Sunday, March 13, 2011


SOME TAMILNADU SPIRITUAL RECOVERY TEMPLES


சில தமிழ்நாட்டு பரிகாரத் திருக்கோவில்கள்

திருப்பூர் அருகே உள்ள திருமுருகன்பூண்டி முருகநாதஸ்வாமி கோவில்,பிரம்மஹத்திதோஷம் நீங்க முருகப்பெருமான் சிவனை 
வழிபட்ட தலம்.இங்குள்ள தீர்த்தம் மனவியாதியைக் குணமாக்கும் 
சக்தியைப் பெற்றது.இன்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் 
திருமுருகன்பூண்டி இறைவனை வழிபட்டு குணமாகி வருகின்றனர்.


கோவைக்கு அருகில் உள்ள அனுபாவி சுப்பிரமணியசுவாமி 
கோவிலில் திரேதாயுகத்தில் (17,50,000 ஆண்டுகளுக்கு முன்பு) 
அனுமன் உருவாக்கிய ஊற்று இருக்கிறது.எந்த கோடைகாலத்திலும் 
வற்றாமல் தண்ணீரைத் தந்துகொண்டு இருக்கிறது.

ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள்,காலபைரவரை வணங்கினால் 
பாதிப்பு குறையும் என்பதுஅனுபவ உண்மை.ஏனெனில்,சனிபகவானின்
 குருவாக இருப்பவர் காலபைரவர்!!!
காலபைரவரை முதன்மைக்கடவுளாகக்கொண்ட கோவில்கள் ஒருசில 
மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளன.
அதில் ஒன்று,ஈரோடு மாவட்டம்,தாராபுரம் அருகில் உள்ள குண்டடம் 
கொங்கு வடுகநாத ஸ்வாமி கோவில் ஆகும்.இங்கு தேய்பிறை அஷ்ட
மிதிதியில் நடபெற்றுவரும் சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் 
பங்கேற்று பயனடைந்து வருகின்றனர்.
பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன்கோயிலில் திருட்டு 
போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர் மிளகாய் அரைத்துப்பூசினால்,
குற்றவாளி உடனடியாகத் தண்டிக்கப்படுவர்.இது ஒவ்வொருமுறையும் நிஜமாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம்,தாழக்கொம்பு சவுந்தரராஜப்பெருமாள் 
கோவிலில் ரதிக்கும்,மன்மதனுக்கும் தனித்தனி சன்னதி இருக்கின்றது.
இங்கு வழிபாடு நடத்தினால் திருமணத்தடை நீங்கி,உடனே திருமண
சம்மந்தம் கிடைக்கும்.
இங்குள்ள சுவர்ண ஆகர்ஷணபைரவரை,கடன்பட்டவர்கள் தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் கடன் தொல்லையிலிருந்து நீங்கிவிடுவார்கள் 
என்பது ஐதீகம் மற்றும் அனுபவ உண்மை.