Friday, June 24, 2011

யோகத்தின் அமைப்பு: பத்தாம் வீட்டில் ராகு, பத்தாம் வீட்டு அதிபதி லக்கினத்தில், லக்கின அதிபதி 9ஆம் வீட்டில் இருந்தால் அது இந்த யோகத்தைக் கொடுக்கும். அதுபோல ஒற்றைப் படை வீடுகளில், அதாவது ஜாதகத்தில் 1,(லக்கினம்),
3, 5,7,9,11 ஆகிய வீடுகளில் எல்லா கிரகங்களும் இருப்பதும் இந்த யோகத்தைக்
கொடுக்கும்.

பலன்: ஜாதகன் நாட்டின் ஒரு பகுதிக்கு நிர்வாகியாகும் நிலைக்கு உயர்வான். அது கிராம அதிகாரி அல்லது

பஞ்சயாத்து ஒன்றியத் தலைவர் பதவியில் இருந்து மாவட்ட ஆட்சியாளர், மாநில ஆளுனர், முதன் மந்திரி பதவி வரைக்கும் மாறுபடலாம். அந்த பதவி வித்தியாசம் ஏற்படுவதற்கு, குறிப்பிட்டுள்ள அந்த வீடுகளின்/வீட்டு அதிபர் களின் அஷ்டகவர்க்கப் பரல்கள், சுயவர்க்கப்பரல்களின் அளவு காரணமாக இருக்கும். ஜாதகன் பொதுவாகப் பலரின் மரியாதைக்கு உரியவனாக விளங்குவான். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உடையவனாக விளங்குவான்.

சிலர் ஜாதகத்தில் மற்ற அம்சங்கள் மாறுபடும்போது, ஜாதகன் ராணுவத்தில் சேர்ந்து நல்ல அந்தஸ்த்தில் பணிபுரிவான்

லக்னம்.


 லக்னம் சூரியனைப் பற்றியது.
 60 நாழிகைகள் கொண்டது   ஒரு நாள்.
2 1/2 நாழிகை என்பது ஒரு மணி   நேரம்
ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள்
ஒரு முஹூர்த்த நேரம் 1 3/4 நாழிகை அல்லது42 நிமிடங்கள்.
60 நாழிகைகள் 12 லக்னங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு லக்னத்திற்கும் பெயரும்,
நாழிகைகளும்  கொடுக்கப்பட்டிருக்கின்றன. பகல் நேரத்தில் 6 லக்னங்களும், இரவு
நேரத்தில் 6 லக்னங்களும் உள்ளன.
மேஷ லக்னம் 4 1/4 நாழிகை.
ரிஷப லக்னம் 4 3/4 நாழிகை.
மிதுன லக்னம் 5 1/4 நாழிகை.
கடக லக்னம் 5 1/2 நாழிகை
சிம்ம லக்னம் 5 1/2 நாழிகை
கன்னி லக்னம் 5 நாழிகை
துலா லக்னம் 5  நாழிகை
விருச்சிக லக்னம் 5 1/4 நாழிகை
தனுர் லக்னம் 5 1/2 நாழிகை
மகர லக்னம் 5 1/2 நாழிகை
கும்ப லக்னம் 4 1/4 நாழிகை
மீன லக்னம் 4 1/4 நாழிகை இவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளன.