Wednesday, August 3, 2011

MARS DASA


SUN-MOON-MARS



3. செவ்வாய்
இதுவரை உங்களிடம் பேசினார்களே சூரியன், சந்திரன், இவர்களுக்கு மட்டுமில்லை, மற்றுமுள்ள ராகு, குரு, சனி, புத, கேது, சுக்ரன் எல்லோருக்குமே சேனாதிபதி நான் தான். மற்ற கிரகங்கள் தீமை செய்யும் நிலையிலிருந்தால் "சூரியன் பலமிழந்துட்டாரு", "கேது கெட்டிருக்காரு" என்று தான் ஜோதிடர்கள் சொல்வார்கள். நான் தீமை செய்யும் நிலையில் இருந்தால் மட்டும் ஜாதகத்தையே தோஷ ஜாதகம் என்று ஓரமாய் வைத்து விடுவார்கள்!
ஏன் தெரியுமா? என் இலாகா அப்படி! நான் அதிகாரம் செலுத்தும் விஷயங்கள் அப்படி!
வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், எலும்புக்குள் வெள்ளையணுக்களை (நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுபவை இவையே - நோய்வராது காப்பவை) உற்பத்தி செய்யும் மஜ்ஜை. கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், தெற்கு திசை, பவழக்கல், சத்ரிய குலத்தினர், அறுவை சிகிச்சை, விபத்து, சமையல் இவை எல்லாவற்றிற்கும் நானே அதிபதி.சூட்டுக் கட்டிகள், ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள், போட்டி, ஸ்போர்ட்ஸ், என்.சி.சி. முருகக்கடவுள், பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம், பலி இவையும் என் இலாகாவின் கீழ் வருபவையே. நீங்கள் ஹை, லோ பிபி, ரத்தசோகை, அல்ஸர் போன்ற வியாதிகளால் அவதிப்படுபவரா?
சகோதரர்களே எதிரிகளாகி, பிற எதிரிகளுடன் சேர்ந்து உங்களைத் தொல்லைப்படுத்துகிறார்களா? ஏற்கனவே விபத்து, தீவிபத்து எதிலாவது சிக்கியுள்ளீர்களா? அறுவை சிகிச்சை நடந்துள்ளதா? காதல் திருமண விசயங்களில் பின்னடைவால் வருந்துபவரா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம்.மேற்சொன்ன உபாதைகள் ஏதுமின்றி நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் எந்தப் பிரச்சினையுமின்றி தொழில், வியாபாரம் செய்து வருகிறீர்களா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நன்மை செய்யும் நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம். நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள், என்னால் விளையும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும். பரிகாரங்கள்1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.
8. நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் இருந்து விலகுங்கள். அவற்றிலிருந்து வரும் ஆதாயங்களைத் தவிர்த்துவிடுங்கள்.



2.சந்திரன்

2. சந்திரன்
வடமேற்குத் திசை, வெண்முத்து, பிரமுகர்களின் மனைவியர், தாய், தாயுடனான உறவு, தாய்வழி உறவு, நுரையீரல், சிறு நீரகம், மனம், இரவு நேரம், முழுநிலா நாள், சஞ்சலம், தண்ணீர்த் தொடர்பான இடங்கள், தொழில்கள், யார் எவ்வளவு நேரம் இருப்பார்கள் என்று சொல்ல முடியாத இடங்கள் (உம்) நீச்சல் குளம், கல்யாண மண்டபம், காய்கறி மார்க்கெட், பேருந்து, ரயில் நிலையங்கள் முதலியன. படகு, கப்பல் பயணம், 15 நாட்கள் துள்ளல், 15 நாட்கள் துவளல், திடீர்ப் பயணம், கண்டதும் காதல், சீஸனல் வியாபாரங்கள், மக்களுடன் நேரடித் தொடர்புள்ள வேலைகள், நதி, நதிக்கரை, கடற்கரை, தாய் வயது பெண்கள், இரண்டேகால் நாட்களில் முடிந்து விடக்கூடிய வணிகங்கள் இவற்றிற்கெல்லாம் சந்திரகியறி நானே அதிபதி.நீங்கள் புதுமை, என்றும் இளமை, பொதுமக்கள் ஆதரவு, நீண்ட சுவாசம், திடீர் நன்மைகள், திடீர் பணவரவுகளுடன் வெற்றிமேல் வெற்றி பெறுபவரா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.இதற்கு மாறாக நிலையில்லாத வாழ்க்கை, அடிக்கடி தொழில் மாற்றம், வேதனையுடனான ஊர் மாற்றம், மனச்சோர்வு, நோயாளியான தாய், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சனைகளுடன் நீங்கள் அவதிப் படுகிறீர்கள் என்றால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம்.நான் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். என்னால் விளையும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.பரிகாரங்கள்1. அமாவாசைக்குப் பின்வரும் 14 நாட்கள் நிலவொளியில் உணவருந்துங்கள் (அதாங்க நிலாச்சோறு).2. ஊஞ்சலாடுங்கள். மீன் தொட்டி வைத்து வண்ணமயமான மீன்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.3. நான் அதிகாரம் வகிக்கும் தொழில்களில் ஈடுபட்டிருந்தால் மெல்ல கழண்டு கொள்ளுங்கள்.4. உங்களுக்குத் தூசு, டென்ஷன், புகை, உதவாது. சுத்தமான குடிநீரையே அருந்துங்கள்.5. ஆயுதம் தரிக்காத, சாந்தமான அம்மனை வணங்குங்கள். முக்கியமாய்க் கன்னியாகுமாரி அம்மன்.6. அருகம்புல் சாறை அருந்துங்கள்.7. சந்திரபலம் இருக்கும் நாட்களில் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுங்கள்.8. வாக்குக் கொடுக்காதீர்கள். காமராஜர் மாதிரி "பார்க்கலாம்" “பார்க்கலாம்" என்றே சொல்லிக் கொண்டிருங்கள்.9. கண்களின் தண்டனைக் காதல்வழி என்ற கவிஞரின் வைர வரிகளை மறக்காதீர்கள். நீச்சல், தலைக்குக் குளிப்பது, அதிக வெயில், அதிகக் குளிர் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.10. வடமேற்கில் சமையலறை கூடாது, பள்ளங்கள் கூடாது.
1. சூரியன்
உங்களில் பலருக்கு ஜாதகமேயிருக்காது. உங்களுக்கு ஜாதகம் இல்லாவிட்டலும் பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம் தெரியாவிட்டாலும் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல  நிலையில் இருக்கிறேனா? இல்லையா? என்று தெரிந்து கொண்டு தகுந்த பரிகாரங்களையும் செய்து கொள்ளலாம்.கடவுள் பிரதமர்! நவக்கிரகங்களே மந்திரிகள்!!ஒரு பிரதமர் எப்படி மந்திரிகளுக்கு இலாகாக்களைப் பிரித்துக் கொடுக்கிறாரோ அதேபோல் கடவுளும் எங்களுக்கு (நவகிரகங்களுக்கு) இலாக்காக்களைப் பிரித்துக் கொடுத்துள்ளார். நாங்கள் எங்கள் இலாகாவின் கீழ் வரும் விஷயங்கள், விவகாரங்களில் அதிகாரம் செலுத்துகிறோம். நாங்கள் உங்கள் ஜாதகத்தில் நன்மை செய்யும் நிலையிலிருந்தால் நன்மை செய்கிறோம், தீமை செய்யும் நிலையிலிருந்தால் தீமை செய்கிறோம்.நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல இடத்தில் உட்கார்ந்து நன்மை செய்யும் நிலையிலிருந்தால், அதிகாரம் செலுத்தும் விஷயங்களையெல்லாம் வாரி வழங்கிடுவேன். கிழக்குத்திசை, மாணிக்கக்கல், தானம்-கடிகாரம், ஆத்மா-தந்தை, தந்தையுடன் உறவு, தந்தைவழி உறவு, தன்னம்பிக்கை இதற்கெல்லாம் நானே அதிகாரி. பல், எலும்பு, முதுகெலும்பு, வலதுகண், மலைப் பிரதேசங்கள், தலைமைப் பண்புகள், மேற்பார்வை, தாமரைமலர், விளம்பரங்கள், நாளிதழ்கள் இவை யாவும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே! பித்தளை, திட்டமிட்ட தொடர்ச் சுற்றுப்பயணங்கள், உள்ளூர், ஊராட்சி, நகராட்சி மன்றங்கள், ஒளிவு மறைவற்ற பேச்சு, ஒல்லியானவர்கள், கோரைப்புல் போன்ற தலை முடியுடையவர்கள், கூரையில்லாத வீடு, ஏகபுத்திரன், ஒற்றைத்தலைவலி, எலும்பு முறிவு, தூக்கமின்மை இவையாவும் என் அதிகாரத்தின் கீழ்வருபவையே.ஆதர்ச புருஷரான தந்தை, அவருடன் நல்லஉறவு, தன்னம்பிக்கை, நாலு பேரை வைத்து வேலைவாங்கும் தொழில், இப்படி உங்கள் வாழ்க்கை இருந்தால் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம். மாறாகப் பல்நோய், எலும்பு முறிவு, தாழ்வு மனப்பான்மை, தந்தையுடன் விரோதம், அடிமைத் தொழில் இப்படியாக உங்கள் வாழ்க்கை நகர்கிறதா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால், நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம்.நான் மட்டுமே அல்ல. வேறு எந்தக் கிரகம் அளிக்கும் தீயபலனிலிருந்தும் யாரும் தப்பவே முடியாது. எங்கள் தீயபலன் என்பது சீறிக்கிளம்பிவிட்ட துப்பாக்கிக் குண்டு போன்றதாகும். இதை இதயத்தில் வாங்கிக்கொள்வதா? தோளில் தாங்கிக் கொள்வதா என்பது உங்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்த விஷயம்.இறைவன் பேரருளாளன். எந்த ஜாதகத்தை எடுத்தாலும் எந்தக் கிரகமும் 100% தீயபலனைத் தரும் நிலையில் இருக்காது. அதே நேரம் எந்தக் கிரகமும் 100% நல்ல பலனைத் தரும் நிலையிலும் இருக்காது. எனவே ஒவ்வொரு ஜாதகரும், நான் ஆதிக்கம் செலுத்தும் விஷயங்களில் ஒரு சிலவற்றிலாவது, கொஞ்சமாவது நற்பலனைப் பெற்றே தீருபவர்கள்.என் கட்டுப்பாட்டிலிருக்கும் விஷயங்களை முன்பே சொல்லியுள்ளேன். அவற்றில் உங்கள் நிலைக்கு இன்றியமையாதவை எவையோ! அவற்றை மட்டும் தனியே குறித்துக் கொள்ளுங்கள். அவை தவிர மற்ற விஷயங்களை விட்டு விலகியிருங்கள். என்னுடைய தீயபலன் குறைந்து நற்பலன்கள் அதிகரித்துவிடும்.நீங்கள் எதையாவது பெறவேண்டும் என்றால் எதையாவது இழந்துதான் ஆகவேண்டும். கால்படி சோறு வேகும் பாத்திரத்தில் அரைப்படி அரிசி வேகவைத்தால் என்ன ஆகுமோ, அதுவேதான் குறைந்த அளவு கிரக பலத்தை வைத்துக்கொண்டு அந்தக் கிரகம் ஆளுமை செய்யும் எல்லா விஷயங்களிலும் பலன் பெற நினைத்தாலும் நிகழும் பாத்திரத்தை (கிரகபலத்தை) மாற்ற முடியாது, என்றாலும் அரிசியைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லவா! அகல உழுவதைக்காட்டிலும் ஆழ உழுவது நன்றல்லவா?இதுவரை நான் சொன்னதை வைத்து நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் உள்ளேன் என்பதை அறிந்து கொண்டிருப்பீர்கள். நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களை நீங்கள் செய்து கொண்டால் என்னால் விளையக் கூடிய தீயபலன்கள் குறையும். நல்ல பலன்கள் அதிகரிக்கும்.பரிகாரங்கள்1. தினசரி சூரிய நமஸ்காரம் செய்க2. காயத்ரி மந்திரம் படிக்கவும்3. சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) அதிகமுள்ள உணவை உட்கொள்ளவும்.4. சிறு நீர்ப் பரிசோதனை செய்வித்துக் கால்ஷியம் இழப்போ, யூரிக் அமிலத்தின் அதிகரிப்போ இருந்தால் உடனடியாகச் சிகிச்சையைத் துவக்கவும்.5. நான் அதிகாரம் செலுத்தும் விசயங்களில் இருந்து வருவாயைத் தவிர்க்கவும். நான் அதிகாரம் செலுத்தும் தொழில்களில் நீங்கள் தற்போது இருந்தால் மெல்ல வேறு தொழிலுக்கு (உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் உள்ள கிரகம் காரகத்வம் வகிக்கும் தொழிலுக்கு) மாறிவிடவும். 6. வீட்டின் நடுப்பாகத்தில் பள்ளம், உரல் இருந்தால் அப்புறப்படுத்தவும்.

RAGHU

Raghu

திரைத்துறைப் பிரமுகர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது, தாதாக்களுடன் ரகசியத் தொடர்பு கொண்டிருப்பது, மாயமாய் மறைவது, பின் திடீர் என வெளிப்படுவது, விஷமருந்திச் செத்துப்போவது போன்ற செய்திகள் தொடர்ந்து வெளிவருவதைப் பர்த்திருப்பீர்கள். இதற்கு காரணம் என்ன தெரியுமா?நான் அவர்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் இருந்திருப்பேன். இருந்தாலும் அவர்கள் வேறு கிரகங்களின் பலத்தால் (சுக்ரன்–அழகு, கலை, நாட்டியம். புதன்–எழுத்து, கம்யூனிகேஷன். செவ்–சண்டைத்திறமை. குரு-பணம்) என் ஆதிக்கத்திற்குட்பட்ட சினிமாத்துறையில் ஓரளவு சாதித்தார்கள். தரை டிக்கட் வாங்கிவிட்டு கேபினில் உட்கார்ந்து படம் பார்த்தால் தியேட்டர்க்காரர்கள் விடுவார்களா என்ன? கடவுளின் படைப்பான நான் தியேட்டர்க்காரர்களை விட ஏமாளியா? அதனால் தான் நான் காரகத்வம் வகிக்கும் மது, போதைப்பொருள், மாபியா போன்றவற்றின் மூலம் அவர்கள் கதையை முடித்து விட்டேன். நவக்கிரகங்களான எங்கள் செயல் முறையைச் சற்று கூறுகிறேன் கேளுங்கள். நாங்கள் டப்பிங் சினிமாவில் வில்லன் கூட்டம் போல் செயல் படுவோம். அதில் மாநில முதல்வர் ஏர்போர்ட்டில் இறங்கி, ரௌண்டானாவில் திரும்பி, மீட்டிங்கில் பேசி, விருந்தினர் விடுதிக்குப் போய் ஓய்வெடுப்பதாக நிகழ்ச்சி நிரல் இருக்கும். வில்லன்கள் முதல்வரை ஏர்போர்ட்டிலேயே கொல்லத் திட்டமிட்டிருப்பார்கள். எப்படியோ ஹீரோ முதல்வரைக் காப்பாற்றி விடுவார். அடுத்தடுத்து வரும் இடங்களில் முதல்வரைக் கொல்ல வில்லன்கள் கூட்டம் ஏற்பாடுகள் செய்து முடித்திருக்கும். சினிமாவில் என்றால் ஹீரோ வென்றுதான் ஆக வேண்டும். எனவே முதல்வர் காப்பாற்றப் பட்டுவிடுவார். மனித வாழ்க்கை என்ன சினிமாவா? கடவுளின் படைப்பான நாங்கள் வெறும் டப்பிங் சினிமா வில்லன் கூட்டமா? இப்போது என்னையே எடுத்துக்கொள்ளுங்களேன்! நான் 7-ல் நின்றுள்ளேன் என்று வையுங்கள். நான் முதலில் அழகற்ற பெண்ணை அந்த ஜாதகருக்கு மனைவியாக்கப் பார்ப்பேன், ஜாதகரின் பெற்றோர் இதை நடக்க விடுவார்களா? விட மாட்டார்கள். சல்லடை போட்டு சலித்து, எடுத்து மகாலட்சுமி மாதிரிப் பெண்ணை மனைவியாக்குவர்கள். இனி நான் விடுவேனா அந்தப் பெண்ணின் மனதையோ, குணத்தையோ, உடல்நலத்தையோ கெடுத்துத்தான் தீருவேன். ஒருவேளை இதரக் கிரகங்களின் பலத்தால் மேற்படித் தீமைகளை என்னால் செய்ய முடியாவிட்டால் அந்தத் தம்பதிகளைப் பிரித்துவிடுவேன். (நானும் கேதுவும் 3, 6, 10, 11, 4, 12 தவிர இதர இடங்களிலிருந்தால் அது சர்ப்பதோஷம்). இப்போது ஓரளவு எங்கள் செயல்முறை உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். சரி! சூரியனைப் போலவே நானும் அதிகம் பேசி விட்டேன் என்று எண்ணுகிறேன், விஷயத்துக்கு வருகிறேன்., என் அதிகாரத்தின் கீழ் சினிமா, லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல், இருட்டில் செய்யும் வேலைகள், திருடு, கடத்தல், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், சந்தேகம், ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை, வரி ஏய்ப்பு, விஷம், ஆங்கில மருந்துகள், பொய் பேசுதல், பாம்புப்புற்று, துர்கை, கருப்பு மார்க்கெட், இடுப்புக்குக் கீழ்பாகத்தில் வைத்தியர்களுக்குப் புலப்படாத நோய்கள், பலஹீனங்கள், வயதுக்குத் தகுந்த வளர்ச்சியில்லாது போதல் (அ) ஊளைச்சதை, பிற மொழிகள் ஆகியவை வருகின்றன. பதுக்கல், திருட்டு, கணக்குக் காட்டுதல், பாம்புகள், விஷபிராணிகள், மெடிக்கல் ரியாக்ஷன், அலர்ஜி, கள்ளத்தோணியில் வெளிநாடு போதல் இவையும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே. இதுவரை உங்களை விஷ ஜந்துகள் கடித்ததில்லையா? மெடிக்கல் ரியாக்ஷன் நடந்ததில்லையா? எதைச் செய்தாலும் சட்டப்படிப் பகலில், பத்துப் பேருக்குச் சொல்லிச் செய்தே சக்ஸஸ் ஆகியிருக்கிறீர்களா? உங்களுக்கு மொழிவெறி கிடையாதா? சினிமா பைத்தியம் (அ) சினிமா மீது வெறுப்பு இல்லையா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.
நீங்கள் ஏற்கனவே மதுப்பழக்கம், புகைப்பழக்கம், சூது, முறையற்ற வருமானங்கள், அதிலும் அவ்வப்போது சட்டத்துக்குள் சிக்கி மீண்டவராய் இருந்தால், நிச்சயம் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம். என்னால் விளைந்த கெடுபலன்கள் குறையப் பரிகாரங்கள் சொல்கிறேன். முடிந்தவற்றை உடனே செய்யுங்கள். முடியாதவற்றை முடிந்தபோது செய்யுங்கள்.பரிகாரங்கள் :1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.7. பரமபதம் ஆடுங்கள்.8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் 'ட்ராகன்' (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு 'பெரிசுக்கு' ஒரு 'கட்டிங்' போடக் காசு கொடுத்து ஒழியுங்கள். 11.குடிப்பழக்கம் இருந்தால்
You 



3. 

You 

MUNNAR HISTORY





The present Munnar as a plantation area took birth during the mid 19th century. Prior to that, it was a dense forest with many endemic flora and fauna. It was abundant with wildlife such as Leopards, tigers, elephants, bisons, to name a few. At that time the tribes, Pallayers, Kaders, Kuruvas, Ooralers, and Muduvans inhabited it. The Muduvans came from the plains of Madurai in 900 AD during a politico-social turmoil. They established their settlement around the area in Munnar.
In 1790, Duke of Wellington, Colonel Arthur Wellesley was sent to defend Tipu Sultan’s invasion at the lines of Travancore, which was an ally of the East India Company. Colonel Wellesley waited for Tipu with a small force in the Kumaly gap. Nevertheless, Tipu sensed the danger and escaped quickly. According to official records, he was the first European to visit Munnar.
Even during 1817, a bullock-road headed across the Kanan Devan hills into Coimbatore. This was mentioned in the diary of a Madras Army Lieutenant. As time passed these hills became the frequent route of merchants who brought cloth to Travancore and took away betel nut.
The architect of modern Munnar is Mr. John Daniel Manro. He was lawer in the Travancore Government. He could manage to get a large territory about 588 sq km in lease from the Poonjar Chief, a subordinate prince to the Maharaja of Travancore during 1877 to 79 for Rs 5000. Along with the tribal Chief of Anchanad, Kanan Thevar he visited Munnar. He liked the place very much and made up his mind to make it a plantation area. Then he joined with Henry Gribble Turner, an ICS Officer from Madras and A.W. Turner to develop Munnar. It was in 1878 when HG Turner and AW Turner came to Munnar for a shooting expedition that they could foresee the benefits of plantation in this place. Thus, they started the North Travancore Land Planting and Agricultural society. Their main objective was to utilize the cinchona boom. To honour the tribal chief, Mr. Manro named the high range, the Kannan Devan Hills because his support to establish the plantations was invaluable.
A.W. Turner started the first plantation estate in 1877 near Devikulam Lake. He started it with the help of Tamil labourers. The first crops were cinchona, coffee, sisal, and cardamom. Mr. A. H. Sharp planted the first tea plant at Parvathi, now in Sevenmallay Estate. At that time, only 20 hectares were cleared for the tea cultivation. Coffee was planted mostly on Pullivasal, Munnar and Chattamannar, now a division of Talliar Estate. Sisal was planted at Madupetty, which was a commercial failure. Later in 1910, it was replaced by tea plantations, which covered this area completely. After few years, the society faced economic problems and the lands were sold. The first land to be sold was to Baron Otto Von Rosenbury and his sister. It was Manalay, now a division of Lockhart Estate. Then his son Baron Otto Jon Michael Von Rosenbury developed it. In 1888 KDPA was formed. New roads were laid through the old elephant tracks. In Devikulam the first post office was set up in 1892. During 1894, there were about 26 estates. Then in 1893-95, Finlay Muir and Co purchased this area and later it became James Finlay and Co ltd. In 1897, the Kannan Devan Hills Produce Company was formed and in association with other subsidiaries of Glasglow, UK based Finlays Group, namely the Anglo American Direct Tea Trading company and the Amalgamated Tea Estates Company they purchased 33 estates in the high range and 9 in the Anammallays. The first manager of KDHP Company was HM Knight who was succeeded by W. Milne and Davidson. It was during the tenures of P.R. Buchanan, H.L. Pinches tea was planted extensively, and new estates were established.
By 1915, the tea factories grew to 16 numbers and few were being constructed. The machineries used at that time were driven by water, oil, steam, or electricity from the company’s control station in large factories. Then small power houses were started at Pullivasal and Periakanal.  Some factories situated at far places generated power by turbines and some used water-driven Pelton wheels. The increasing demand for tea changed the mode of transportation. From head loading, pack ponies, bullock-carts, horses, to monorail carriages pulled by bullocks, ropeways and a light railway line, the pace was fast. There was also a short distance railway from Munnar to Top Station, which was set up in 1908. It was washed away during the 1924 floods, which was beyond repair and was abandoned. After that, the railway station was used as the rice store, lodge, and occasionally for Church services. It now houses the present regional office.
Many roads were built which were transformed to cart roads and later tarred roads. The first one was the northern outlet road to the Coimbatore plains. A bus service started from Udumalpet to Munnar in 1928. The Munnar-Neriamangalam road was opened in 1932. Soon hospitals and dispensaries were built with a doctor for four to five estates, and an apothecary on each estate. Today, this area has over 200 kilometres of tarred roads, 215 kilometers of transmission lines, over 200 telephones and telex facility. In 1963, the cattle breeding station got started at Madupetty with Swiss collaboration. All these years the face of the cattle population in the district has changed drastically.
In 1964 the Finlays and Tatas collaborated to form a value added tea, and in 1976 Tata-Finlays Ltd purchased the black tea producing and marketing operation and other interests. Then in 1983 Finlays sold their remaining share holding which included the considerable land holdings and manufacturing facilities in North Eastern India. Then the name was changed to Tata Tea Ltd. It is the largest integrated tea company in the world with an entire gamut of activites in the Tea industry. In April 2005, the Tata Group transferred all the estates under them to Kannan Devan Hills Produce Co. Pvt Ltd. This company manages over 16 estates, which sprawls over an area of almost 8,500 hectares. This company is managed in a unique way that the shareholders are it employees.

 

ஐந்தாம் வீடு

1. ஐந்தாம் வீடு மூன்று பலன்களைத் தருவது. அவை முறையே பூரவ
புண்ணியம், குழந்தைபாக்கியம், நுண்ணறிவு!

2. பூர்வபுண்ணியம் என்பது முன் பிறவியில் நாம் செய்த நன்மைதீமை
களின்படி நமக்குக் காலன் கொடுக்கும் சான்றிதழ். அந்த சான்றிதழை 
வைத்துத்தான் இந்தப் பிறவியில் பல செயல்கள் நமக்கு நன்மை
உள்ளதாக அமையும்!

3. நிறைய ஜோதிடர்கள் இங்கேதான் சறுக்கிவிடுவார்கள். பூர்வ ஜென்
மத்தை முழுமையாக அறிந்து சொல்ல எந்தக் கொம்பனாலும் முடியாது.
ஓரளவிற்குச் சொல்லலாம்!

4 இந்த 5ஆம் வீட்டிற்குக் காரகன் (authority) குரு. அவர் அந்த 5ஆம்
வீட்டிற்கு ஐந்தில் அதாவது லக்கினத்தில் இருந்து 9ல் இருந்தால் ஜாதகன்
மிகவும் அதிஷ்டசாலி! புண்ணிய ஆத்மா! பெயரையும், புகழையும் அவர்
(காரகன் குரு) பெற்றுத்தருவார்.

5. 1ஆம் வீடு லக்கினம், 5 ஆம் வீடு அவனுடைய குழந்தை. 9ஆம்
வீடு அவனுடைய (ஜாதகனுடைய) தந்தை. அந்த 9ஆம் வீட்டிலிருந்து
5ஆம் வீடு மீண்டும் ஜாதகனின் வீடாகவே இருக்கும். அதாவது
9ஆம் வீட்டுக் காரரின் மகன். ஒரு சுழற்சி!! என்ன அற்புதம் பாருங்கள்!

6. ஐந்தாம் வீடு எண்ணங்களையும், உணர்வுகளையும் குறிப்பதாகவும்
இருக்கும். ஐந்தாம் வீடு நல்ல அமைப்புக்களைப் பெற வில்லை என்றால்
ஜாதகன் வில்லங்கப் பார்ட்டி அல்லது டென்சன் பார்ட்டி!

7. ஐந்தாம் வீட்டைப் பற்றி அறிந்து கொள்ள முதலில் பார்க்க வேண்டிய மூன்று.
ஐந்தாம் வீடு, ஐந்தாம் வீட்டின் அதிபதி மற்றும் காரகன் குரு.
அவைகள் நன்றாக இருந்தால் நல்லது. காரகனும், அதிபதியும் கேந்திர,
கோணங்களிலோ அல்லது சுயவர்க்கத்தில் நல்ல பரல்களுடனோ இருத்தல் நலம்.

8. அடுத்து உபரியாகப் பார்க்க வேண்டியது. 5 ஆம் வீட்டில் வந்து இடம் பிடித்து
அமர்ந்திருக்கும் கிரகம், ஐந்தாம் வீட்டு அதிபதியோடு சேர்ந்
திருக்கும் கிரகம், அல்லது காரகனோடு சேர்ந்திருக்கும் கிரகம். அவை
களும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவையே!

9. மேஷம், சிம்மம், தனுசு ஆகிய வீடுகள் ஒருவருக்கு ஐந்தாம் வீடாக
அமையப் பெற்றால் அவர் இயற்கையாகவே நேர்மையான வராக இருப்
பார். அவரை யாரும் சுலபமாக விலைக்கு வாங்க முடியாது
ஜாதகத்தில் லக்கினதிபதி போன்றவர்கள் கெட்டிருந்தால் மட்டுமே அவர்
நேர்மை தவற நேரிடும். இல்லையென்றால் இல்லை!

10. அவர்களுடைய இந்த நேர்மை, சிலரை எரிச்சல் படுத்தவும் செய்யும்.
ஆனால் அவர்கள் அதைப்பற்றி சிறிதும் சட்டை செய்யாத அளவிற்கு மன
உறுதியுடன் இருப்பார்கள்..

ஐந்தாம் வீடு மனதிற்கும் உரிய வீடுதான் மனம், நெஞ்சம், இதயம் என்று
எப்படி வேண்டுமென்றாலும் பொருள் கொள்ளுங்கள்! (அப்பா, தலைப்பைப்
பிடித்து விட்டேன்!:_)))))

11. ஐந்தில் ராகு அல்லது கேது அல்லது சனி ஆகிய கிரகங்களில் ஒன்றி
ருந்தாலும் ஜாதகன் எப்போதுமே எதற்காவது கவலைப் பட்டுக் கொண்டிருப்பான்.

12. ரிஷபம், கன்னி, மகரம். ஆகிய வீடுகள் ஒருவருக்கு ஐந்தாம் வீடாக
அமையப் பெற்றால் அவர் கற்பனைத் திறன் (imagination), ஆழ்ந்த
உணர்வுகள் (deep feelings) அதீத நினைவாற்றல் (memory) உள்ளவராக
இருப்பார். இது பொது விதி. ஜாதகத்தின் வேறு கிரக சேட்டைகளை
வைத்து இது மாறுபடும் (இது பின்னூட்டத்தில் வருபவர்களுக்காக 
முன்பே சொல்லி வைக்கிறேன்)

13. ரிஷப ராசி ஐந்தாம் வீடாக அமையப் பெற்றவர்கள் வாழ்க்கையை
சுலபமாக எடுத்துக்கொள்ளக் கூடியவர்கள். (The person will be highly
optimistic and he takes life easy) காரணம் ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன்.
அதனால் எப்போதுமே ஜாலி.... நோ கதை வேண்டாம்

14. மகர ராசியை ஐந்தாம் வீடாகப் பெற்றவர்கள் பொதுவாக டென்சனா
கும் ஆசாமிகள் Highly pessimistic and takes life seriously கரணம்
அதிபதி சனி!

15. கன்னி ராசியை ஐந்தாம் வீட்டாகப் பெற்றவர்களுக்கு ரிஷபம் மற்றும்
மகர ராசிகளின் பலன்கள் கலவையாக இருக்கும். காரணம் அதிபதி புதன்
அவர்கள் எப்போது ஜாலியாக இருப்பார்கள், எப்போது சீரியசாகி விடு
வார்கள் என்பது அவர்களுக்கு அன்றாடம் அமையும் சூழ்நிலை களைப்
பொறுத்து மாறுபடும்!

16. மிதுனம், துலாம், கும்ப ராசிகளை ஐந்தாம் இடமாகப் பெற்றவர்கள்
அடுத்த பிரிவினர். They will have different emotional set up. They are concerned
with conduct rather than motive. They are concerned with action rather than
thought or feeling. செயல் வீரர்கள். உணர்வுகளுக்கு முக்கியத்துவம்
கொடுக்காமல் காரியங்களைச் செய்பவர்கள்.

17. துலா ராசியை ஐந்தாம் வீடாகக் கொண்டவர்கள் யாதார்த்தமானவர்
கள். More practical people!

18. கும்பராசியை ஐந்தாம் இடமாகக் கொண்டவர்கள். உண்மையான
மனதுடையவர்கள். நம்பகத்தன்மை மிக்கவர்கள் (அவர்களை முழுதாக நம்பலாம்.

19. மிதுன ராசியை ஐந்தாம் இடமாகக் கொண்டவர்கள் தங்கமானவர்கள்
அந்த ராசிக்காரக்களின் நட்பு கிடைத்தால் பெட்டியில் வைத்துப் பூட்டி
விடுங்கள்! இன்னும் சொல்ல துறு துறுக்கிறது. பதிவைச் சமர்ப்பணமாகப்
பெற்றுக் கொண்டவர் சண்டைக்கு வந்தால் என்ன செய்வது?.
ஆகவே விளக்கம்/ கதை இல்லை!

20. மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளை ஐந்தாம் வீடாகக்
கொண்டவர்கள், அதிகமான தொல்லைகளுக்கு ஆளாவர்கள். ஆனால்
அவற்றைப் பொறுமையுடனும், மன் உறுதியுடனும் தீர்க்க
கூடிய வல்லமை பெற்றிருப்பார்கள்.

21. மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளை ஐந்தாம் வீடாகக்
கொண்டவர்கள் தத்துவஞானிகளாக இருப்பார்கள். உலகின் மிகப் பரபல
மான Philosopherகள் எல்லாம் இந்த அமைப்பை உடையவர்களாகவே
இருப்பார்கள். இயற்கையாகவே இந்த அமைப்பைக் கொண்டவர்கள்
தர்ம, நியாயங்கள் தெரிந்தவர்களாக இருப்பார்கள். யாரும் அவர்களுக்கு
எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!

22. கடகம், விருச்சிகம்,மீனம் ஆகிய மூன்று ராசிகளை ஐந்தாம் வீடாகக்
கொண்டவர்களைப் பற்றி இப்போது பார்ப்போம். இவர்கள் வித்தியசமான
பார்வை கொண்டவர்கள். மற்றவர்களை விட இவர்கள் ஒன்றைப் பார்த்து
எடுக்கும் முடிவு. அற்புதமாக இருக்கும். அதுதான் சிறந்ததாகவும்
இருக்கும்

23. இந்த அமைப்பினர் தலைமை ஏற்கத்தகுதியுடையவர்கள். அந்த
மூன்றில் (கடகம், விருச்சிகம்,மீனம்) கடகம் மிகவும் சிறப்பானது.
காரணம் அதிபதி சந்திரன்.

24. மீனத்தை ஐந்தாம் வீடாகக் கொண்டவர்கள், ஆக்கபூர்வமான சிந்தனை
மற்றும் செயலை உடையவர்கள். அவர்களுடைய மன ஒட்டத்தை யாராலும்
ஊகிக்க முடியாது.

25. ஜாதகத்தில் லக்கினம், ஒன்பதாம் வீடு ஆகியவ்ற்றிற்கு நிகராக 5ஆம்
வீடும் அதி முக்கியமானது. அத்னால அவை மூன்றிற்கும் திரிகோணம்
எனப்படும் முதல் நிலை அந்தஸ்து (status) கொடுக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் வீட்டைவைத்து இங்கே குறிப்பிட்டுள்ள யாவுமே பொது விதிகள் 
ஆகும். மற்ற அமைப்புக்களை வைத்துப் பலன்கள் மாறுபடும்.



ஐந்தாம் இடத்தின் அதிபதி சென்று அமரும் இடத்தின் பலன்:

அதாவது உங்களுக்கு சிம்ம லக்கினம் என்று வைத்துக் கொண்டால் - தனுசு
உங்களுடைய ஐந்தாம் வீடு - அதற்கு அதிபதி குரு எங்கே இருக்கிறார்
என்று பார்த்தால் அவர் லக்கினத்தில் இருந்து உள்ள 12 கட்டங்களில் எங்கே
வேண்டுமென்றாலும் ஜாதகத்தில் இருக்கலாம். அப்படி அவர் (That is 5th lord)
இருக்கும் இடம், அதன் பலன் பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம்!

ஐந்தாம் இடத்தின் அதிபதி சென்று அமரும் இடத்தின் பலன்:

5th lord 1ல் இருந்தால்:

மிகவும் நல்லது. அதோடு நல்ல சேர்க்கையும், பார்வையும் பெற்றிருந்தால்
தலைமைப் பதவி தேடிவரும். நிறைய வேலை ஆட்கள் இருப்பார்கள். அமைச்சராகக்
கூட ஆகலாம், நீதிபதியாகவும் ஆகலாம். (அது பத்தாம் இடத்துடனும் சம்பந்தப்பட்ட
தாகையால், நான் ஆணிபிடுங்கும் கம்பெனியில் டீம் லீடராக இருக்கிறேன். எனக்கு
எப்படி நீதிபதி பதவி தேடி வரும் என்று யாரும் பின்னூட்டத்தில் கேட்க வேண்டாம்.
அந்த டீம் லீடர் பதவி கூட தலைமைப் பதவிதானே!)

அதே நேரத்தில் 5th lord ஒன்றில் அமர்ந்தும், தீய கிரகங்களின் பார்வை, அல்லது
சேர்க்கை பெற்றிருந்தால் மேலே கூறியவற்றிற்கு எதிரான பலன்களே நடைபெறும்

சராசரி சேர்க்கை என்றால் மிக்சட் ரிசல்ட்!
-------------------------------------------------------------------------------

5th lord 2ல் இருந்தால்:

If favourably disposed as said in the earlier paragraph:
அழகான மனனவியும், அன்பான குழந்தைகளும் கிடைப்பார்கள்.படித்தவராக
இருப்பார். அரச மரியாதை கிடைக்கும்.

If not favourably disposed:
தரித்திரம் தாண்டவமாடும், தன் குடும்பத்தை வழி நடத்தவே சிரமப் படுவார்.
மற்றவர்களின் எரிச்சலுக்கும், அவமரியாதைகளுக்கும் ஆளாக நேரிடும்.
-------------------------------------------------------------------------------
5th lord 3ல் இருந்தால்:

If favourably disposed: நல்ல குழந்தைகளும், நல்ல சகோதரன்,நல்ல சகோதரிகள்
கிடைப்பார்கள். இங்கே நல்ல என்ற வார்த்தையில் எல்லாம் அடக்கம்!

If not favourably disposed: Loss of chidren, misunderstanding with brothers and
sisters, troubles in work or in business.

-------------------------------------------------------------------------------------------------
5th lord 4ல் இருந்தால்:

If favourably disposed: நல்ல, நீண்ட நாட்கள் உயிர் வாழும் தாய் கிடைப்பார்.
அரசுக்கு (வருமானவரி) ஆலோசகராக இருப்பவர். அல்லது அது சம்பந்தப்பட்ட
தொழில் செய்பவர்.

If not favourably disposed: பெண் குழந்தைகள் மட்டும் உடையவராக இருப்பார்.
---------------------------------------------------------------------------------------------------
5th lord 5ல் இருந்தால்:

If favourably disposed: அதிகமாக ஆண் குழந்தைகளை உடையவர். அவருடைய
செயல்களில் தொழிலில் மேன்மை அடைபவராக இருப்பார்.பல சாஸ்திரங்களில்
ஈடுபாடு உடையவர்.எல்லோரிடமும் நட்பாக இருப்பவர். கணக்கில் கெட்டிக்காரர்.

If not favourably disposed: எதிர்பார்த்தது எதுவும் நடக்காமல் அவதியுறுவார்.
குழந்தைகள் இறக்கும் அபாயம் உண்டு. வார்த்தைகள் தவறுபவர். சலன மனம்
உடையவர்.
----------------------------------------------------------------------------------------------------
5th lord 6ல் இருந்தால்:

பெற்ற பிள்ளைகளுடனேயே விரோதம் உண்டாகும். குழந்தை பாக்கியம் குறைவு.
தத்துப் பிள்ளை எடுத்து வளர்க்க வேண்டியவர்.
------------------------------------------------------------------------------------------------------
5th lord 7ல் இருந்தால்:

If favourably disposed: நல்ல குழந்தைகளை உடையவர்.அதிகமான குழந்தைகளை
உடையவர். அவர்களால் பொன்னும், பொருளும் , செல்வமும் பெறக்கூடியவர்.
செழிப்பான வாழ்க்கை அமையும். குருபக்தி மிக்கவர்.வசீகரத்தோற்றமுடையவர்.

If not favourably disposed: குழந்தைகளைப் பறிகொடுக்க நேரிடும். பெயரும், புகழும்
பெற்ருத்திகழும் குழந்தைகளைக்கூட பறி கொடுக்க நேரிடும்

-------------------------------------------------------------------------
5th lord 8ல் இருந்தால்:

மூதாதையர் சொத்துக்கள் கிடைக்காது.அப்படியே கிடைத்தாலும் அவற்ரைக்
கடனுக்காக இழக்க நேரிடும். Lungs Problem உண்டாகும். மகிழ்ச்சி இல்லாதவர்
Unhappy man but not poor!
------------------------------------------------------------------------------------------------------
5th lord 9ல் இருந்தால்:

If favourably disposed: கோவில், குளம் என்று திருப்பணிகள் செயக்கூடியவர்.
சொற்பொழிவாளர், பெரிய கவிஞர் அல்லது எழுத்தாளர், பேராசான்.

If not favourably disposed: அதிர்ஷ்டமில்லாதவர். முயற்சிகள் எல்லாம்
தட்டிக்கொண்டு போய்விடும். நடக்காது போய்விடும்
---------------------------------------------------------------------------------------
5th lord 10ல் இருந்தால்:

If favourably disposed: ராஜயோகம்.ஏராளமான சொத்துக்கள் (Landed properties)
சேரும். அரச மரியாதை கிடைக்கும். அவருடைய குடும்ப உறவுகளில் அவருக்குத்தான்
முதல் மரியாதை கிடைக்கும்.

If not favourably disposed: மேலே கூறியவற்றிற்கு எதிர்மறையான பலன்கள்.
--------------------------------------------------------------------------------------
5th lord 11ல் இருந்தால்:

எடுக்கும் காரியம் எல்லாவற்றிலும் வெற்றியும், நன்மையும் கிடைக்கும். செல்வந்தராகி
விடுவார். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வார். அதிகமான குழந்தைகள் இருக்கும்!
-------------------------------------------------------------------------------------
5th lord 12ல் இருந்தால்:
எதிலும் பற்றின்மை உண்டாகும், வேதாந்தியாகிவிடுவார். பல இடங்களிலும்
அலைந்து திரிபவர். பிடிப்பு இல்லாதவர்


Saturday, July 30, 2011

கண்முன்னே VeaLஇருக்கின்றான்! கலி என்ன செய்யும்?


கண்முன்னே கந்தன் இருக்கின்றான்! கலி என்ன செய்யும்?

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.-அருணகிரிநாதர் (கந்தரலங்காரப்பாடல்)

நாள், நட்சத்திரங்கள் என்னை என்ன செய்யும்?என் கர்மவினைகள் என்னை என்ன செய்யும்?கோள்கள் என்னை என்ன செய்யும்?கொடுமையான விதி என்னை என்ன செய்யும்என்னை எதுவும் ஒன்றும் செய்ய முடியாது!

என் கண்முன்னே குமரேசனின் தாளும் (பாதமும்), சிலம்பும், காற்சதங்கையும், தண்டையும், சண்முகமும், தோளும், கடம்பும் தோன்றிக் கொண்டே இருக்கும். அவன் என்னுடனேயே இருக்கிறான். அவன் பெயரைச் சொல்லி அவனை வணங்கிக்கொண்டே இருக்கிறேன். அதனால் எனக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை

இந்த விதி தலையான விதியாகும்


பெண்களாக இருந்தால் ஹீரோயினிகள்தான்.நல்ல உதாரணம் வேண்டு மென்றால்.முன்னாள்
முதல்வர் ஜெயலலிதா அம்மையார் சிம்மலக்கினக்காரர்கள் நல்ல கம்பீரமான தோற்றத்துடன்
இருப்பார்கள் பலரையும் கவரக்கூடிய தோற்றமாக இருக்கும். ஆனால் சூரியன் ஜாதகத்தில்
அடிபட்டுப்போயிருந்தாலோ அல்லது லக்கினத்தில் சனி அல்லது மாந்தி வந்து
அமர்ந்திருந்தாலோ அப்படிப்பட்ட தோற்றம் அவர்களுக்கு இருக்காது. நவாம்சத்தில்
சூரியன் கெட்டுப்போயிருந்தாலும் அதே பலன்தான் சூரியன் என்ன தயிர்சாதமா –
கெட்டுப்போவதற்கு? என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். இங்கே கெட்டுப்போதல்
என்னும் சொல். சூரியன் லக்கினத்தில் இருந்து ஆறு அல்லது எட்டு அல்லது பன்னிரெண்டு
ஆகிய இடங்களில் அமர்வதையும், அதேபோல் பகை அல்லது நீச வீடுகளில் சென்று அமர்ந்து
விடுவதையும் அல்லது சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களுடன் சேர்ந்து விடுவதையும்
குறிக்கும். சிம்ம லக்கினக்காரர்கள் முன் கோபக்காரர்கள்.பிடிவாதக்காரர்கள் அவர்கள்
நினைத்தால் நினைத்ததுதான். எந்த சக்தியாலும் அவர்களை மாற்ற முடியாது.
அவர்களுக்கு அவர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்களை யாரும் மடக்கிப் பிடித்துவிட
முடியாது. அவர்களாக வந்தால்தான் உண்டு. சிங்கம் தனியாக இருப்பதுபோல தனியாகத்தான்
இருப்பார்கள். யாருடனும் அதிகமான ஒட்டுதல் இருக்காது.வெளியில் ஒட்டியிருப்பதுபோல்
தெரிந்தாலும் உள் குணத்தால் பட்டும் படாமல் இருப்பார்கள்.அது வெளியே தெரியாமல்
பார்த்துக் கொள்வார்கள் சிம்ம லக்கினத்தில், அதற்கு 4ம் வீட்டிற்கும், 9ம்
வீட்டிற்கும் அதிபதியும் (அதாவது ஒரு கேந்திர வீட்டிற்கும், ஒரு திரிகோண
வீட்டிற்கும் அதிபதியானவரும்) சிம்ம லக்கினத்திற்கு யோககாரனுமானமான செவ்வாய் கிரகம்
வந்து அமர்ந்தால் அந்த ஜாதகன் திறமைசாலியாக இருப்பான்.அவனிடம் பன்முகத் திறமை
இருக்கும். அதே பலன் லக்கினத்தில் வந்து அமராதபோதும் அந்த ஜாதகத்தில் செவ்வாய்
வலுவாக இருந்தாலும் கிடைக்கும். சிம்ம லக்கினத்திற்கு எதிர் வீடாகவும், முற்றிலும்
மாறுதலான பலன்களைக் கொண்டதாகவும் கும்ப லக்கினம் இருக்கும்.
கும்ப லக்கினக்காரர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் கடும்
உழைப்பாளிகள்.பொறுமைசாலிகள். கும்ப லக்கினப் பெண் என்றால் உயர்ந்த நற்குணங்களைக்
கொண்டவளாக இருப்பாள். அந்த லக்கினப் பெண் என்றால் கண்ணை மூடிக்கொண்டு அவளைத்
திருமணம் செய்து கொள்ளலாம். வாழ்க்கை அசத்தலாக இருக்கும். கும்ப லக்கின அதிபதியான
சனி உச்சம் பெற்று இருந்தாலோ அல்லது கேந்திர, திரிகோண வீடுகளில் இருந்தாலோ அந்த
ஜாதகன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதிக்கக் கூடிய சாதனையாளராக இருப்பார். அதேபோல
கும்ப லக்கினத்திற்கு ஒரு இயற்கையான் கேடும் உள்ளது. கும்ப லக்கினத்திற்கு லக்கின
அதிபதியும் சனிதான் அதேபோல அந்த வீட்டிற்குக் கீழ் வீடும், 12ம் வீடுமாகிய விரைய
ஸ்தானத்திற்கு அதிபதியும் சனிதான். அதாவது கும்ப லக்கினத்திற்கு லக்கினாதிபதியும்
அவனே – விரையாதிபதியும் (Lord for the losses) அவனே! ஆகவே கும்ப லக்கினத்திற்கு –
either great success or great failure என்கின்ற இரண்டு பலன்களில் ஒரு பலன் தான்
வாழ்க்கையில் அமையும்!
முதல் வீடு எனப்படும் லக்கினத்தைப் பற்றி ஒரு அடிப்படை விதியை நீங்கள் அறிதல்
அவசியம். ராசிகள் அட்டவனையைப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று தெள்ளத் தெளிவாக
விளங்கும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் மட்டும் தலா ஒரு வீடுதான்.
மற்ற ஐந்து கிரகங்களுக்கும், அதாவது புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகிய
ஐந்து கிரகங்களுக்கும் இரண்டு வீடுகள் இருக்கும். பலன்கள் பெரும்பாலும் அந்த
கிரகங்களின் குணங்களையும் உள்ளடக்கியிருக்கும். உதாரணமாக மிதுனம், கன்னி ஆகிய
லக்கினக்காரர்களுக்குப் புதன்தான் அதிபதி என்பதால் அவர்கள் இயற்கையாகவே
புத்திசாலிகளாக இருப்பார்கள். அதேபோல சனி அதிபதியாக இருக்கும் மகரம், கும்பம் ஆகிய
லக்கினத்தைச் சேர்ந்தவர்கள் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள்.சுக்கிரன் அதிபதியாக
இருப்பவர்கள்.கலைகளில் ஆர்வமுடையவர்களாகவும், குரு அதிபதியாக இருப்பவர்கள்,
மனிதநேயம், தர்மசிந்தனை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இதெல்லாம் பொது விதி!.
1. லக்கினத்திற்கு இரண்டு பக்கமும் – அதாவது முன்னும், பின்னும் உள்ள வீடுகளில் –
சுபக் கிரகங்கள் இருந்தால் ஜாதகன் ராஜயோகம் உடையவனாக இருப்பான். if Lagna is hemmed
between benefic planets,the native will be fortunate.
2. அதேபோல் லக்கினத்திற்கு இரண்டு பக்கமும் பாவக் கிரகங்கள் நின்றால் அல்லது
இருந்தால் – ஜாதகன் அதிர்ஷ்டமில்லாதவன். தரித்திரயோகம். வாழ்க்கை போராட்டங்கள்
நிறைந்ததாக இருக்கும் அவன் அல்லது அவள் எதையும் போராடித்தான் பெற வேண்டும்.
இரண்டு VIP வீடுகளுக்கு நடுவில் உங்கள் வீடு இருந்தால் எப்படி இருக்கும் என்றும்
அல்லது இரண்டு பேட்டை தாதாக்களின் வீடுகளுக்கு நடுவில் உங்கள் வீடு இருந்தால்
எப்படி இருக்கும் என்றும் கற்பனை செய்து பாருங்கள், அப்போது உண்மை உங்களுக்குப்
புலப்படும்.
இந்த விதி தலையான விதியாகும்.
இது லக்கினம் என்று மட்டுமில்லை, மற்ற எல்லா பாவங்களுக்குமே இது பொருந்தும். இதே
பலன்தான் ஏழாம் வீடு எனப்படும் திருமண வீடாக இருந்தாலும் சரி, பத்தாம் வீடு
எனப்படும் தொழில்/வேலை வீடாக இருந்தாலும் சரி, நான்காம் வீடு எனப்படும் தாய்,
கல்வி, சுகம் ஆகியவற்றிற்கான வீடாக இருந்தாலும் சரி அல்லது ஒன்பதாம் வீடு எனப்படும்
தந்தை, முன்னோர் சொத்து, பாக்கியம் ஆகியவை சம்பந்தப்பட்ட வீடாக இருந்தாலும் சரி
பலன் அதற்கு ஏற்றார் போலத்தான் இருக்கும்.
If the said house is surrounded by good planets, the results of the said house
will be good and on the contrary, if it is surrounded by bad or melefic planets,
the results of the said houses will be bad.
அந்த விதியின் பெயர் பாபகர்த்தாரி யோகம
1.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord) பதினொன்றாம்
வீட்டிற்கு உரியவன் (11th Lord) ஆகிய மூவரும் நல்ல நிலைமியில் இருந்தால் ஜாதகன்
வியாபாரம் செய்து அல்லது தொழில் செய்து அல்லது பெரிய நிறுவனத்தில் உயர் வேலையில்
இருந்து நிறையப் பொருள் ஈட்டுவான்.
2.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord) இருவர் மட்டும்
நன்றாக இருந்தால் உத்தியோகம் பார்த்து வசதியாக வாழ்வான்.
3.லக்கின அதிபதி (1st Lord) பலவீனமாக இருந்தால் – அதாவது ஆறு எட்டு, பன்னிரெண்டு
ஆகிய இடங்களில் மறைந்து விட்டால் அல்லது பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord)
அப்படியிருந்தாலும் ஜாதகனுக்குக் கஷ்ட ஜீவனம்தான். மற்ற கிரகங்கள் வலுவாக இருந்தால்
விதிவிலக்காக சுக ஜீவனமாக இருப்பான்.
4.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன் (10th Lord) இருவரும் பலம்
பொருந்தி கேந்திர திரிகோணங்களில் இருந்தால் ஜாதகன் தான் பிறந்த ஊரில் அல்லது
இருக்கும் ஏரியாவில் பிரபலமாக இருப்பான்.பலருக்கும் உதவி செய்பவனாக இருப்பான்.
———————-
லக்கினமே பிரதானமானது. லக்கினத்திற்கு ஏழாம் இடம் அதற்கு அடுத்தபடியாகப்
பிரதானமானது ஆகும். லக்கினாதிபதி லக்கினத்தில் இருப்பதைவிட ஏழில் இருந்து
லக்கினத்தைப் பார்க்கும் அமைப்பு உன்னதமானதாகும். சிறப்புடையதாகும். உச்சமாகும்
கிரகம், தனது உச்ச ஸ்தானத்தில் இருந்து அதன் ஏழாம் இடத்தில் நீசமாகும்.
நீசத்திலிருந்து ஏழில் உச்சமாகும். பார்வையில் ஏழாம் பார்வை சிறப்புடையதாகும். இந்த
அடிப்படையில்தான் லக்கினத்தின் ஏழாம் வீடு மனைவிக்கு உரிய, பெண்ணாக இருந்தால்
கணவனுக்கு உரிய இடமாக வழங்கப்பெற்றிருக்கிறது லக்கினம் நன்றாக இருந்து, ஏழாம்
வீடும் நன்றாக இருந்தால் தாம்பத்ய வாழ்க்கை அற்புதமாக இருக்கும். ஜோடிப்பொருத்தம்
அருமையாக இருக்கும். மனைவி உங்களுக்காக உயிரையும் கொடுப்பவளாக இருப்பாள்
இல்லையென்றால் உயிரை எடுப்பவளாக இருப்பாள். அதாவது உங்களுடைய எதிர்பார்ப்பிற்குச்
சற்றும் ஏற்றவளாக இருக்க மாட்டாள். நல்ல மனைவியாக அமைந்து விட்டால், பார்ப்பவர்கள்
Made for each other என்பார்கள்.
————-
இப்போது ஏழாம் வீட்டிற்கும், குடும்ப ஸ்தானமான 2ஆம் வீட்டிற்கும் உள்ள தொடர்பைப்
பார்ப்போம். குடும்ப வாழ்க்கை என்பது பிறப்பிலிருந்து இறப்பு வரை வருவது. 25 வருட
காலம் பெற்றோர்களை வைத்துக் குடும்ப வாழ்க்கை. ஐம்பது வயதிற்கு மேல் குழந்தைகளை
வைத்துக் குடும்ப வாழ்க்கை. அதைப் பற்றி முன் பதிவில் விவரமாக எழுதியுள்ளேன்.
மனைவியால் கிடைக்கும் குடும்ப வாழ்க்கை என்பது இடைச்செருகல் அவள் நன்றாக அமைந்தால்
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும். இல்லையென்றால் மகிழ்ச்சி குறையும்.
++++++++++++
ஆனால் குடும்ப வாழ்க்கை இல்லாமல் போகாது.
2ஆம் வீட்டிலிருந்து 7ஆம் வீடு அதன் ஆறாம் இடமாகும் 7ஆம் வீட்டிலிருந்து 2ஆம் வீடு
அதன் எட்டாம் இடமாகும் அதாவது 6/8 Position and 8/6 Position ஒன்றிற்கொன்று அஷ்ட
சஷ்டம வீடுகள்.
என்னவொரு மோசமான அமைப்புப் பாருங்கள்
இறைவன் கருணை மிக்கவன். அதனால்தான் தாய், தந்தை, குடும்பம் ஆகிய மூன்றையும் ஒரே
இடத்தில் கொடுத்தனுப்பாமல் தனித்தனியாக பிரித்துக் கொடுத்திருக்கிறான். இரண்டாம்
வீடு குடும்பம் என்றால், நான்காம் வீடு தாய்க்கு உரியது ஒன்பதாம் வீடு தந்தைக்கு
உரியது. நிச்சயம் ஒவ்வொரு ஜாதகத்திலும் இந்த மூன்றில் ஒன்று நன்றாக இருக்கும்.
ஜாதகனின் இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்து, பிறக்கும்போது வறுமையான
சூழ்நிலையில் பிறந்திருந்தாலும், அவனைக் கட்டியணைத்து வளர்க்க ஒரு நல்ல தாய்
அமைந்திருப்பாள். அல்லது தந்தை அமைந்திருப்பார்
4காம் வீட்டிற்கு, அதிலிருந்து பதினொன்றாம் வீடு, குடும்ப ஸ்தானம். அதைக் கவனத்தில்
கொள்ளுங்கள். நல்ல தாய் கிடைப்பதுதான் ஒரு மனிதனின் முதல்
பாக்கியம்.
 நல்ல தாய் கிடைத்துவிட்டால் சிறு வயது வாழ்க்கை எந்தவிதமான
பொருளாதாரச் சூழ்நிலையிலும் நன்றாக இருக்கும். 4ஆம் வீட்டிற்கும் இரண்டாம்
வீட்டிற்கும் ஒரு சிறப்பான தொடர்பு உண்டு. நான்கிற்கு 11 என்பது அதன் லாபஸ்தானம்.
இரண்டு, ஐந்து, பதினொன்று ஆகிய மூன்று வீடுகளும் சேர்ந்துதான் ஒரு ஜாதகனின்
பணபலத்தை நிர்ணயம் செய்யும். இம்மூன்று வீடுகளும் பலமாக இருந்தால் ஜாதகனுக்கு
நிறையப் பணம் வரும் செல்வந்தனாக உருவெடுப்பான். இல்லையென்றால்
இல்லை
லக்கினத்தில் சூரியன் இருந்தால் ஜாதகர் சுறுசுறுப்பானவர். செந்நிற மேனி உடையவர்.
தேகம் எப்போதும் உஷ்ணமாக இருக்கும்.
இரண்டில் சூரியன் இருந்தால் கல்வி சுமாராக இருக்கும் நல்ல உழைப்பாளி. ஜாதகருக்குப்
பொருள் சேரும்.
மூன்றில் சூரியன் இருந்தால், ஜாதகர் Take it easy type அல்லது Don't care type.
பகைவர்களை என்ன சேதி என்று கேட்கும் திறமை உடையவர்
நான்கில் சூரியன் இருந்தால், ஜாதகரின் தாய்க்கு நன்மையல்ல ஜாதகருக்கு உறவினர்களுடன்
பகை உண்டாகும். அரசியல் செல்வாக்கு இருக்கும்
ஐந்தில் சூரியன் இருந்தால், குடும்பம் அளவாக இருக்கும்; வாழ்க்கை வளமாக இருக்கும்.
தந்தைவழிச் சொத்துக்கள் இருக்காது ஜாதகர் தன் முயற்சியால் உயர்வடைவார்
ஆறில் சூரியன் இருந்தால் பகைவர்கள் பக்கத்தில் வரமாட்டார்கள் ஜாதகரின் குடும்பம்
பெரியதாக இருக்கும்.
ஏழில் சூரியன் இருந்தால் ஜாதகர் கடன், நோய்கள், பிணிகள், வழக்குகள், விவகாரங்கள்
இல்லாதவர். பலரது பராட்டுக்க்களைப் பெறுபவர் மனைவிக்கு அடங்கிப்போகக்கூடியவர்.
எதையும் சரிவரச் செய்யாதவர்.
எட்டில் சூரியன் இருந்தால், ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர். எவருக்கும் பணிந்து
போகாதவர் இரக்கமற்ற குணத்தை உடையவர் சிலருக்குக் கண்களில் குறைபாடுகள் இருக்கும்
ஒன்பதில் இருக்கும் சூரியனால் தந்தைக்கு இடையூறுகள் ஏற்படும் ஜாதகருக்குத்
தீயவழிகளில் பொருள் சேரும் உறவினர்களுடன் விரோதம் ஏற்படும் சுய முற்சியால் செல்வம்
சேரும்
பத்தில் சூரியன் இருந்தால் அது ஜாதகருக்கு நன்மைகளைச் செய்யும் ஜாதகருக்கு நிரந்தத்
தொழில் அல்லது வேலை இருக்கும் அரசு தொடர்பு அல்லது அரசியல் தொடர்பு இருக்கும் உடல்
நலம் சீராக இருக்கும் தன் அறிவினால் சுயமுன்னேற்றம் அடையக்கூடியவர்
பதினொன்றில் சூரியன் இருந்தால், ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர். பலரைவைத்து
வேலைவாங்கும் திறமை உடையவர். நண்பர்களால் பல உதவிகள் கிடைக்கும்
பன்னிரெண்டில் சூரியன் இருந்தால் ஜாதகருக்குத் தன் தந்தையுடன் சுமூக உறவு
இருக்காது. அதிகமான செலவுகள் ஏற்படும் ஜாதகர் ஊர் சுற்றி. அதிகமான பயணங்களை
மேற்கொள்வார். சந்ததிக் குறைபாடுகள் இருக்கும். உழைத்து முன்னேற்றம் காண்பவர்.
லக்கினத்தில் சூரியனுடன், சந்திரன் இணைந்திருந்தால் ஜாதகர் எழுத்து, அல்லது ஓவியம்,
அல்லது பேச்சு ஆகியவற்றில் அதீதத் திறமை உடையவர். பெயர் புகழ் அவரைத் தேடிவரும்.
இந்த மைப்பு அமாவாசை யோகம் எனப்படும்.
லக்கினத்தில் சூரியனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால், ஜாதகருக்கு அவருடைய தந்தையுடன்
கருத்து வேறுபாடுகள், உரசல்கள் இருக்கும். தொழிலில் பல இன்னல்கள் ஏற்படும். இந்த
அமைப்புள்ள சிலர் காவல்துறை, ராணுவம் ஆகியவற்றில் பணிபுரிந்து சிறப்படைவார்கள்
லக்கினத்தில் சூரியனும் புதனும் இணைந்திருந்தால், ஜாதகருக்கு நல்ல கல்வியும்
அறிவாற்றலும் இருக்கும். சிலர் ஞானமாகவும் இருப்பார்கள் திட்டமிட்டபடி
வாழக்கூடியவர்கள். இந்த அமைப்பிற்குப் புதஆதித்ய யோகம் என்று பெயர் ஜாதகர்
பலதுறைகளிலும் நிபுணனாக இருப்பார்.
லக்கினத்தில் சூரியனுடன் குரு சேர்ந்திருந்தால், ஜாதகர் தானகவே எதையும்
கற்றுக்கொண்டு செயலாற்றும் திறமை மிக்கவர். பதவியும்,. பாராட்டுக்களும் அவரைத்
தேடிவரும். இரக்க சுபாவம் உடையவர். அதோடு முன்போபத்தையும் உடையவர்,
லக்கினத்தில் சூரியனுடன் சுக்கிரன் இருந்தால், ஜாதகருக்குக் கடத்தல் தொழிலில்
ஈடுபாடு உண்டாகும். ரேஸ், சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபடுவார். ஆடம்பரத்தில்
விருப்பம் உடையவர். சிலருக்குத் திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும்.
லக்கினத்தில் சூரியனுடன் சனி இருந்தால் ஜாதகருக்குத் தன் தந்தையுடன் இணக்கம்
இருக்காது. ஜாதகருக்கு இரும்பு, எந்திரம், வாகனம் போன்றவற்றில் நல்ல அறிவு
இருக்கும். அவை சம்பந்தப்பட்ட துறைகளில் பணியாற்றும் ஜாதகர் சிறப்படைவார்.
லக்கினத்தில் சூரியனுடன் ராகு இணைந்தால் நல்லதல்ல. தீயவழிகளில் பணம் வரும் அல்லது
ஜாதகர் தீயவழிகளில் பணத்தைச் சேர்ப்பார். சிலர் பாபகரமான தொழிலைச் செய்து பணம்
சம்பாதிப்பார்கள்.
லக்கினத்தில் சூரியனுடன் கேது சேர்ந்தால், ஜாதகருக்கு ஜோதிடம், மாந்திரீகம்,
வைத்தியம் ஆகியவை கைவந்த கலையாக இருக்கும். அதில் ஈடுபடுபவர்கள் பெரும்பொருள்
சேர்ப்பார்கள்

லக்கினத்துடன் சந்திரன், குரு, சுக்கிரன், புதன் போன்ற நன்மையளிக்கும் கிரகங்கள்
சம்பந்தப் படும்போது மனிதன் பல நல்ல குணங்களைப் பெற்றவனாக இருப்பான். சனி, ராகு,
கேது, செவ்வாய் போன்ற தீய கிரகங்கள் சேரும்போது மன வக்கிரங்கள், உணர்வுச்
சீரழிவுகள் கொண்டவனாக ஜாதகன் இருப்பான்.
1. மகரம் மற்றும் கும்ப லக்கினக்காரர்கள் கடும் உழைப்பாளிகள் சனி அதிபதி அதனால்
கடும் உழைப்பு அவர்களிடம் இருக்கும். அதில் மகர லக்கினக்காரர்கள் கிடைத்தை மட்டும்
கடுமையாக உழைத்து செயல் படுத்துவார்கள். ஆனால் கும்ப லக்கினக்காரர்கள் ஒருபடி மேலே
சென்று, தேடிப் பிடித்தும் செய்வார்கள்.
2.ரிஷப லக்கினக்காரர்களை ஈஸியாக வளைத்துவிட முடியும். மென்மையானவர்கள். மெல்லிய
உணர்வு படைத்தவர்கள். எதையும் அனுபவிக்கத் தயாராக இருப்பவர்கள்.(சுக்கிரன் அதிபதி)
“டேய் மாப்ளே, வாடா ரெண்டு பெக் அடித்துவிட்டு வரலாம்” என்றால் வந்து விடுவார்கள்.
அதிலும் சிலர்,”டேய் நீ கூப்பிட்டதற்காக வந்தேன்.ஜஸ்ட் ஃபார் கிவிங் யூ கம்பெனி. நீ
என்ன கருமத்தை வேண்டுமென்றாலும் குடி. எனக்கு பெப்ஸி மட்டும் போதும்” என்று
சொன்னாலும் சொல்வர்களேயன்றி மறுக்காமல் வந்து விடுவார்கள் அதிலும் ஒரு வித்தியாசம்.
துலா லக்கினத்திற்கும் அதே சுக்கிரன் அதிபதி என்றாலும், அவர்கள் இடம், கெளரவம்
என்று யோசித்து விட்டுத்தான் வருவார்கள்.
3. கன்னி & மிதுன லக்கினக்காரர்கள் இயற்கையிலே புத்திசாலிகள் எல்லோருடனும்
நெருங்கிப் பழகக்கூடியவர்கள். எவருடனும் ஜோடி சேரக்கூடியவர்கள். சீட்டாட்டத்தில்
ஜோக்கரைப் போல! இந்த இரண்டில் கன்னி தராதரம் பார்க்காது. மிதுனம் பார்க்கும்
4.மேஷ லக்கினம் & விருச்சிக லக்கினம் பொதுவாக குடும்பத்தில் மூத்தவராக இருப்பார்
அல்லது குடும்பத்தில் தலைமை தங்கும் வல்லமை பெற்றிருப்பார். சுறுசுறுப்பானவர்.
தற்பெருமை உடையவர். நாயகனுக்குள்ள தன்மைகளைப் பெற்றிருப்பார். நியாயமான
காரணங்களுக்குச் சண்டைபோடும் மனப்பான்மை உடையவர். ஒரு இடத்தில் இருக்கும் தன்மை
இல்லாதவர். பெண்களின் மேல் தனி விருப்பம் உடையவர். இந்த லக்கினக்காரகளின் வளர்ச்சி
சீராக இருக்காது. உணர்ச்சிகளுக்கு வயப்பட்டவர்கள். முன் கோபக்காரர்கள். அதேபோல
எளிதில் சமாதானமாகிவிடக் கூடியவர்கள். வேலை பார்க்கும் இடங்களில் நல்ல பெயரை
எடுக்ககூடியவர்கள் 5
. கடகம்: intelligent, fond of astrology ; has many family friends and is
attached to them; owns houses; his fortunes wax and wane ike the Moon; he can be
brought round by persuasion. He is under the considerable influence of his wife
or of women.
6. சிம்மம்: The native has a sacrificing spirit, is of fixed determination, but
gets unjustifiably into a temper at the slightest provocation and the anger is
not quickly pacified; does not get on well with women; is fond of forests and
mountains; is a favourite of his mother. The native is courageous, heroic and
capable of prevailing upon others. Suffers from mental and dental ailments.
7, தனுசு & மீனம்: active and engaged in work; eloquent in speech; religious and
prepared to sacrifice for others; inimical to relations; overpowers enemies;
cannot be brought round by force, but can be prevailed upon by persuasion only.
**********************
1. லக்கினாதிபதி 1ஆம் வீட்டில் அதாவது லக்கினத்தில் இருந்தால்: ஜாதகன் சுதந்திர
மனப்பான்மையுடன் தன்னிச்சையாக வாழ்பவனாக இருப்பான். யார் சொன்னாலும், அவர்கள்
பேச்சைக் கேட்கமாட்டான் தன் எண்ணப்படி, நோக்கப்படி வாழ்பவனாக இருப்பான். ஜாதகன்
தீர்க்க ஆயுளை உடையவனாக இருப்பான். சொத்துக்களை உடையவனாக இருப்பான். பெருமைகள்,
புகழை உடையவனாக வளர்வான். வாழ்க்கையில் ஜீவனம் நல்லமுறையில் நடைபெறும். மகிழ்ச்சி
நிறைந்தவனாக இருப்பான். தெய்வ நம்பிக்கை, தெய்வ வழிபாடுகள் மிகுந்தவனாக இருப்பான்.
உறவினர்களுடன் பிரச்சினைகள் இன்றி ஒற்றுமையுடன் வாழ்வான். தனது ஊரில், அல்லது தனது
மாவட்டத்தில் அல்லது தனது இனத்தில் அல்லது தனது நாட்டில் செல்வாக்கும், புகழும்
பெற்றவனாகத் திகழ்வான். மேற்கூறிய பலன்கள் எல்லாம் லக்கினமும், லக்கினாதிபதியும்
நன்றாக இருந்தால் மட்டுமே. இல்லையென்றால் அவற்றிற்கு நேர் மாறான பலன்களே நடைபெறும்
2. லக்கினாதிபதி 2ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்: ஜாதகன் உயர்ந்த பண்புகள் உள்ள
குடும்பத்தில் பிறந்தவனாக இருப்பான். அவனுடைய குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
வாக்கு வன்மை நிறந்தவனாக இருப்பான். அவன் சொற்கள் எல்லா இடங்களிலும் எடுபடும். தனது
குடும்பத்திற்காக பல தியாகங்களைச் செய்பவனாக இருப்பான் தன் குடும்பத்திற்கான
தன்னுடைய கடமைகளை நிறைவேற்றுபவனாக இருப்பான். செல்வமும், செல்வாக்கும் மிகுந்தவனாக
இருப்பான். மன அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்தவனாக இருப்பான்,
3. லக்கினாதிபதி 3ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்: ஜாதகன் அதீத துணிச்சல்
உள்ளவனாக இருப்பான். அதிர்ஷ்டமுள்ளவனாக இருப்பான். எல்லா நலன்களும் அவனைத் தேடி
வரும். மரியதைக்குரியவனாகவும், புத்திசாலியாகவும் இருப்பான் சிலருக்கு இரண்டு
மனைவிகள் இருப்பார்கள் ஜாதகன் சகோதரர்கள், சகோதரிகளின் அன்பைப் பெற்றவனாக
இருப்பான், அவர்களுடன் ஒற்றுமையாக வாழ்வான். நுண்கலைகளில் தேர்ச்சி பெற்றவனாக
இருப்பான். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழ்பவனாக இருப்பான்.
4. லக்கினாதிபதி 4ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்: ஜாதகன் தன் பெற்றோர்களால்
மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகுவான் அனேக உடன் பிறப்புக்கள் இருக்கும். அழகான
தோற்றத்தை உடையவனாகவும், நற்பண்புகளை உடையவனாகவும் ஜாதகன் இருப்பான் ஜாதகன்
நிலபுன்கள், வீடு வாசல்களைப் பெற்றவனாக இருப்பான். நல்ல குடும்ப உறுப்பினர்களைப்
பெற்றவனாக இருப்பான். ரோட்டி, கப்டா, மக்கான் என்னும் உண்ண உணவு, உடுக்க உடைகள்,
இருக்க இடம் என்னும் அடிப்படைத் தேவைகளுக்குக் குறைவில்லாத வாழ்க்கையைப் பெற்றவனாக
இருப்பான். தாயின் அன்பையும், அரவணைப்பையும் பெற்றவனாக இருப்பான். தாய்வழி
உறவினர்களின் அன்பைப் பெற்றவனாக இருப்பான். கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவனாக
இருப்பான் சுகவாசியாக இருப்பான். வண்டி, வாகனங்களை உடையவனாக இருப்பான். இத்துடன்,
ஜாதகத்தில் 4ஆம் வீட்டிற்கு உரிய கிரகமும் வலிமை பெற்றிருந்தால் மேற்கூரிய பலன்கள்
இரட்டிப்பாகக் கிடைக்கும்.
5. லக்கினாதிபதி 5ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்: ஜாதகன் புத்திர
பாக்கியங்களைப் பெற்றவனாக இருப்பான். அதாவது நிறைய மக்களைப் பெற்றவனாக இருப்பான்.
அதோடு தன்னுடைய குழந்தைகளின் அன்பையும், ஆதரவையும் பெற்றவனாக இருப்பான். ஜாதகன்
பெருந்தன்மை உடையவனாகவும், சேவைமனப்பான்மை உடையவனாகவும் இருப்பான். மொத்தத்தில்
வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் சிலருக்கு அரசியல் செல்வாக்கும்,
ஆட்சியாளர்களின் ஆதரவும் இருக்கும்
6. லக்கினாதிபதி 6ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்: ******** ஜாதகன் நோய் நொடிகள்
நிறைந்து அவதிப்படுபவனாக இருப்பான். எதிரிகள் நிறைந்தவனாக இருப்பான். பல
அவதூறுகளுக்கு ஆளாக நேரிடும் பலவிதங்களில் கடன் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும்.
மொத்தத்தில் மன அமைதி இல்லாத வாழ்க்கை வாழ நேரிடும் லக்கினாதிபதியின் தசை அல்லது
புத்திக் காலங்களில் கடன் மற்றும் நோய்களுக்குத் தீர்வு கிடைக்கும். லக்கினாதிபதி
வலுவாக உள்ளவர்கள் ராணுவத்தில் பணிபுரிந்து சிறப்பைப் பெறுவார்கள் சிலர்
மருத்துவத்துறையில் பணிபுரிந்து பெருமையடைவார்கள்
7. லக்கினாதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்: சிலருக்கு ஒன்றிற்கு
மேற்பட்ட திருமணம் நடைபெறும். சிலர் வாழ்க்கையின் பின் பகுதியில் சந்நியாசியாகி
விடுவார்கள். மற்ற கிரகங்களின் அமைப்பை வைத்து ஜாதகன் செல்வந்தனாக இருப்பான் அல்லது
ஏழையாக இருப்பான். ஜாதகன் 'தான்' என்னும் குணமுடையவனாக இருப்பான். மனைவியால்
சொத்துக்கள் கிடைக்கும். சிலருக்கு மனைவியின் வருமானத்தால் சொத்துக்கள் கிடைக்கும்.
சிலர் பெண்ணாசை மிகுந்தவர்களாக இருப்பார்கள். எப்போதும் பெண்களின் நினைவாகவே
இருப்பார்கள் எந்தத் தொழிலிலும் அக்கறையில்லாமல் இருப்பார்கள். இந்த அமைப்பை
சுபக்கிரகங்கள் பார்த்தால் ஜாதகன் வெளிநாடு சென்று, பெரும்பொருள் ஈட்டி மகிழ்வுடன்
வாழ்வான்.
8. லக்கினாதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்: ஜாதகன் கல்வியில்
சிறந்தவனாக இருப்பான். சூதாட்ட மனப்பான்மை மிகுந்திருக்கும். ஒழுக்கக் குறைவு
ஏற்படும். சிலருக்கு மரணம் – அது வரும் நேரத்தில் அமைதியானதாகவும், ஒரு நொடியில்
ஏற்படுவதாகவும் அமையும். இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் நீண்ட ஆயுளை
உடையவன். ஆனால் வாழ்க்கை சிரமத்துடன் நடக்கும். ஜாதகன் பலரின் மனக்கசப்பிற்கு ஆளாக
நேரிடும். சிலருக்கு உடலில் அங்கக் குறைபாடுகள் இருக்கும் சிலருக்கு குழந்தை
பாக்கியம் இருக்காது. தத்துப் பிள்ளையை எடுத்து வளர்க்க நேரிடும். இந்த அமைப்பை
பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகன் மத்திம ஆயுளை உடையவன். வாழ்க்கையில் வறுமை
ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும் சிலருக்குப் பலவிதங்களில் அவப்பெயர்
9. லக்கினாதிபதி ஒன்பதாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்: பொதுவாக இந்த அமைப்பு
மிகவும் அதிர்ஷ்டகரமானதாகும். ஜாதகன் பலருக்கும் உதவுபவனாக இருப்பான். நல்ல மனைவி,
குழந்தைகள் கிடைக்கும் அமைப்பு இது. இது பாக்கியஸ்தானம் அதை மனதில் கொள்க!
ஜாதகனுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும். இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால்,
ஜாதகனுக்கு நல்ல தந்தை கிடைப்பார். அவரால் ஏற்படும் சகல பாக்கியங்களும்
ஜாதகனுக்குக் கிடைக்கும். முன்னோர் சொத்துக்கள் கிடைக்கும் ஜாதகன் பெரியவர்களை
மதிக்கும் குணம் உடையவனாக இருப்பான் சிறந்த பக்திமானாக விளங்குவான். தர்மத்தைக்
கடைப்பிடிப்பவனாக இருப்பான், நேர்மையாளனாக இருப்பான். வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து
இருக்கும். இந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், மேற்சொன்ன பலன்கள் எதுவும்
இருக்காது.
10. லக்கினாதிபதி பத்தாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்: தொழிலில் அல்லது
வேலையில் பல வெற்றிகளைப் பெறுவதற்கான அமைப்பு இது. பத்தாம் அதிபதிக்கும், லக்கின
அதிபதிக்கும் சம்பந்தப்பட்ட தொழிலைச் ஜாதகன் செய்து அதில் மேன்மையடைவான். இந்த
அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு நல்ல தொழில் அல்லது நல்ல வேலை அமையும்.
கை நிறையச் சம்பாதிப்பான். நற்பெயரையும், செல்வாக்கையும் உடையவனாக இருப்பான்.
தொழிலில் மேன்மை அடைவான். அதிகாரமும், பதவிகளும் தேடிவரும். அரசியல் செல்வாக்கு
அல்லது அரசாங்க செல்வாக்கு இருக்கும். சிலர் தலைமைப் பதவிவரை உயர்வார்கள்.
நிலபுலன்கள், பெரிய வீடு, வண்டி, வாகன வசதிகளுடனான வாழ்க்கை ஏற்படும்.
11. லக்கினாதிபதி பதினொன்றாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்: இந்த அமைப்பை
சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் லாபகரமான தொழிலைச் செய்வான். நற்பெயரும்,
செல்வாக்கும் தேடிவரும். மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு இருக்கும். இந்த அமைப்பை
சுபக்கிரகங்கள் பார்த்தாலும், அல்லது இந்த பதினொன்றாம் இடத்து அதிபதி உச்சம் அல்லது
ஆட்சி பெற்று இருந்தாலும், ஜாதகனுக்கு நீண்ட ஆயுள். ஜாதகனுக்கு, அவனுடைய 2ஆம்
வீட்டினால் ஏற்படும் பயன்களுடன் இந்த அமைப்பும் சேர்ந்து மேலும் பலவிதமான
நன்மைகளைச் செய்யும் Gains; Gains: Gains – அவ்வளவுதான். ஜாதகனுக்குப் பணக்கஷ்டமே
இல்லாத வாழ்க்கை அமையும். இந்த அமைப்பைப் பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு
மேற்கூறிய நன்மைகள் இருக்காது. ஜாதகனுக்குப் பலவிதமான கஷ்டங்கள், நஷ்டங்கள்
உண்டாகும்
12. லக்கினாதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்: எவ்வளவு பணம்
இருந்தாலும், அல்லது வந்தாலும் அது கரைந்து கொண்டே இருக்கும். எட்டாம் வீட்டினால்
ஏற்படும் கஷ்டங்களுடன், இந்த அமைப்பின் கஷ்டங்களும் சேர்ந்து கொண்டு படுத்தி
எடுக்கும். வியாபாரம் செய்தால் லாபமே இருக்காது. நஷ்டம்தான் ஏற்படும். வாழ்க்கையில்
நிறையப் பொருள் இழப்புக்களைச் சந்திக்க நேரிடும். இந்த அமைப்பே சரியில்லாதது.
அதிலும் இந்த அமைப்பைத் தீய கிரகங்கள் பார்த்தால், ஜாதகன் வேளா வேளைக்குச் சரிவர
போஜனம் செய்யாதவனாகவும், நித்திரை இல்லாதவனாகவும், மன அமைதி இல்லாதவனாகவும்
இருப்பான். அலைச்சல் இருக்கும். குடும்பத்தை அடிக்கடி இடம் மாற்றம் அல்லது ஊர்
மாற்றம் செய்ய நேரிடும். திறமையற்றவன், சோம்பேறி என்று அவப்பெயர் கிடைக்கும்
வம்புகளும், வழக்குகளும் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும் சிலர் பொது சேவைகளில் தங்களை
ஈடுபடுத்திக் கொண்டு மன நிறைவு, மன அமைதி பெறுவார்கள்
*****************************
, ஐந்தாம் அதிபதி 1ஆம் வீட்டில்
1ல் இருந்தால்: மிகவும் நல்லது. அதோடு நல்ல சேர்க்கையும், பார்வையும்
பெற்றிருந்தால் தலைமைப் பதவி தேடிவரும். நிறைய வேலை ஆட்கள் இருப்பார்கள்.
அமைச்சராகக் கூட ஆகலாம், நீதிபதியாகவும் ஆகலாம். (அது பத்தாம் இடத்துடனும்
சம்பந்தப்பட்ட தாகையால், நான் ஆணிபிடுங்கும் கம்பெனியில் டீம் லீடராக இருக்கிறேன்.
எனக்கு எப்படி நீதிபதி பதவி தேடி வரும் என்று கேட்க வேண்டாம். அந்த டீம் லீடர் பதவி
கூட தலைமைப் பதவிதானே!) அதே நேரத்தில் 5th lord ஒன்றில் அமர்ந்தும், தீய
கிரகங்களின் பார்வை, அல்லது சேர்க்கை பெற்றிருந்தால் மேலே கூறியவற்றிற்கு எதிரான
பலன்களே நடைபெறும் சராசரி சேர்க்கை என்றால் மிக்சட் ரிசல்ட்!

yogam


1. மேஷம் = சனி, புதன், சுக்கிரன்
2. ரிஷபம் = குரு, சந்திரன்,
3. மிதுனம் = செவ்வாய், குரு, சூரியன்
4. கடகம் = சுக்கிரன், புதன்
5. சிம்மம் = சனி, சுக்கிரன், புதன்
6. கன்னி = செவ்வாய், சந்திரன்
7. துலாம் = குரு, சூரியன், செவ்வாய்
8. விருச்சிகம் = புதன், சுக்கிரன்
9. தனுசு = சுக்கிரன்
10. மகரம் = செவ்வாய், சந்திரன், குரு
11. கும்பம் = சந்திரன், குரு
12. மீனம் = சூரியன், சனி, சுக்கிரன், புதன்
லக்கின அதிபதி லக்கினத்திலேயே இருந்தால் நன்று. உதாரணத்திற்கு நீங்கள் மேஷ
லக்கினக்காரராக இருந்து அதன் அதிபதி செவ்வாய் மேஷத்திலேயே இருந்தால், அது
அவருக்குச் சொந்த வீடு. ஆட்சி வீடு. அது நன்மை பயக்கும். இல்லை அந்த வீட்டை விட்டு
வேறு இடங்களில் அமர்ந்திருந்தால் அதன் பலன் மாறுபடும். அவர் சென்று அமரும் வீடு,
அவருக்குப் பகை வீடு என்றால் பலன்கள் பாதியாகக் குறைந்துவிடும்.
அதேபோல அவர் சென்று அமரும் வீடு, லக்கினத்தில் இருந்து 6ஆம் வீடாகவோ அல்லது 8அம்
வீடாகவோ அல்லது 12ஆம் வீடாகவோ இருந்தால் எதிர்மறையான பலன்களே கிடைக்கும். வாழ்க்கை
போராட்டம் மிகுந்ததாக இருக்கும். எதிர் நீச்சல் போட வேண்டியதிருக்கும்.
அப்படியிருந்தால், பார்த்துவிட்டுக் கவலைப் படாதீர்கள். கன்னத்தில் கையை முட்டுக்
கொடுத்துக்கொண்டு உட்கார்ந்து விடாதீர்கள். அதற்கான நஷ்ட ஈடு வேறு இடங்களில்
வழங்கப்பெற்றிருக்கும்.
ஏனென்றால் யாராக இருந்தாலும் ஜாதகத்தின் மொத்த மதிப்பெண் 337 மட்டுமே.அதை நினைவில்
வையுங்கள். லக்கின நாதன் வேறு இடங்களில் அமர்ந்தாலும், அது லக்கினத்திற்கு
கேந்திரம் அல்லது திரிகோண இடங்களாக இருந்து, அங்கே அமர்பவர் அங்கிருந்து
லக்கினத்தைப் பார்த்தாலும் நன்மையாக இருக்கும்.
லக்கினத்தைப் பகைக் கிரகங்களோ அல்லது நீசக் கிரகங்களோ பார்க்காமலும் லக்கினத்தில்
இல்லாமலும், லக்கினாதிபதியுடன் சேராமல் இருந்தாலும் நன்மை உடையதாக இருக்கும் அதேபோல
லக்கினாதிபதி உச்சம் பெற்றிருந்தாலும் அதிக நன்மையான பலன்கள் கிடைக்கும். அதேபோல
லக்கினம் சுபக் கிரகங்களின் பார்வையில் இருந்தாலும் நன்மைகள் உடையதாக இருக்கும்.
லக்கினத்தை வைத்துதான் ஒரு மனிதனின் குணத்தை, தோற்றத்தை, அவனுடைய ஆளூமையைச் சொல்ல
முடியும். அழகான் தோற்றம், உடற்கட்டு, நல்ல குணம் குறிப்பாக Heroவா? அல்லது
Villainனா? என்பது போன்ற கணிப்புக்களை, பெண்ணாக இருந்தால் நாயகியா அல்லது வில்லியா
என்று தெரிந்து கொள்வதற்கு லக்கினம்தான் ஆதாரம்! அறிவாளியா- முட்டாளா, திறமைசாலியா-
சோம்பேறியா, நல்லவனா- வக்கிரம் பிடித்தவனா, அப்பாவியா – கல்லுளிமங்கனா, சமூகத்தோடு
ஒத்துப் போகக்கூடியவனா அல்லது விதண்டாவாதம் பேசி வீணாய்ப்போகிறவனா என்று
சொவதற்கும், தோற்றத்தில் அரவிந்தசாமியா அல்லது பி.எஸ் வீரப்பாவா. ஓமக்குச்சி
நரசிம்மனா அல்லது பயில்வான் ரங்கநாதனா பெண்ணாக இருந்தால் நயன்தாராவா அல்லது
காந்திமதியா (அவரேதான் 16 வயதினில் படத்தில் மயிலின் அம்மாவாக வருவரே அதே
காந்திமதிதான்) என்று சொல்வதெல்லாம் லக்கினத்தை வைத்துத்தான்
1. லக்கினத்தில் மிகவும் முக்கியம் லக்கினநாதன் என்னும் அந்த வீட்டு அதிபதி (Owner
of the lagna or lagna lord) உதாரணம் சிம்ம லக்கினத்தின் அதிபதி சூரியன்.அவர் எங்கே
போய் உட்கார்ந்திருக்கிறார் என்பது முக்கியம். அவருடைய சிறப்பான அமர்விடம்
லக்கினத்திலிருந்து 5ம் வீடு அல்லது 9ம் வீடு (திரிகோண வீடுகள் எனப்படும்) அதுபோல
4ம் வீடும் 7ம் வீடும் அல்லது 10ம் வீடும் சிறப்பான வீடுகளே (கேந்திரம் எனப்படும்
வீடுகள்
) 2. ஏழாம் வீட்டிலிருந்து லக்கினாதிபதி லக்கினத்தைப் பார்த்தால் மிகவும் சிறப்பு.
180 பாகையிலிருந்து எல்லாகிரகஙகளும் எதிர்வீட்டைப் பார்க்கும். The lagna lord
aspecting the lagna from the 7th place will confer standing power to the native!
3. லக்கினாதிபதி லக்கினத்திலிருந்து 6ம் வீடு, 8ம் வீடு 12ம் வீடு ஆகிய வீடுகளில்
மறைந்து விடக்கூடாது! These places are inimical places (தீய இடங்கள்) அப்படி
அமர்ந்தால் வாழ்க்கை போராட்டமாக அமையும். (உடனே ஜாதகத்தை எடுத்துப்
பார்த்துவிட்டுக் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விடாதீர்கள் – பல
விதிவிலக்குகள் உள்ளன – வரிசையாக அவைகளும் சொல்லித்தரப்படும்) You should not jump
to any conclusion by seeing a single rule. The houses are to be judged by
various factors which will be taught one by one
4. லக்கினாதிபதி 12ல் அமர்ந்தால் (அதாவது விரைய ஸ்தானம் எனப்படும் – house of
lossesல் அமர்ந்தால், ஜாதகன் வாழ்க்கை அவனுக்குப் பயன்படாது. அவனைச் சுற்றியுள்ள
மற்றவர்களுக்கு மட்டுமே பயன் படும்.
5. அதுபோல விரையாதிபதி that is the owner of the 12th house லக்கினத்தில் வந்து
அமர்ந்தால் -உதாரணம் சிம்ம லக்கினத்தில் – அதற்குப் 12ம் வீடான கடகத்தின் அதிபதி
சந்திரன் வந்து அமர்ந்தால் – ஜாதகன் வாழக்கை விரயமாகி விடும். அவனுடைய வாழக்கை
யாருக்கும் பயன்படாது You should not jump to any conclusion by seeing a single
rule. The houses are to be judged by various factors which will be taught one by
one
6. லக்கினாதிபதியும், விரையாதிபதியும் – ஒன்று சேர்ந்து ஜாதகத்தில் எங்கு
அமர்ந்தாலும் அது ஜாதகனுக்குப் பயன் அளிக்காது. Both the owner of the first house
and owner of the 12th associated together in any place in the horoscope will not
confer any auspicious things to the native
7. லக்கினாதிபதி உச்சம் பெறுவது மிகவும் நல்லது. example – சிம்மலக்கின ஜாதகத்தில்
சூரியன் மேஷத்தில் இருப்பது.
8. லக்கினத்தில் குரு இருப்பது மிகவும் நல்லது. It is blessed horoscope
9. அதற்கு நேர் எதிர் லக்கினத்தில் சனி இருப்பது. நல்லதல்ல! இதற்கு மகர லக்கினமும்,
குமப லக்கினமும் விதிவிலக்கு ஏனென்றால் அந்த இரண்டு லக்கினங்களுக்கும் சனி அதிபதி.
10. லக்கினத்தைச் சந்திரன் பார்த்தாலோ (7ம் பார்வை) அல்லது லக்கினத்தில் சந்திரன்
இருந்தாலோ, ஜாதகன் அழகாக இருப்பான் – பெண் என்றால் ஜாதகி அழகாக இருப்பாள்.
11. அதே போல சுக்கிரன் லக்கினத்தில் இருந்தாலும், அல்லது பார்த்தாலும் அழகான
தோற்றத்தை கொடுப்பான் சினிமா நடிகைகளின் ஜாதகத்தில் இந்தக் combination இருக்கும்.
அதனால்தான் அவர்கள் அழகான தோற்றத்தைப் பெற்றவர்களாக இருப்பார்கள் சரி பரிசோதனை
செய்து பார்க்கலாம் என்றால் நடிகர்களின் ஜாதகங்கள் தாராளமாகக் கிடைக்கின்றன்.
நடிகைகளின் ஜாதகங்கள் கிடைப்பதில்லை! வெளியே வராது. வயது தெரிந்துபோய் விடுமே
சாமி:-)))) நடிகைகள் என்றில்லை, பெண்களின் வயதையும் ஆண்களின் வருமானத்தையும்
கண்டுபிடிக்க முடியுமா? அல்லது கேட்பதுதான் நியாயமா?
12. அதே இடத்தில் செவ்வாய் அமர்ந்தால் அல்லது பார்த்தால் அபரிதமான திறமையைக்
கொடுப்பான்
13. எல்லா லக்கினங்களும் சமம். ஆனால் ஒவ்வொன்றிற்கும் ஒரு அதிகப்படியான சிறப்பு
உண்டு. சிம்ம லக்கினம் Heroக்களின் லக்கினம். அந்த லக்கினக்காரர்கள் எல்லாம்
நாயகர்கள்தான் (உதாரணம் – கமல்ஹாசன், ரஜினிகாந்த ஆகிய இருவரின் ஜாதகங்கள்)
சிம்ம லக்கினம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நானும் சிம்ம
லக்கினம்தான்..ஹி.ஹி:-)) திரைத்துறைக்குச் சென்றால்தான் ஹீரோவா? மனதளவில் நானும்
ஹீரோதான்..ஹி.ஹி:-))
14. மகர, கும்ப லக்கினக்காரர்கள் கடின உழைப்பாளிகள். சனீஸ்வரன் அந்த லக்கினங்களின்
அதிபதி என்பதால் அவர்கள் இயற்கையிலே கடும் உழைப்பாளிகள். எடுத்த காரியத்தை
முடிக்காமல் விட மாட்டார்கள்
15. கும்ப லக்கினக்காரர்கள் இயற்கையாகவே மிகவும் நல்லவர்கள். அவர்களை நம்பி எந்தக்
காரியத்திலும் இறங்கலாம். அவர்கள் நிறைகுடம் போன்றவர்கள் அதனால்தான் கும்ப ராசியின்
சின்னமாகக் குடம் வழங்கப் பெற்றுள்ளது. பெண்களுக்கு கும்ப லக்கினம்தான் சிறந்த
லக்கினம். கும்ப லக்கினப் பெண்களை மணந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

16.கன்னி லக்கினக்காரர்கள் மற்ற எல்லா லக்கினக்கார்களையும் சுலபமாக ஈர்த்து
விடக்கூடியவர்கள். They will attract or mix with any people or any Society easily
17.மிதுன லக்கினக்காரர்கள் மிகவும் அழகாக இருப்பார்கள் (உதாரணம் – திரு.ஜெமினி
கணேசன், செல்வி ஜெயலலிதா. திரு.ப. சிதம்பரம் போன்றவர்கள்)
18. கடக லக்கினக்காரர்கள் பெரும்பாலும் அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள்.
உதாரணம் – கலைஞர் மு.க, திருமதி இந்திரா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்றவர்கள்.
அரசியல் இல்லையென்றாலும் தலைமை தாங்கும் திறமையுடையவர்கள். நாட்டமையாக இருப்பவர்கள்
19. ரிஷபம், துலாம் லக்கினக்காரர்கள் கலைத்துறையில் பிரகாசிப்பார்கள் (அதிபதி
சுக்கிரன்). அதுபோல வாழ்க்கையை இயற்கையாகவே அனுபவிக்கக் கூடியவர்கள். ரசனை உணர்வு
மிக்கவர்கள். மெல்லிய உணர்வு மிக்கவர்கள்
20. மேஷம், விருச்சிக லக்கினக்காரர்க்ள் – செவ்வாய் அதிபதி அதனால் போராடிப்
பார்க்கும் மனப்பான்மை உள்ளவர்கள். யாருக்கும், எதற்கும் பயப்பட மாட்டர்கள்.
ராணுவம், போலீஸ் போன்ற துறைகளில் பரிணமிப்பவர்கள் இவர்கள்தான்.
21. தனுசு, மீன் லக்கினக்காரர்கள் – குரு அதிபதியானதால், இயற்கையாகவே சிறந்த
அறிவுடையவர்களாக இருப்பார்கள் (Keen Intelligence) Finance, stock market, Banking,
auditing, teaching, coaching போன்ற துறைகளில் இவர்கள் பரிணமிக்கும் வாய்ப்பு
இயற்கையாகவே இவர்களுக்கு இருக்கும்!
22. லக்கினாதிபதி சிறுவயது வாழ்க்கைக்கும், உடல் நலத்திற்கும் உரியவர், அவர் பலமாக
இருந்தால் சிறுவயது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உடல் நலமும் நன்றாக இருக்கும்
23. அவர் வலுவிழந்து இருந்தால் (உதாரணம் லக்கினாதிபதி சனி அல்லது ராகு அல்லது கேது
போன்ற தீய கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் உடல் நலம் பாதிக்கப்படும்.
24. தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை ஒன்றுக்கு மேற்பட்ட தீய கிரகமானால்
வாழ்க்கை துன்பம் மிகுந்ததாகிவிடும் 25. கடவுள் கருணை மிக்கவர். ஜாதகத்தில்
லக்கினத்தின் மூலம் உள்ள குறைகளுக்கு அவர் நிவர்த்தியையும் கொடுத்துதான் அத்தனை ஜீவ
ராசிகளையும் பிறக்க வைக்கிறார். அதற்கு அதிரடியான சான்று – ஜாதகத்தின் மொத்த
மதிப்பெண் யாராக இருந்தாலும் 337தான்.
எல்லா லக்கினங்களுமே சமம் என்றாலும், சிம்ம லக்கினத்திற்கும் அதற்கு எதிர்வீடான
கும்ப லக்கினத்திற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. அதனால்தான் சிம்ம லக்கினத்திற்கு
அடையாளமாகச் சிங்கத்தையும் கும்ப லக்கினத்திற்கு அடையாளமாக மாவிலை, தேங்காய்,சிறு
செம்பு ஆகியவற்றின் கூடிய கும்பத்தையும் அடையாளமாகக் கொடுத்துள்ளார்கள் சிம்ம
லக்கினத்தின் அதிபதி சூரியன். அதுபோல கும்ப லக்கினத்தின் அதிபதி சனி. ஒன்றுக்கு
ஒன்று எதிர்மறையான குணமுடைய லக்கினங்கள் சிம்ம லக்கினக்காரர்கள் சமூகத்தில் அல்லது
அவர்கள் இருக்கும் துறையில் நாயகர்களாக இருப்பார்கள். (They will be Heroes) சிம்ம
லக்கினம் என்று மட்டுமில்லை சிம்ம ராசிக்காரர்களும் ஹீரோக்கள்தான்.