிக்கொள்ள உதவுவது இந்த வரபிரசதமான ப்ரஸ்ன மார்க்கமே ஆகும் .
இதனால் விதியை மதியால் வெல்லலாம் !

No comments:

Post a Comment