Wednesday, June 29, 2011

கொலை,- தற்கொலை


கொலை,- தற்கொலை

பாரதப்போரின் உச்சக்கட்டம்...கர்ணனுடன் அர்ஜுனன் விற்போர் செய்தான். ஆனால், கர்ணனின் ஆக்ரோஷத்துக்கு முன்னால், அர்ஜுனனின் காண்டீப சாகசங்கள் எடுபடவில்லை. பாசறைக்கு திரும்பிய அவனை தர்மர் அழைத்தார்.
""போர் செய்யும் லட்சணமா இது! உனது காண்டீபத்தை (வில்) உலகப்புகழ் பெற்றது என்றும், நீயே வில்வித்தையில் சிறந்தவன் என்றும், நீ வைத்த குறி தப்பாது என்றும் ஆன்றோர்கள் சொல்வதாக பெருமையடித்துக் கொண்டாய். இப்போது என்னாயிற்று உன் காண்டீபத்தின் வல்லமை,'' என இகழ்ச்சியாகப் பேசினார் தர்மர்.
அண்ணன் தர்மர் சொன்ன வார்த்தைகள் தம்பி அர்ஜுனனின் மனதை உறுத்தியது. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. தன் காண்டீபத்தை யாராவது கேலி செய்தால், அவர்களைக் கொன்று விடுவதாக சபதம் செய்திருந்தான் அர்ஜுனன். எனவே, அண்ணன் என்றும் பாராமல், அவரை நோக்கி வில்லை உயர்த்தினான். கண்ணபிரான் ஓடிவந்து தடுத்தார். அவரிடம், தனது சபதத்தை விளக்கினான் அர்ஜுனன்.
கண்ணன் ஒரு யோசனை சொன்னார்.
""அர்ஜுனா! ஒருவரைக் கொலை செய்து தான் அவரது <உயிர் போக வேண்டும் என்பதில்லை. அவர் மீது வீணான பழி போட்டாலே கொலை செய்ததற்கு சமம். எனவே, தர்மர் மீது ஏதாவது பழிபோடு,'' என்றார். அர்ஜுனனும் ஏதோ ஒரு பழியைப் போட்டு சபதத்தை நிறைவேற்றினான். பின்னர், தன் அண்ணனைக் கொன்றதற்கு சமமான பாவத்தை செய்துவிட்டோமே என மனம் வருந்தி தற்கொலைக்கு முயன்றான். அப்போதும் கண்ணன் தடுத்தார்.
""அர்ஜுனா! இதென்ன விபரீதம்! சாஸ்திரத்தில் இதற்கும் பரிகாரம் உண்டு. உன்னை நீயே புகழ்ந்து கொள்வது தற்கொலைக்கு சமம். நீ உன்னைப் பற்றி ஜம்பமாக பிறரிடம் ஏதாவது பேசு,'' என்றார்.
பிறர் மீது பழிபோடுவதும், தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதும் கொலைக்கும், தற்கொலைக்கும் ஈடானது என்பதைப் புரிந்து கொண்டீர்களா

எப்படி சாப்பிடுவது?ஏழையாய் பிறக்க காரணம் என்ன?


ஏழையாய் பிறக்க காரணம் என்ன?

ஏழையாய் பிறக்க காரணம் என்ன?

சிலர் பணக்காரர்களாகவும் பலர் வறுமையில் வாடுவதுமே உலகில் நாம் காணும் உண்மை. இந்த நிலை ஏன் ஏற்படுகிறது என்பதற்கு சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று பதில் சொல்கிறது.
அக்ஷர-த்வய-மப்யஸ்தம் நாஸ்தி நாஸ்தி யத் புரா!
ததவே தேஹி தேஹீதி விபரீத-முபஸ்திதம்!!
என்ற ஸ்லோகத்தில் "நாஸ்தி நாஸ்தி' என்றால் "இல்லை இல்லை' என்று பொருள். தேஹி தேஹி என்றால் "கொடு கொடு' என்று பொருள். யாரொருவன் முற்பிறவியில் இல்லை இல்லை என்று தன்னிடம் பிச்சை கேட்டவனை விரட்டினானோ, அவன் இப்பிறவியில் "கொடு கொடு' என்று பிச்சை கேட்பவனாக பிறக்கிறான். அதற்காக, கையை நீட்டும் சோம்பேறிக்கெல்லாம் பிச்சை போடக்கூடாது. உண்மையிலேயே முடியாதவர்களுக்கு, ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு, ஏழைக்குழந்தைகளின் படிப்புக்கு உதவுவதே நிஜமான பிச்சை. திருமால் கூட பிச்சையெடுக்கப் போகிறோமே என எண்ணி மகாபலி முன் உடலை குறுக்கிக்கொண்டு வந்தார். ஏனெனில், பிச்சை எடுப்பதைக் கேவலம் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. எனவே நிஜமான ஏழைகளுக்கு தானம் கொடுத்து அடுத்த பிறவியிலாவது பணத்தை வாரிக் குவிப்பவராகப் பிறக்க வழி செய்து கொள்ளலாம்.




தனது வீட்டைத்தவிர,ஒருவன் தனது உறவினர் நண்பர்கள் வீட்டில் மேற்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால் அந்த நண்பன் அல்லது உறவினர் நட்பு கெட்டு-பகையாகிவிடும் .

எப்படி சாப்பிடுவது?


எப்படி சாப்பிடுவது

 ஆன்மீக மரபுகள்

ஒருவன் தனது வீட்டில் கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் அவனது கல்வி வளரும்.மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டுவந்தால் அவனுக்கு செல்வம் பெருகும்.வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டுவந்தால் அவனுக்கு நோய் வளரும்.தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டுவந்தால் அவனுக்கு அழியாத புகழ் உண்டாகும்.
இது எப்படி சாத்தியம்?
கிழக்கு திசை இந்திரனுக்கு உரியது.மேற்கு செல்வத்தின் அதிபதியாகிய மகாலட்சுமிக்கு உரியது.வடக்கு சிவனுக்கு உரியது.தெற்கு யமனுக்கு உரியது.

தனது வீட்டைத்தவிர,ஒருவன் தனது உறவினர் நண்பர்கள் வீட்டில் மேற்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால் அந்த நண்பன் அல்லது உறவினர் நட்பு கெட்டு-பகையாகிவிடும்.

உடல்நலம் பெற தண்ணீர் சிகிச்சை


உடல்நலம் பெற தண்ணீர் சிகிச்சை

உடல்நலம் பெற தண்ணீர் சிகிச்சை

மருந்து,மாத்திரை,ஊசி,டாக்டர் என்று எதுவுமே இல்லாமல் இலவசமான சுலபமான சிகிச்சையே தண்ணீர் சிகிச்சை!தினமும் சுத்தமான தண்ணீரை ஒன்றேகால் லிட்டர்(சுமார் ஆறு டம்ளர்கள்)அருந்துவதால் ஏராளமான நோய்கள் தீருகின்றன என்பதை ஜப்பானின் நோயாளிகள் கழகம் கண்டறிந்துள்ளது.
தலைவலி,இரத்த அழுத்தம்,இரத்த சோகை,கீல்வாதம்,மூட்டுவலி,சாதாரண பக்கவாதம்,ஊளைச்சதை,காதில் இரைச்சல்,இருதய வேகமான துடிப்பு,மயக்கம்,இருமல்,ஆஸ்துமா,சளி தொல்லை,மூளைக்காய்ச்சல்,கல்லீரல் சார்ந்த நோய்கள்,சிறுநீரகக் குழாய் நோய்கள்,பித்தக் கோளாறுகள்,வாயுக்கோளாறுகள்,வயிற்றுப்பொருமல்,இரத்தக் கடுப்பு,மூலம்,மலச்சிக்கல்,பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல்,ஒழுங்கற்ற மாதவிடாய்(இன்றைய மென் பானங்களை அடிக்கடி சாப்பிடுவதாலும் ஏற்படுவது),அளவற்ற வெள்ளைப்படுதல்,கருப்பை புற்றுநோய்,மார்புப் புற்றுநோய்,தொண்டை சார்ந்த நோய்கள் இவை தீரும்.

எப்படி தண்ணீர் சிகிச்சை எடுத்துக்கொள்வது?

காலையில் எழுந்தவுடன்(பல் துலக்கும் முன்பாகவே) 1250 CC தண்ணீரை ஒரே தடவையில் குடித்துவிட வேண்டும்.இது சுமார் 6 தம்ளர் அளவாக இருக்கும்.1.25 லிட்டர்கள் அளந்து வைத்துக்கொள்வது நன்று.இதை நமது முன்னோர்கள் உஷா பானம் என்று பெயரிட்டுள்ளனர்.குடித்தபின்னர் முகம் கழுவிக்கொள்ளலாம்.

காலையில் இப்படி தண்ணீர் குடித்தப்பின்னர்,ஒரு மணிநேரம் வரையிலும் எந்த விதமான பானங்களோ,பிஸ்கட்,பழங்கள்,தின்பண்டங்கள் எதையும் சாப்பிடக்கூடாது.இது மிக முக்கியமான நடைமுறையாகும்.

காலையில் 1.25 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக முதல் நாள் இரவு சாப்பிட்டு முடித்தப்பின்னர்,படுக்கைக்குச் செல்லும் முன்பாக,நரம்புமண்டலத்தைத் தூண்டிவிடக்கூடிய பானங்கள்(மது மற்றும் போதை வஸ்துக்கள்)உணவுகளையோ எதையும் சாப்பிடக்கூடாது.இந்த நிபந்தனையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.எனவே,இரவே பல்துலக்கிக் கொள்வது நன்று.தண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கலாம் என சந்தேகப்பட்டால்,இரவே நீங்கள் காலையில் குடிக்க இருக்கும் 1.25 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்துக்கொள்வது நல்லது.

ஒரே மூச்சாக 1.25 லிட்டர் தண்ணீரை குடிக்க முடியுமா?

சில நாட்கள் சிரமம் தான்.இரண்டு மூன்று நிமிடங்களில் விட்டுவிட்டும் குடிக்கலாம்.ஆரம்பத்தில் இரண்டு மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் வரையிலும் தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் இரண்டு மூன்று தடவை சிறுநீர் செல்லும்.அதுவும் நன்மைக்கே!

சரி! எப்படி இந்த தண்ணீர் சிகிச்சை பலனளிக்கும்?

சரியான முறையில்(மேற்கூறிய முறையில்) சாதாரண நீரைக் குடிப்பதால் மனித உடலை சுத்தம் செய்கிறது.தினசரி 1.25 லிட்டர் அளவுக்கு தூய நீரைக் குடிப்பதால்,குடலை வலுவாக்குகிறது.மருத்துவ வார்த்தையில் ஹெமடோபைஸில் எனப்படும் புது ரத்தத்தை உற்பத்தி செய்வதன் மூலம் குடல் முழுவதையும் வலுவடையச்செய்கிறது.இந்த முறையினால் குடலின் பகுதியில் உள்ள திசு மடிப்புகள் தூண்டப்படுகின்றன என்பது அறிவியல் கருவிகள் மூலம் ஆராய்ந்து நிரூபிக்கப்பட்டுவிட்டன.குடல் பகுதியில் இருக்கும் திசு மடிப்புகள் சாப்பிட்ட உணவுப்பொருட்களை ரசமாக்கி உறிஞ்சப்படும்போது புது ரத்தம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

தினமும் குடல் சுத்தமாக்கப்படுவதால்,தினமும் புது ரத்தம் உற்பத்தியாகிறது.இப்படி தினமும் புது ரத்தம் உற்பத்தியாவதால்,உடலில் அதுவரை இருந்துவந்த நோய்கள் வெகுவேகமாக குணமடைகின்றன.இந்த சூழ்நிலையை தினசரி காலையில் வெறும்வயிற்றில் தண்ணீர் அருந்துவதன் மூலம் மட்டுமே உருவாக்கிட முடியும்.
நீண்ட ஆய்வுக்குப் பிறகு,பின்வரும் அதிசயத்தக்க முடிவுகள் கிடைத்திருக்கின்றன.
மலச்சிக்கல் ஒரே நாளில் குணமடைகிறது.
வயிற்றுப்பொருமல் இரண்டு நாளில் குணமடைகிறது.
சர்க்கரை நோய் ஏழு நாட்களில் குணமடைகிறது.
இரத்த அழுத்தம் நான்கு வாரங்களிலும்,புற்று நோய் நான்கு மாதங்களிலும்,க்ஷய ரோகம் ஐந்து மாதங்களிலும் குணமடைகிறது.
இந்த தண்ணீர் சிகிச்சையில் பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகள்:
மூட்டுவாதம்,வாயுப்பிடிப்பு முதலிய நோய் இருப்பவர்கள் ஒரு வாரத்திற்கு தினந்தோறும் மூன்று தடவை காலை,மதிய உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கும்,இரவு உணவுக்கு முன்பு இந்த தண்ணீர்சிகிச்சையை செய்து வர வேண்டும்.ஒரு வாரம் கழித்து தினமும் காலையில் மட்டும் செய்துவந்தால் போதுமானது.
மற்றவர்கள் தினமும் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்தப்பின்பே தண்ணீர் அருந்த வேண்டும்.
படுக்கைக்குச் செல்லும் முன்பாக காபி,டீ,நொறுக்குத் தீனிகள் சாப்பிடக்கூடாது.
இதுவரையில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளில் எதையும் மாற்றிச் செய்வது கூடாது.

அட்சய திருதியைக்கு வாங்க வேண்டியது என்ன?


அட்சய திருதியைக்கு வாங்க வேண்டியது என்ன?

அட்சய திருதியைக்கு வாங்க வேண்டியது என்ன? அட்சய திருதியை தினத்தன்று தங்கம், பிளாட்டினம், வெள்ளி ஆகிய பொருட்களை வாங்குவது சிறப்பான பலனை அளிக்கும் என்று கூறுகிறார்கள். இதில் உண்மை உள்ளதா?
அட்சய திருதியை தினத்தன்று லட்சுமி குடியிருக்கும் பொருட்களை வாங்க வேண்டும் என்பதே ஐதீகம். அந்த வகையில் பார்த்தால் அன்று குறிப்பாக வாங்க வேண்டிய பொருட்கள் மஞ்சளும், முனை முறியாத (கைக்குத்தல்) பச்சரிசி, கல்உப்பு ஆகியவைதான்.
கிரஹப் பிரவேசத்தின் போது வீட்டில் உப்பு, அரிசியை முதன் முதலாக கொண்டு செல்வது கூட அந்தப் பொருட்களில் லட்சுமி குடியிருப்பதால், புதிய வீடு லட்சுமிகரமாக இருக்கும் என்ற காரணத்தால்தான்.
அட்சய திருதியை தினத்தன்று நிரம்பி வழியும் நகைக்கடைகளில் அலைமோதிக் கொண்டு உள்ளே சென்று ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது.
அன்றைய தினத்தில் மங்களகரமான, லட்சுமிகரமான பொருட்களை வாங்குவதே வாழ்வு சிறக்க உதவும்.
இதேபோல் அவரவர் சக்திக்கு முடிந்த அளவு தங்கம், வெள்ளி, பிளாட்டினம் பொருட்களை வாங்கலாம். நம் நாட்டு மக்களிடையே தங்கம் மிகவும் மதிக்கப்படும் பொருளாக உள்ளது. தாலி செய்வதும் தங்கத்தில் என்பதை இங்கே கூற விரும்புகிறேன். எனவே, தங்கம் மங்களகரமான பொருளாகத் திகழ்கிறது.
பொருளாதாரச் சூழல் காரணமாக தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி வாங்கலாம். பொதுவாக அட்சயதிருதியை தினத்தில் தங்கத்தை விட வெள்ளி வாங்குவதே சிறந்தது என்று கூறுவேன். காரணம், வெள்ளி சுக்கிரனின் உலோகம். லட்சுமிக்கு உரிய கிரகம் சுக்கிரன்.

அந்த வகையில் அட்சய திருதியைக்கு தங்கமா? வெள்ளியா? பிளாட்டினமா? எது சிறந்தது என்று பார்த்தால் வெள்ளிதான் முதன்மையானது. அன்றைய தினத்தில் வெள்ளி வாங்குவது குடும்ப விருத்திக்கு உதவும்.
அட்சய திருதியைக்கு பொருட்கள் வாங்க வேண்டும் என்று மட்டுமே கருதக் கூடாது. அன்றைய தினத்தில் பொருட்களை கொடுத்தாலும் பலன் கிடைக்கும். அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் போல், அன்றைய தினம் இல்லாதவர்களுக்கு அன்னதானம் அளித்தால் நல்ல பலனை அடையலாம்.
முன், பின் அறியாதவர்களை, பொருளாதார ரீதியாக பின்தங்கிய, கஷ்டப்படும் மக்களை வீட்டிற்கு அழைத்து அவர்களை உரிய முறையில் உபசரித்து அன்னதானம் வழங்கி அட்சய திருதியை தினத்தன்று ஆசீர்வாதம் பெற்றால் குடும்பம் சிறக்கும். இதேபோல் ஆடைகள், வஸ்திரங்கள் வழங்குவதும் சிறப்பான பலனை அளிக்கும்.

உடல் அமைப்பில் சிதம்பரம் சன்னதி


உடல் அமைப்பில் சிதம்பரம் சன்னதி

உடல் அமைப்பில் சிதம்பரம் சன்னதி 

மனிதனின் உருவ அமைப்பிற்கும், சிதம்பரத்திலுள்ள நடராஜர் சன்னதிக்கும் ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தில் "நமசிவாய' மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து600 தங்க ஓடுகள் உள்ளன. மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கை இது. இங்கு அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்பின் எண்ணிக்கையை ஒத்திருக்கிறது. கோயிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலிலுள்ள 9 துவாரங்களைக் குறிக்கிறது. ஐந்தெழுத்து மந்திரமான "சிவாயநம' என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தில் ஐந்து படிகள் உள்ளன. 64 கலைகளின் அடிப்படையில் 64 சாத்துமரங்கள் இருக்கின்றன, 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், பஞ்சபூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இறைவனிடம் நீண்ட பட்டியல் வேண்டாம்!


இறைவனிடம் நீண்ட பட்டியல் வேண்டாம்!

இறைவனிடம் நீண்ட பட்டியல் வேண்டாம்!

இறைவனிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று
கேட்காதீர்கள். ஒரு நீண்ட பட்டியலை வைத்துக்
கொண்டு அவனை அணுகாதீர்கள்.
காரைக்கால் அம்மையார் தவம் புரிந்து தலையால்
நடந்து – என்புருவாகி இறைவனைக் கண்டார்.
பரமசிவன் தன் வாயால் அம்மா என்று யாரையாவது
அழைத்தான் என்றால் அது காரைகைகால்
அம்மையார் ஒருவரைத்தான்.
அத்தகைய காரைக்கால் அம்மையயாரை இறைவன்
கேட்டான்! ‘அம்மா உனக்கு என்ன தேவை ‘என்று.
‘’இறவாத அன்பு வேண்டும்,
பிறவாமை வேண்டும்
மீண்டும் பிறப்பு உண்டேல்
உன்னையென்றும் மறவாமை வேண்டும்’’
என்றுதான் கேட்டார் காரைக்கால் அம்மையர்.
நாவுக்கரசர் கேட்டார்!. புழுவாய்ப்பிறக்கினும்
புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவாதிருக்
வரம் தர வேண்டும்’ என்றார்.
‘இறைவா! உன்னை மறவாதிருக்க வரம் கொடு’
என்று இறைவனை நோக்கிக் கதறுங்கள்!
கண்ணீர் விடுங்கள்!
அவனிடம் அடைக்கலம் கொள்ளுங்கள்!
மற்றவற்றை அவனை பார்த்துக் கொள்வான்

கீதாசாரம்

கீதாசாரம்



எது நடந்ததோ, அது நன்றாகவே



நடந்தது



எது நடக்கிறதோ, அது நன்றாகவே


நடக்கிறது



எது நடக்க இருக்கிறதோ,

அதுவும் நன்றாகவே நடக்கும்



உன்னுடையதை எதை நீ இழந்தாய்?


எதற்காக நீ அழுகிறாய்?



எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ


இழப்பதற்கு?



எதை நீ படைத்திருந்தாய், அது


வீணாவதற்கு ?



எதை நீ எடுத்து கொண்டாயோ,


அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.



எதை கொடுத்தாயோ,

அது இங்கேயே கொடுக்கப்பட்டது.




எது இன்று உன்னுடையதோ

அது நாளை





மற்றொருவருடையதாகிறது

மற்றொரு நாள், அது



வேறொருவருடையதாகும்

பட்டினத்தார்




பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்று கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், கி.பி. 11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர். கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர். பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர். தம் தாயார் இறந்த பொழுது உடலுக்குத் தீ மூட்டும்முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் பலர்.
ஞானம் பிறந்த கதை
சிவநேசர் - ஞானகலை தம்பதியருக்கு மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த இவருக்கு, திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிடப்பட்டது. திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார். பெருந்தன வணைகக் குடும்பம் என்பதால் திரைகடலோடியும் பெருஞ்செல்வம் திரட்டிமன்னரும் மதிக்கத்தக்க வளத்துடன் இருந்தார். அதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்களால் பட்டினத்தார் என்றே அழைக்கப்படலானார். சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார். அங்கே சிவசருமர் என்கிற சிவபக்தர், கோவில் குளக்கரையில் கண்டெடுத்ததாகக் கூறி ஓர் ஆண்மகவை பட்டினத்தாருக்குக் கொடுத்தார். அவனுக்கு மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பட்டினத்தார் . அவன் வளர்ந்து பெரியவனானதும் அவனைக் கடல்கடந்து சென்று வணிகம் சென்று வர அனுப்பினார். அவனோ திரும்பி வரும் போது எருவிராட்டியும் தவிடுமாகக் கொண்டு வந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார். அவன் தன் தாயாரிடம் ஓர் ஓலைத் துணுக்கும் காது இல்லாத ஊசி ஒன்றும் அடக்கிய பேழை ஒன்றினைத் தந்து விட்டு எங்கோ சென்று விட்டான். அந்த ஓலைத் துணுக்கில் இருந்த "காதற்ர ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம்.
பட்டினத்தடிகள்
அப்படியே தன் சகல சொத்துக்களையும் செல்வத்தையும் துறந்து கட்டிய கோவணத்துடன் துறவறம் பூண்டு வெளியேறினார் பட்டினத்தார். அவர் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடைய தமக்கை. அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு "தன்வினை தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்' எறு கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர் சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகல் என்று மதிக்கத் தொடங்கினார்கள்.
அன்னையின் ஈமச் சடங்கு
பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.
பத்திரகிரியார் தொடர்பு
பத்திரகிரி தேசத்தின் மன்னன் இவரை தவறான புரிதலில் கள்வர் என்று எண்ணிக் கைது செய்து கழுவிலேற்ற ஆணையிட்டார். கழுமரம் தீப்பற்றி எரிந்த காட்சியில் ஞானம் பெற்ற பத்திரகிரி மன்னன் தன் சொத்துக்களைத் துறந்து இவருடைய சீடரானார். பதினெண் சித்தர்களில் பத்திரகிரியாரும் முக்கியமான ஒருவர். அவருடைய பாடல்கள் "மெய்ஞானப் புலம்பல்" என்று பெயர் பெற்றவை.
பட்டினத்தடிகள் இயற்றிய நூல்கள்
சீடர் பத்திரகிரியார் விரைவில் முக்தி அடைந்து விட அதன் பிறகு பட்டினத்தடிகள், திருவெண்காடு சீர்காழி, சிதம்பரம் போன்ற சிவத்தலங்கலுக்குச் சென்று பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. அவையாவன:

• கோயில் நான்மணி மாலை

• திருக்கழுமலை முமணிக்கோவை

• திருவிடைமருதூர் திருவந்தாதி

• திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது
பட்டினத்தடிகளின் பாடல்கள் எளிய வார்த்தைகளும் அரிய பொருளும் கொண்ட அற்புதக் கலவை ஆகும்.
திருவொற்றியூரில் சமாதி
தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார் என்கிறார்கள். அவர் மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது

தர்மவான்கள் யார் என்று தெரியுமா?


தர்மவான்கள் யார் என்று தெரியுமா?

தர்மவான்கள் யார் என்று தெரியுமா?

நமது இந்து தர்ம சாஸ்திரத்தில் நமது முன்னோர்களுக்கு தர்மவான்கள் என்று அடையாளம் சொல்ல முப்பத்து இரண்டு வகையான தர்மங்களை சொல்லியிருக்கிறார்கள். அந்த முப்பத்து இரண்டு அறங்கள் எது என்று உங்களுக்கு தெரியுமா?
1. ஆதுலர் சாலை - ஏழைகளுக்கான தர்ம விடுதி
2. ஓதுவார்க்கு உணவு - படிக்கிற பிள்ளைகளுக்கு உணவு
3. அறு சமயத்தார்க்கு உணவ - அனைத்து சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உணவு
4. பசுக்கு உணவு
5. சிறைச் சோறு - சிறையிலிருக்கும் அனைவருக்கும் உணவு
6. ஐயம் - பிச்சையிடல்
7. திண்பண்டம் வழங்கல்
8. அறவைச் சோறு - அனாதைகளுக்கு உணவளித்தல்
9. மகப்பெறுவித்தல் - பிரசவம் பார்த்தல்
10. மகவு வளர்த்தல் - குழந்தைகள் வளர்த்தல்
11. மகப்பால் வளர்த்தல் - குழந்தைகளுக்குப் பால் வழங்குதல்
12. அறவைப் பிணஞ்சுடுதல் - அனாதைப் பிரேதங்களை அடக்கம் செய்தல்
13. அறவைத் தூரியம் - அனாதைகளுக்கு உடையளித்தல்
14. சுண்ணம் - வெள்ளை கொத்தல்.
15. நோய் மருந்து - வைத்தியம்
16. வண்ணார் - ஏழைகளுக்கு இலவசமாகத் துணி வெளுத்தல்
17. நாவிதர் - ஏழைகளுக்கு இலவசமாகச் சவரம் செய்தல்
18. கண்ணாடி - முகம் பார்க்கும் கண்ணாடி உள்ளே முத்துக் கண்ணாடி
19. காதோலை
20. கண் வைத்தியம்
21. தலைக்கெண்ணெய்
22. பெண்போகம் - காம நோயால் இறந்து படும் திக்கற்றவர்களுக்கு உதவுதல்
23. பிறர் துயர்காத்தல்
24. தண்ணீர்ப் பந்தல்
25. மடம் (சத்திரம்)
26. தடம் ( சாலை அமைத்தல்)
27. சோலை ( கோட்டம் வளர்த்தல்)
28. ஆவுரிஞ்கதறி - பசுமாடுகள் உடம்பைத் தேய்த்துக் கொள்ள மந்தைவெளியில் கல் நடுதல்
29. விலங்கிற்கு உணவு - சக்தியற்ற எல்லாவிதமான விலங்குகளுக்கும் உணவளித்தல்
30. ஏறுவிடுதல் - நல்ல ஜாதி மாடுகளை விருத்தி செய்ய, பொலி காளைகளை இலவசமாய் விடுதல்
31. விலை கொடுத்து உயிர் விடுதல்- விலை கொடுத்தாகிலும் உயிர்களைக் காப்பாற்றுதல்
32. கன்னிகாதானம் - கல்யாணம் செய்து வைத்தல்.

வில்வமரம்


வில்வமரம்

வில்வமரம்
வில்வமரம் இலங்கை, இந்தியா மற்றும் அயனமண்டலத்தை சேர்ந்த ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவரமாகும். சைவ சமய மரபுகளில் வில்வ மரத்திற்கு முக்கிய பங்கு உண்டு.

பயன்கள்பழத்தின் உள்ளீடு நேரடியாக உண்ணப்படுவதுடன் உலரச் செய்யப்பட்டும், உணவுவகைகளுக்குப் பெறுமதி கூட்டப்படுவதன் மூலமும் உள்ளெடுக்கப்படுகிறது. இளம் இலையும் அரும்பும் சலாது தயாரிப்பதில் உபயோகப்படுகிறது.
தமிழில் 'கூவிளம்' , 'இளகம்' எனப்பல பெயர்களில் வழங்கப்படும் இது தமிழ் சித்த மருத்துவத்தில் பல்வேறு பயன்களைக் கொண்டது. மூக்கடைப்பு, அஜீரணம், சயரோகம் முதலான நோய்களுக்கு இதன் இலை, பழம் என்பன மருந்தாக் பயன்படுகிறது.
ஆன்மீகப் பயன்கள் இந்து மதத்தில் வில்வ மரம் மிகப்புனிதமானது.சிவ வழிபாட்டில் வில்வ பத்திர பூசை முக்கியமானது.முக்கூறுகளைக் கொண்ட வில்வமிலை திரிசூலத்தின் குறியீடாகக் கொள்ளப்படுகிறது. இது இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என்பதைக் குறிக்கின்றது.
வீடுகளில் வில்வ மரம்

நாம் வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும்.ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்.
கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.
108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.
இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் எமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.
சிவனிற்கு பிரியமான வில்வர்ச்சினை மூலம் சிவனின் திருவருட் கடாச்சத்தைப் பெறமுடியும். வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவரிற்கு ஒருபோதும் நரகமில்லை.ஒரு வில்வதளம் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ணபுஸ்வங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமன்.வில்வம் பழந்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவை யாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன்படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படுகிறது.இவற்றைவிட வில்வம் மருத்துவரீதியில் பயன்மிக்கதாகும். இதனை “சிவமூலிகைகளின் சிகரம்” எனவும் அழைப்பர்.வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும். மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். பல்வலி, பல்சொத்தை, பல்கூச்சம் போன்றவற்றால் அவதியுறுபவர்களிற்கு அருமருந்தாகும்.கொலஸ்ரோல் வியாதி கட்டுப்படுத்தப்படும், இரத்த அழுத்த நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும், சர்க்கரை நோயும் சீர்படுத்தப்படும், அல்சர் அணுவும் அணுகாது, ஜீரணக்கோளாறுகள் ஏற்படாது, உடல் குளிர்ச்சியாக இருக்கும், தோல் மீது பூசிவர தோல் அரிப்புகுணப்படுத்தப்படும்.
இவ்வாறாக சிவனுக்குப் பிரியமானதும். ஆரோக்கியத்திற்கு அரணாக இருப்பதுமான வில்வமரத்தை வீட்டில்வைத்து புனிதமாகப் பேணி நன்மைகள் பலவும் பெறுவோமாக.

மார்க்கண்டேயர்


மார்க்கண்டேயர்

மார்க்கண்டேயர்
திருக்கடையூருக்கு சற்று தூரத்தில் அமைந்திருந்த காட்டுப் பகுதியில் குடில் அமைத்து மிருகண்டு என்ற மகரிஷியும், அவரது மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு குழந்தை ஆசை ஏற்பட்டதால் மிருகண்டு மகரிஷி சிவபெருமானை நோக்கி ஒற்றைக் காலில் தவம் இருந்தார்.
அவரது கடும் தவத்தில் ஈசனும் மனமுருகி அவர் முன் தோன்றினார். அவரிடம் குழந்தை வரம் கேட்டார் மிருகண்டு மகரிஷி.
அந்த வரத்தை கொடுத்த சிவபெருமான், அத்துடன் ஒரு நிபந்தனையையும் விதித்தார். குறைந்த ஆயுளும், நிறைந்த அறிவும் கொண்ட பிள்ளை வேண்டுமா? அல்லது நீண்ட ஆயுளுடன், ஆனால் குறைந்த அறிவும் கொண்ட மகன் வேண்டுமா? என்பதுதான் அந்த நிபந்தனை.
முட்டாளாக 100 வயது வாழ்வதைவிட நிறைந்த அறிவுடன் குறைவான ஆயுள் வாழ்வதே சிறந்தது என்று முடிவெடுத்த மிருகண்டு மகரிஷி, குறைந்த ஆயுளுடன் மெத்த அறிவு கொண்ட குழந்தையைக் கேட்டார். அதற்கு சிவபெருமான், நீ வேண்டியபடியே மகன் பிறப்பான். அந்த குழந்தை 16 ஆண்டுகளே உயிர் வாழும் என்று அருளிவிட்டு மறைந்தார்.
ஒரு வருடம் கழிந்தது.மிருகண்டு மகரிஷி தம்பதியர்க்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயர் சூட்டி வளர்த்தனர்
சிவபெருமான் அருளிய வரத்தினால் பிறந்ததாலோ என்னவோ, அவர் மீது மிகுந்து பற்று கொண்டு வளர்ந்தான் மார்க்கண்டேயன். சகல சாஸ்திரங்களையும், வேதங்களையும் படித்துத் தேறினான். எந்தக் கேள்வி கேட்டாலும் அவனிடம் இருந்து சட்டென்று பதில் வந்தது. மகனின் திறமையை எண்ணி பெருமிதம் கொண்டனர் மிருகண்டு தம்பதியர்.
மார்க்கண்டேயன் தினமும் திருக்கடையூர் வந்து, அங்கு அமிர்தகடேஸ்வரராக எழுந்தருளி அருள்பாலிக்கும் சிவபெருமானை தொழுது வந்தான்.
நாட்கள் வேகமாக ஓடின. மார்க்கண்டேயன் வாலிப வயதை அடைந்தான்.
அதுவரை மகனின் திறமையை பார்த்து வியந்து வந்த மிருகண்டு தம்பதியர், அவனது ஆயுள் முடியப் போகிறதே... என்று வருந்தினர்.
உண்மையை அறிந்த மார்க்கண்டேயன், பெற்றோரின் இந்த நிலையைக் காண சகிக்காமல் தனது 15 வயதிலேயே ஒவ்வொரு சிவ தலமாக சென்று 108 சிவ தலங்களை தரிசிக்க எண்ணினான். அதன்படி 107 சிவ ஸ்தலங்களில் வழிபட்டுவிட்டு இறுதியாக தனது 16 வயதில் திருக்கடையூர் வந்தான்.
“அமிர்தகடேஸ்வரரே... நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்“ என்று, அந்த சிவலிங்கம் முன்பு விழுந்து வணங்கி மந்திரங்கள் சொல்லத் தொடங்கினான்.அந்தநேரம் அவனது உயிரை எடுக்க எமனும் வந்து விட்டான். தனது தவத்தின் வலிமையால் அவனால் எமனைப் பார்க்க முடிந்தது. உடனே, அப்படியே அமிர்தகடேஸ்வரரான லிங்கத்தைக் கட்டியணைத்துக் கொண்டான். எமனும் அவன் உயிரைப் பறிக்க தன் பாசக்கயிறை வீசினான். அது சிவலிங்கத்தையும் சேர்ந்து விழுந்தது. கயிற்றை பலமாக இழுத்தான். ஆனால், அவனால் இழுக்க முடியவில்லை.
தன்மீது பாசக்கயிற்றை வீசி இழுத்த எமனைக் கண்டு கோபம் கொண்டார் சிவபெருமான். சட்டென்று லிங்கம் பிளந்து வெளியே வந்தார்.
“காலனே எனக்கும் சேர்த்தா பாசக் கயிறு வீசுகிறாய்?“ கோபத்தில் கர்ஜித்தவர் எமனை எட்டி உதைத்தார். அதன் பின்னரும் கோபம் தணியாமல் தன் கையில் இருந்த சூலாயுதத்தினால் காலனைச் சம்ஹாரம் செய்து, ‘கால சம்ஹாரமூர்த்தி’ ஆனார். தொடர்ந்து, மார்க்கண்டேயனை அன்புடன் தடவி, “என்றும் பதினாறாக இருக்கக் கடவாய்“ என்று சிரஞ்சீவி பட்டம் அளித்தார்.
எமன் இறந்தால் பூலோகம் என்ன ஆகும்...? பூமாதேவியால் பூமியின் பாரத்தை தாங்க முடியவில்லை. “இறப்பே இல்லாமல் இருந்தால் எனக்குச் சுமை அதிகமாகும். ஆகையால் எமனுக்கு உயிர்ப் பிச்சை அளியுங்கள்” என்று வேண்டினாள்.சிவபெருமானும் எமனுக்கு உயிர்ப் பிச்சை அளித்து ஒரு நிபந்தனையும் விதித்தார். “யார் என்னிடத்தில் மிக பக்தியாக உள்ளார்களோ அவர்களை வதைக்காதே!” என்பதுதான் அந்த நிபந்தனை.

எந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும்


எந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும்

ராகம் !

எந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும் :
ஆகிர் பரவி................... அஜீரணத்தையும், ஹைபர் டென்ஷன் எனும் உயர் ரத்த அழுத்தத்தையும், மூட்டு வலிகளையும்

குணப்படுத்துகிறது .

பைரவி ............................ முட்டி மற்றும் முழங்கால் வலி .

சந்திரகௌன்ஸ் ........... பசியின்மை .

தர்பாரி கானடா .......... தலைவலி .

தீபக் ................................... அஜீரணம், பசியின்மை, நெஞ்செரிச்சல், குடற்கற்கள் .

குஜரிகோடி ..................... இருமல், சளி .

குணகளி .......................... மலச்சிக்கல், தலைவலி, மூலம் .

ஜோன்புரி ........................ வாயுக்கோளாறு, பேதி, மலச்சிக்கல் .

ஜெய் ஜெய் வந்தி ... பேதி, தலைவலி, மூட்டுவலி .

( த்வஜாவந்தி )

மால்கௌன்ஸ் ............. குடல் வாயு .

பூர்விகல்யாணி ............ இரத்தசோகை, டென்ஷன், குடல் எரிச்சல் .

பூர்ய தனஸ்ரீ ................. இரத்தசோகை .

சோஹானி .................... தலைவலி.

வசந்த பஹார் .............குடற்கற்கள் .

யெமன் கல்யாணி ....... மூட்டுவலி.

.

Monday, June 27, 2011

S T U D Y


படிப்பதினால் அறிவு பெற்றோர் ஆயிரம்,
பாடம் படிக்காத மேதைகளும் ஆயிரம் உண்டு !…………..
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை;
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை…!
பல மனிதர்கள் இயற்க்கையாகவே பள்ளீ, கல்லூரி சென்று நன்கு படித்து,அறிவாளியாகி நன்கு முன்னேறிவிடுவர்.அவர்களுக்கு நல்ல தொழில்முறை திறமையும்,வாதத்திறமையும் ,அழகு,கலை,அறுசுவை ஆகியவற்றை கொள்கை பிடிப்போடு ரசிக்கும் தன்மையும் எல்லா திறமைகளூம் ஒருசேரப் பெற்றவராக இருந்தாலும்,ஏதேனும் ஒரு விஷயத்தில் சரியான முடிவெடுப்பதற்குள், தட்டுத்தடுமாறி,கடைசியாக தவறான முடிவிற்கே வருவார்கள். இத்தகைய படித்தமேதைகளுக்கு அடிப்படையிலேயே தேவையான் பொதுஅறிவு இல்லாததே காரணமாகும்.இவ்வுலகில் இன்னும் சில மனிதர்கள் அவர்களின் மொத்த குடும்பத்தின் சுமைகளையும் சுமந்து கொண்டிருக்கும் சுமைதாங்கிகளாயும், மழைக்கு கூட பள்ளிக்குள் ஒதுங்காதவர்களாக வும் இருப்பர்.ஆயினும் அந்த படிக்காதமேதைகளால் கண்டிப்பாக, எந்த விஷயத்தையும் சீர்தூக்கி பார்த்து ,அதன் சாதகபாதகங்களையும் அலசி தந்திரமாக சமாளிக்கும் கலைகளை பிரயோகித்து, மிக துல்லியமாக,நிகழ்வுகளுக்கு சரியான முடிவுகளை எடுக்ககூடிய திறமை இருக்கும்.அந்த படிப்பறிவில்லாத பாமரனுக்கு படிப்பில்லையெனினும், பொதுஅறிவில் சிறந்தவராக இருப்பதால், இயற்கையாகவே அனுபவத்தால் அது சாத்யமாகிறது . மேலும்,எப்படிச்செய்தால்,எப்படி முடியும் என்று நன்கு அறிந்திருப்பார்.ஆனால், அதிமேதாவிகளுக்கோ,இத்திறமைகள் இருப்பதில்லை.ஏனெனில் எப்போதுமே ஏட்டுச்சுரைக்காய்,கறிக்கு உதவுவதில்லை என்ற பழமொழி நாம் அறிந்த ஒன்றே. மேலே குறிப்பிடப்பட்ட பாடல்களும் இதையே விவரிக்கின்றன.
இப்போது,முடிவெடுக்கும் ,திறமைக்கான,தெளிவான அறிவுக்கான ஜோதிட காரணிகளைப் பார்ப்போம்.
நினைவுகளூம்,முடிவுகளும் மனதிலிருந்து எழுபவை.அந்த மனதுக்கு காரகன் சந்திரன் ஆவான்.அதேபோல்,எதையும் சீர்தூக்கிப் பார்த்து நல்லது கெட்டதை பகுத்தறிந்து உணரும் தெளிவைத் தருவது புத்தி. இந்த புத்திகூர்மைக்கு காரகன் புதன் ஆவான்.எனவே,100% சரியான,நல்ல முடிவெடுக்கும் திறமைக்கு புதனே காரணகர்த்தா. மேலும், முடிவெடுக்கும் திறமைக்கு தர்க்கம் செய்யும் திறமையும் அவசியமாகிறது. செவ்வாயே, தர்க்கதிறமைகளை தருபவன்.
செவ்வாய்,புதனுடனான நல்லுறவு…,முக்கியமாக அசுபகிரகங்களால் பதிக்கபடாததன்மையும்,நிழல் கிரகங்களான் ராகு-கேதுக்களின் தாக்கமும் இந்த தர்க்கதிறமையை கூட்டுகின்றன.ஸ்திரம் மற்றும் நெருப்பு ராசிகளில் ,இருபுறமும் சுபர்கள் புடைசூழ நிற்கும் புதன்,தீர்மானமான,அனுபவரீதியான முடிவெடுக்கும் சக்தியை அளிக்கிறான்.
தயை செய்யும் கிரகங்களின் தாக்கங்கள்
சாதகமான அல்லது தயை புரியும் நிலைகள் யாதெனில், புதன் பலமுடன் திகழ்வதும்,சந்திரன் சுபர்களின் ,அதாவது குரு ,சுக்கிரனின் தயை தரும்தாக்கம் அல்லது தொடர்பு பெருவது நல்லது.மேலும் அதிக சுபர்களின் தயை பெறும் சந்திரன் இன்னிலைக்கு மிகவும் உதவுபவன் ஆவா ன். எனவே, சந்திரன் தனது சுயபலத்துடன் இருப்பது அவசியமாகிறது,வளர்பிறை சந்திரனாகவும் இருக்கவேண்டும்.
மேலும்,குருவு க்கோ அல்லது சுக்கிரனுக்கோ திரிகோணத்தில், புதன் இருக்க அல்லது சூரியனுடன் கூடிய புதன் ஆகிய நிலைகளும் நுண்ணறிவைதரும். இத்துடன்கூட ராகுவின் தாக்கத்திலிருந்து லக்னம் சுதந்திரம் பெற்று இருக்கவேண்டும். அதேபோல மிக குறைவான் அளவில் கேதுவின் தாக்கமும் இருக்கவேண்டும்.லக்னம் அல்லது சந்திரனுக்கு தாக்கந்தரும் நிழல்கிரகங்கள்,அனுகூலமான நல்ல முடிவுகளை அளி ீக்கவல்லது என்றாலும், நினைப்புத்தான் போழப்பை கெடுக்கும் என்பது போல், ஒருவரின் நினைப்பையும், பகுத்தறிந்து பார்க்கும் சக்தியையும் நாசம் செய்து விடுகின்றன. அவை, ஒருவரிடம்,எதையும் மிகைப்படுத்தி கூறும் தன்மையை அதிகரித்தும், எதையும் ஆச்சர்யகரமாக பார்க்கும் தன்மையும் கோடுத்து அவர்களின் திறமைகளை முடக்கி ,அதன் காரணமாக் எதற்கும் சரியான் முடிவெடுக்க முடியாத நிலைக்கு அவரை தளளிவிடுகிறது. இதன் காரணமாக,அந்த நபர் எந்த முடிவும் எடுப்பதற்கும், தனது விருப்பு வெறுப்புகளே இறுதியானது என்று நம்பிக்கொண்டு,அந்த தவறான் நம்பிக்கையிலேயே திருப்தியடைந்து, காரியத்தைக் கோட்டைவிட்டுவிடுவார்கள் என்பதே உண்மை.
இனி பாவ நிலைகளைப் பற்றி பார்ப்போம்.
ஐந்தாம் பாவம் புத்திகூர்மையைக் குறிப்பதாகும்.ஒருவருக்கு விவேகமிக்க, அனுபவ பூர்வமான புத்தி அல்லது மனம் எப்போது வருமேனில்……………………
1. சுபர் இடம் பெற்ற அல்லது சுபரால் பார்க்கபட்ட, சுபகிரகராசியாக ஐந்தாம் பாவம் அமைய……………..
2. ஐந்தாம் அதிபதி சுபகர்த்தாரியில் இருக்க அல்லது உச்சம் பெற்றிருக்க……..
3. கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ குரு இருக்க…………
4. குருவின் அனுகூலமான தாக்கம் ஐந்தாம் பாவத்திற்கு அமைய……………..
5. ஐந்தாம் அதிபதி பலம்பெற்று கேந்திரத்திலிருக்க மற்றும் புதன் ஐந்திலிருக்க
6. ஐந்தாம் அதிபதி சுபருடன்கூடி கேந்திரத்தில் இருக்க………………..
7. ஐந்தாம் அதிபதி கோபுராம்சம் பெற அல்லது வேறு உயரிய அம்சம் பேற்……
8. இந்த அனைத்து நிலைகளிலும்,புதனும்,சந்திரனும் நல்ல நிலை பெறுவதே மிக முக்கியமானதாகும்.
எனவே, எந்த செயலுக்கும்,குழப்பங்களுக்கும் இறுதி முடிவளிக்கும் திறமையை மனிதனுக்கு அளிப்பது மனமும், புத்தியுமாகிய சந்திரனும், புதனும்தான் என்பது நிதர்சனமன்றோ !.

“பிறவிப் பெருங்கடல் நீத்துவர் நீத்தார் இறைவனடி சேராதவர்”


“பிறவிப் பெருங்கடல் நீத்துவர்
நீத்தார் இறைவனடி சேராதவர்”
என்ற திருவள்ளுவரின் வாக்குப்படி இறைவன் அடியினை சேர விரும்புபவர்கள் அதாவது இனியொரு பிறவி வேண்டாம் முத்தீ – மோட்சம் அடைய வேண்டும் என நினைப்பவர்கள் ஜோதிடப்படி 12ம் வீடு, அதற்குரிய கிரகம், அந்த கிரகம் இருக்கும் வீடு, அந்த வீட்டிற்குரிய கிரகம், 12ம் வீட்டினை பார்க்கும் கிரகம், 12ம் வீட்டில் உள்ள கிரகம், 12ம் வீட்டு கிரகத்துடன் சேர்ந்துள்ள கிரகங்கள், 12ம் வீட்டு கிரகத்தினைப் பார்க்கும் கிரகம் என பல தரப்பட்ட வழிகளிலும் ஆராய்ந்து தனக்குரிய வழிபாட்டு முறையினை தேர்ந்தெடுக்க வேண்டும்.
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.
இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.

Friday, June 24, 2011

யோகத்தின் அமைப்பு: பத்தாம் வீட்டில் ராகு, பத்தாம் வீட்டு அதிபதி லக்கினத்தில், லக்கின அதிபதி 9ஆம் வீட்டில் இருந்தால் அது இந்த யோகத்தைக் கொடுக்கும். அதுபோல ஒற்றைப் படை வீடுகளில், அதாவது ஜாதகத்தில் 1,(லக்கினம்),
3, 5,7,9,11 ஆகிய வீடுகளில் எல்லா கிரகங்களும் இருப்பதும் இந்த யோகத்தைக்
கொடுக்கும்.

பலன்: ஜாதகன் நாட்டின் ஒரு பகுதிக்கு நிர்வாகியாகும் நிலைக்கு உயர்வான். அது கிராம அதிகாரி அல்லது

பஞ்சயாத்து ஒன்றியத் தலைவர் பதவியில் இருந்து மாவட்ட ஆட்சியாளர், மாநில ஆளுனர், முதன் மந்திரி பதவி வரைக்கும் மாறுபடலாம். அந்த பதவி வித்தியாசம் ஏற்படுவதற்கு, குறிப்பிட்டுள்ள அந்த வீடுகளின்/வீட்டு அதிபர் களின் அஷ்டகவர்க்கப் பரல்கள், சுயவர்க்கப்பரல்களின் அளவு காரணமாக இருக்கும். ஜாதகன் பொதுவாகப் பலரின் மரியாதைக்கு உரியவனாக விளங்குவான். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உடையவனாக விளங்குவான்.

சிலர் ஜாதகத்தில் மற்ற அம்சங்கள் மாறுபடும்போது, ஜாதகன் ராணுவத்தில் சேர்ந்து நல்ல அந்தஸ்த்தில் பணிபுரிவான்

லக்னம்.


 லக்னம் சூரியனைப் பற்றியது.
 60 நாழிகைகள் கொண்டது   ஒரு நாள்.
2 1/2 நாழிகை என்பது ஒரு மணி   நேரம்
ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள்
ஒரு முஹூர்த்த நேரம் 1 3/4 நாழிகை அல்லது42 நிமிடங்கள்.
60 நாழிகைகள் 12 லக்னங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு லக்னத்திற்கும் பெயரும்,
நாழிகைகளும்  கொடுக்கப்பட்டிருக்கின்றன. பகல் நேரத்தில் 6 லக்னங்களும், இரவு
நேரத்தில் 6 லக்னங்களும் உள்ளன.
மேஷ லக்னம் 4 1/4 நாழிகை.
ரிஷப லக்னம் 4 3/4 நாழிகை.
மிதுன லக்னம் 5 1/4 நாழிகை.
கடக லக்னம் 5 1/2 நாழிகை
சிம்ம லக்னம் 5 1/2 நாழிகை
கன்னி லக்னம் 5 நாழிகை
துலா லக்னம் 5  நாழிகை
விருச்சிக லக்னம் 5 1/4 நாழிகை
தனுர் லக்னம் 5 1/2 நாழிகை
மகர லக்னம் 5 1/2 நாழிகை
கும்ப லக்னம் 4 1/4 நாழிகை
மீன லக்னம் 4 1/4 நாழிகை இவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளன. 

Wednesday, June 22, 2011

munnar vattakadu idli

Ingredients:

Dosa rice 2 cups
Udad dal 1 cup
Thick poha (beaten rice) 2 handful
Methi seeds ( fenugreek seeds) 1/4 tsp


Method:

1. Soak rice, udad dal- methi seeds separately for atleast 5-6 hours.

2. Just before grinding - wash and clean the poha and soak it in water and set it aside.

3. First grind the rice into a paste using enough water (not too fine nor too coarse) empty it in a clean vessel and set it aside.

4. Next, grind the udad dal-methi, and poha ( drain the water from the soaked poha) into and medium coarse-fine paste.

5. Add this batter to the rice batter. Add salt as per your taste and mix well.

6. Cover the vessel and keep it in a cool ,dry place to ferment over night.

To prepare Idlis:

1. The next morning, carefully stir the batter as it would've risen due to fermentation.

2. Transfer as much batter you need for the idli preparation into a smaller vessel and refrigerate the rest of the batter. This way the batter will last for a couple of days, without getting sour.
you can use it as and when you need it.

3. Grease the idli stand groves with little oil and spoon enough batter to cover the groves. I steam idlis in greased steel bowls. Place them in the steaming utensil and steam for 30- 35 minutes or until done.

4. Once the idlis are done, open the lid of the steamer and remove the idlis from it and let it cool for a couple of minutes in the idli stand/bowls .


5. Dish out the idlis using a knife or a butter knife, run it in circular motion around edges of the idlis.

6. Serve the Idlis with any chutney of your choice.

பஞ்சாங்கம் சொல்லும் சில பொதுவான குறிப்புக்கள் :

பஞ்சாங்கம் சொல்லும் சில பொதுவான குறிப்புக்கள் : 
1. விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயக சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்)
2. பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பைபில்வம்கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தைவெள்ளெருக்கு ஆகியனவற்றாலும் அர்ச்சிக்கலாம்.
3. விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.
4. அம்பிகைக்கு அருகம்புல் உகந்ததல்ல.
5. லட்சுமிக்குத் தும்பை கூடாது.
6. பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.
7. விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோலசிவ சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே பில்வார்ச்சனை செய்யலாம்.
8. துலுக்க சாமந்திப்பூவை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.
9. மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாக கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.
10. வாடிப்போனஅழுகிப்போனபூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.
11. அன்றலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.
12. ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்துமீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. பில்வம்துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.
13. தாமரைநீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்ற விதி இல்லை.
14. வாசனை இல்லாதது: முடிபுழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது. வாடியது: தகாதவர்களால் தொடப்பட்டதுநுகரப்பட்டது: ஈரத்துணி உடுத்திக் கொண்டு வரப்பட்டது. காய்ந்தது. பழையது. தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாது.
15. சம்பக மொக்குத் தவிரவேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.
16. மலர்களை கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம். துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.
17. முல்லைகிளுவைநொச்சிவில்வம்விளா - இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.
18. துளசிமுகிழ் (மகிழம்) செண்பகம்தாமரைவில்வம்செங்கழுநீர்மருக்கொழுந்துமருதாணிதர்பம்அருகுநாயுரவிவிஷ்ணுக்ராந்திநெல்லி ஆகியவற்றின் (இலை) பத்ரங்கள் பூஜைக்கு உகந்தவை.
19. பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம்மாதுளைஎலுமிச்சைபுலியம்பழம்கொய்யாவாழைநெல்லிஇலந்தைமாம்பழம்பலாப்பழம்.
20. திருவிழாக் காலத்திலும்வீதிவலம் வரும் போதும்பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும்மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாதென விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.
21. அபிஷேகம்ஆடை அணிவிப்பதுசந்தன அலங்காரம்நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.
22. குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்துகுடுமியை நீக்கிவிட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.
23. பெருவிரலும் மோதிரவிரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.
24. கோயில்களில்பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ள கூடாது.
25. பூஜையின் துவக்கத்திலும்கணபதி பூஜையின் போதும்தூப தீபம் முடியும் வரையிலும் பலிபோடும் போதும் கை மணியை அடிக்க வேண்டும். மணியின் சப்தமில்லாவிடில் அச்செயல்கள் பயனைத் தரமாட்டா
26. ஒன்றுமூன்றுஐந்துஒன்பதுபதினொன்று அடுக்குகள் கொண்ட தீபத்துக்கு மஹாதீபம் அல்லது மஹாநீராஜனம் என்ற பெயர்.
பொதுவான கடமைகள்
1. வாரத்துக்கு ஒரு நாளேனும்குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
2. தியானம் பழக வேண்டும்.
3. பஜனைசத்சங்கம்கதாகாலட்சேபம்சமயப் பேருரை நிகச்சிகளுக்குச் செல்ல வேண்டும்.
4. துறவிகள்ஞானிகள்மாடாதிபதிகளைத் தரிசனம் செய்ய வேண்டும்.
5. வீட்டில்நாம சங்கீர்த்தனம்சிறப்பு வழிபாடு போன்றவற்றைஅண்டை அயலார்களின் ஒத்துழைப்புடன் நிகழ்த்த வேண்டும்.
6. வீட்டில் ஓம் படம் மாட்டி வைக்கவும்.
7. இந்து தர்ம பிரசார இயக்கங்கள் பத்திரிகைகளுக்கு ஆதரவு அளிக்கவும்.
8. புராணஇதிஹாஸதேவாரதிவ்யபிரபந்த நூல்கள் கட்டாயமாக ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இருக்க வேண்டும்.
9. இந்து பண்டிகைகளைவெறும் விழாக்களாகக் கருதாமல் தெய்வங்களோடு ஒட்டுறவு கொள்ளும் தருணங்களாக மதித்துக் கொண்டாட வேண்டும்.
10. அருகிலுள்ள அனாதை இல்லம்முதியோர் இல்லம்கண் பார்வையற்றோர்செவிகேளாதோர் சேவை இல்லங்களுடன் தொடர்பு கொண்டுஇயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.
11. பெற்றோர்களைத் தெய்வமாகப் போற்றிப் பணிந்து பணிவிடை செய்தல் வேண்டும்.
12. வீட்டில்தரக்குறைவான சினிமாப் பாடல்கள் ஒலிக்க அனுமதிக்கக் கூடாது. பாலுணர்வுவன்முறைபழிக்குப்பழிபேராசை ஆகிய தீய உணர்வுகளைப் பாராட்டும் புதினங்கள் - புத்தகங்களை வாங்கக் கூடாது.
இந்துக்களின் தினசரிக் கடமைகள்:
1. தினமும் சூரியன் உதிப்பதற்கு முன் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவும்.
2. காலையில் எழுந்தவுடனும்நீராடிய பின்னும்உணவு கொள்ளும் போதும் இஷ்ட தெய்வத்தைச் சிந்திக்கவும்.
3. நெற்றியில் இந்து சமயச் சின்னம் (திருநீறுகுங்குமம்சந்தனம்திருநாமம் - ஏதேனும்) அணியாமல் இருக்கக் கூடாது.
4. இறைவழிபாட்டுக்கு எனதனியே இடம் ஒதுக்கித் தவறாது வழிபாடு செய்யவும். காலை - மாலையில் விளக்கேற்றி நறுமணப் புகை பரவச் செய்யும்.
5. சமய நூல்களை படித்தல் வேண்டும்.
6. படுக்கும்போது தெய்வத்தின் நினைவோடு படுக்க வேண்டும். 

உலகங்களை உற்பத்தி செய்து பரிபாலித்து வரும் பகவானுடைய அரசாங்கம்தான் மிகப்பெரிய அரசு ஆகும். முப்பத்து முக்கோடி தேவர்களும் பித்ருக்களும் ஈசுவரனுடைய அரசாங்கத்தின் அதிகாரிகள் ஆவர். வடக்கில் உள்ள தேவலோகமும் தெற்கில் உள்ள பித்ரு லோகமும் அவர்களுடைய இருப்பிடம் என்று மறைகள் கூறுகின்றன.
இந்த இறைவனது அரசுக்கு நாம் செலுத்தும் வரிகள் - தேவர்கடனும்  பிதுர் கடனும்.
நம்மையெல்லாம் காக்கின்ற அவ்வதிகாரிகளின் ஜீவனத்துக்கு என்ன வழி-வகை செய்துள்ளார்ஸர்வேசுவரன்?
நாம் செய்யும் தேவ யக்ஞங்களும் பித்ரு யக்ஞங்களுமே அவர்களை காப்பாற்றுகின்ற